சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) என்றால் என்ன?

1.     EIA அறிவிக்கை 2006க்கான அறிமுகம்

2.     புதிய அனல் மின் நிலையங்களுக்கான ECயைபெறுதல்

3.     நடப்பில் உள்ள திட்டங்களுக்கான ECயைப் பெறுதல் (விரிவாக்கம்/நவீனமயமாக்கல்/தயாரிப்பு கலவையில் மாற்றம்)

4.     அனல் மின் நிலையங்களை கண்காணித்தல் (ECக்கு பின்னர்)

5.     ECயின் மாற்றத்தக்கத்தன்மை

1. EIA அறிவிக்கையின் அறிமுகம், 2006

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (EIA)  என்பது ரூ. 50  கோடி மற்றும் அதற்கு மேல் முதலீடுகளை உள்ளிடுகிற  மேம்பாட்டு நடவடிக்கைகளின் 39 வகைளுக்கான EPAவின் கீழ் கட்டாயமான ஒன்றாகும்.

பின்வருவனவற்றிற்கு சுற்றுச்சூழல் அனுமதிக்கு (EC) முன்னதாக EIA அறிவிக்கை  செய்வது கட்டாயமானதாகும்:

  • அனைத்து புதிய திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள்
  • நடப்பில் உள்ள திட்டங்களின் விரிவாக்கம் / நவீனமயமாக்கல்
  • அறிவிக்கையின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள நடவடிக்கைகள்

அறிவிக்கைக்கான பட்டியலின் கீழ் பொருள் எண் 1(d) ஆக அனல் மின் நிலையங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது

  • ஒரு அனல் மின் நிலையத்தால் எப்போது  EC பெறப்படவேண்டும்?

1.     ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு முன்னதாக

2.     ஒரு நடப்பு உற்பத்தி ஆலையின் விரிவாக்கம் அல்லது நவீனமயமாக்கலுக்கு முன்னதாக

3.     ஒரு நடப்புத் திட்டத்தின் தயாரிப்பு கலவையில் மாற்றங்களுக்காக

  • ECயை எந்த ஆணையங்கள் வழங்கலாம்?

1.     சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான அமைச்சம் [MoEF]

2.     மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம்  [SEIAA]

EIA  அறிவிக்கை இந்த இரண்டு ஆணையங்களையும் ஒழுங்குமுறை ஆணையங்களாக அழைக்கிறது. அட்டவணையில் வகைப்பிரிவு Aவின் கீழ் வரும் பெரிய திட்டங்களுக்கு, ECயை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் (MoEF) வழங்குகிறது. சிறியத் திட்டங்களுக்கு -  வகைப்பிரிவு B, ஒவ்வொரு மாநிலத்திலும் இயங்கும் மத்திய அரசு ஆணையமான SEIAA, அனுமதியை வழங்குகிறது.

SEIAA

SEIAA என்பது ஒரு மத்திய அரசு ஆணையம் அது மாநில அரசுகளால் நிறுவப்பட்டுள்ளது ஆனால் மத்திய சுற்றுச்சுழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் (MoEF) சார்பாக செயல்படுகிறது.

அமைப்பு மற்றும் செயல்பாடு:

SEIAA மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்:

1.      உறுப்பினர்-செயலாளர் – அந்த மாநில அரசில் பணியாற்றுகிற சுற்றுச்சூழல் சட்டங்கள் குறித்து பரிச்சயமுள்ள ஒரு அதிகாரி

2.     தலைவர் – 3 ஆண்டு பதவிக்காலத்துடன்  EIA செயல்முறைக்கான நிபுணர்

3.     அலுவல் பூர்வமல்லாத ஒரு உறுப்பினர் - 3 ஆண்டு பதவிக்காலத்துடன்  EIA செயல்முறைக்கான நிபுணர்

ஒரு SEIAA ஒரு மாநிலத்தினால் நிறுவப்படவில்லை என்றால், EC தேவைப்படும் அனைத்து திட்டங்களும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தால் கருதப்படும்.

SEIAA வின் அனைத்து முடிவுகளும் ஒரு கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் மற்றும் அது கட்டாயமானதோடு, ஒருமித்த கருத்துடையதாகவும் இருக்கவேண்டும். பெரும்பான்மை முடிவு எடுக்கப்பட்டால், அந்த முடிவுக்கான கருத்துகள் மற்றும் எதிர்வுகள் தெளிவாக பதிவுசெய்யப்பட்டு நிகழ்ச்சிக் குறிப்புகளின் நகல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அனுப்பப்படவேண்டும்.

 

EC வழங்கும் ஆணையம்/நடவடிக்கை

 MoEF

வகைப்பிரிவு A

SEIAA

வகைப்பிரிவு B

நிலக்கரி/ லிக்னைட்/நாப்தா/வாயு அடிப்படையிலான மின் உற்பத்தி

>500 MW

<500 MW

 பெட் கோக் டீசல் மற்றும் பயோமாஸ் தவிர்த்த, சுத்திகரிப்பு ஆலையில் மிச்சமுள்ள எண்ணெய் கழிவு உள்ளிட்ட பிற எரிபொருள்களை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது

>50 MW

5 MW- 49 MW

பயோமாஸ் அல்லது அபாயகரமானதல்லாத நகராட்சி திடக் கழிவை எரிபொருளாகப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது

>20 MW

16 MW – 19 MW

EC வழங்குவதற்காக திட்டங்களை யார் ஆணையங்களுக்கு பரிந்துரைப்பார்கள்?

1.     நிபுணர் ஆய்வுக் குழு (EAC)

2.     மாநில நிபுணர் ஆய்வுக் குழு (SEAC)

EACயின் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மதிப்பீடு செய்யப்படும் திட்டங்களுகான அனுமதியை சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் வழங்குகிறது. அதேபோல, SEACCயின் பரிந்துரைகளின் அடிப்படையில்  SEIAA அனுமதி வழங்குகிறது.  

SEAC:

மாநில அரசுகளின் ஆலோசனையுடன் மத்திய அரசு SEACயை அமைக்கிறது. ஒரு மாநிலத்தில் SEAC அமைக்கப்படவில்லை என்றால், வகைப்பிரிவு Bயின் திட்டங்களுக்கான அ னுமதியை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகமே வழங்குகிறது.

EAC மற்றும் SEACயின் அமைப்பு மற்றும் செயல்பாடு

EAC மற்றும் SEAC 15 உறுப்பினர்கள் வரைக் கொண்டிருக்கலாம், அவர்கள் பின்வரும் துறைகளில் நிபுணர்களாகவோ அல்லது அனுபவமிக்கவர்களாகவோ இருக்கவேண்டும்:

  • சுற்றுச்சூழல் தரம்
  • திட்ட மேலாண்மையில் வெவ்வேறு துறைகள்
  • சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு செயல்முறை
  • இடர் மதிப்பீடு
  • தாவர மற்றும உயிரின மேலாண்மை (உயிர் அறிவியல் நிபுணர்)
  • வனம் மற்றும் வனஉயிர்கள்
  • சுற்றுச்சூழல் பொருளாதாரங்கள் (திட்ட மதிப்பீட்டில் நிபுணருக்கு அனுபவம் இருக்க வேண்டும்)

தலைவர் தனிச்சிறப்பானவராகவும் சுற்றுச்சூழல் கொள்கை நிபுணராக வோ அல்லது  மேலாண்மையில் நிபுணராகவோ அல்லது  சம்பந்தப்பட்ட  மேம்பாட்டுத் துறையில் பொது நிர்வாகத்தில் விரிவான அனுபவம் உள்ள நிபுணராகவோ இருக்க வேண்டும்.

அனுபவமிகுந்த வல்லுனர்களுக்கான தகுதிகள்:

அந்த நபருக்கு குறைந்த பட்சம் :

1.     முதுகலை / முது அறிவியல் பட்டத்திற்கு வழி வகுக்கும் சம்பந்தப்பட்டத் துறைகளில் 5 ஆண்டுகள் முறையான பல்கலைக்கழகப் பயிற்சி, அல்லது

2.     பி.டெக் /பி.இ./பி.ஆர்க் பட்டங்களுக்கு வழிவகுக்கும் துறைகளில் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைப் பயிற்சியுடன் தொழில்முறைப் பயிற்சியில் 4 ஆண்டுகள் முறையான பயிற்சி அல்லது

3.     வேறு ஏதேனும் தொழில்முறைப் பட்டம் பெற்றவர்கள் என்றால் (எ.கா., சட்டம்), 5 ஆண்டுகள் முறையான பல்கலைக்கழகப் பயிற்சியுடன் பரிந்துரைக்கப்பட்ட செயல்முறைப் பயிற்சிகளும் ஒன்றாக சேர்த்து, அல்லது

4.     பரிந்துரைக்கப்பட்ட தொழில்பழகுநர் / தொழில்முறைப் பழகுநர் மற்றும் தொழில்முறை சங்கத்தினால் நடத்தப்படும்   தேர்வுகளில் தேர்ச்சி (எ.கா., பட்டயக் கணக்கர்), அல்லது

5.     ஒரு பல்கலைக்கழகப் பட்டம், அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் முறையான பல்கலைகழக அல்லது   பணி சார்ந்த கல்விக்கழகத்தின் பயிற்சி (எ.கா., எம்பிஏ/ஐஏஎஸ்/ஐஎஃப்எஸ்).

நிபுணர்கள் / அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுனர்களை தேர்ந்தெடுப்பதில், தத்தம் சம்பந்தப்பட்டத் துறைகளில் அவர்கள் ஈட்டியுள்ள அனுபவங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும்.

நிபுணர்களின் தகுதிகள்:

மேலுள்ள தகுதி வகைகளுடன் பின்வருவனவற்றை ஒரு நிபணர் நிறைவு செய்யவேண்டும்:

1.     சம்பந்தப்பட்டத் துறையில் குறைந்தது 15 ஆண்டுகள் கள அனுபவம், அல்லது

2.     சம்பந்தப்பட்டத் துறையில் ஒரு உயர் பட்டம் (எ.கா., பி.எச்டி) மற்றும் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்புடைய அனுபவம்

நிபுணர் 70 ஆண்டுகளுக்கு குறைவானவராக இருக்க வேண்டும். எனினும்,  கொடுக்கப்பட்டத் துறையில் நிபுணர்கள் கிடைக்கவில்லை என்றால், நிபுணர் ஆய்வுக் குழுவின் உறுப்பினரின் அதிகபட்ச வயது 75 ஆண்டுகளாக இருக்கலாம்.

  • தலைவரை உள்ளிட்டு, ஒவ்வொரு உறுப்பினரும் அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கான 2 பதவிக்காலங்களை வகிக்கலாம்
  • மாதாந்திரக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்
  • நிகழ்ச்சிநிரலும் நிகழ்ச்சிக் குறிப்புகளும் குறிக்கப்பட வேண்டும்
  • கூட்டக் குறிப்புகள் 5 வேலை நாட்களுக்குள் இறுதி செய்யப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் வலைதளத்தில் பதிவேற்றப்படவேண்டும்

 

2. புதிய அனல் மின் நிலையங்களுக்கான அனுமதிப் பெறுதல்

அனுமதிக்கான செயல்முறை:

திட்டத்தை முன்மொழிபவர்/விண்ணப்பதாரரால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவில் விண்ணப்பம் சமர்பிக்கப்பட வேண்டும்

  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/ SEIAAவால் பார்வைக்கான விதிகள் வழஙகப்படும்
  • திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரரால் EIA சமர்ப்பித்தல் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன்  (SPCB) பொது ஆலோசனை நடத்துதல்
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம் / SEIAAவால் அனுமதி அளித்தல் / விண்ணப்பம் நிராகரிக்கப்படுதல்

1. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAA வுக்கு விண்ணப்பத்தை திட்ட முன்மொழிபவர் சமர்பித்தல்

  • வாய்ப்புள்ள இடத்தை அடையாளம் கண்ட பிறகு மட்டுமே அனுமதிக்காக திட்டமொழிபவர்/விண்ணபதாரர் அனுமதிக்காக விண்ணப்பிக்கவேண்டும். இந்த விண்ணப்பம் படிவம் 1ல் (Form 1 format) விண்ணப்பிக்க வேண்டும் மற்றும் திட்டத்திற்கான திட்ட செயலாக்க அறிக்கை முன்மொழியப்பட்ட திட்டத்தின் திறன் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கோ அல்லது SEIAAவுக்கோ சமர்ப்பிக்கப்படவேண்டும். படிவம் 1 திட்ட முன்மொழிபவரின் முன்மொழியும் ToRஐக் கொண்டிருக்கும்.
  • அனுமதியைப் பெறுதவற்கு முன்னதாக, விண்ணப்பதாரர் என்று அழைக்கப்படும், திட்டமொழிபவர், சுத்தம் செய்தல் மற்றும்  வேலியிடுதல் அல்லது  தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் தற்காலிக தங்குமிடங்கள் அமைத்தல் தவிர, இடத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்.
  • இந்த நிலையில், SEIAAவுக்கு  செய்யப்பட்ட விண்ணப்பமானது ஆணையத்தால் வகைப்பிரிவு B1 மற்றும B2 ஆக வகைப்படுத்தப்படும்*. இந்த  செயல்முறை ஆராய்தல் என்று அழைக்கப்படும்.
  • B2 திட்டங்களுக்கு EIA தேவைப்படாது.

*மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம் B1 மற்றும் B2வாக திட்டங்களை வகைப்படுத்துவது பற்றி அவ்வப்போது அறிவிக்கைகளை வெளியிடுகிறது. தற்போது, அனைத்து நிலக்கரி, லிக்னைட், நாப்தா மற்றும் வாயு அடிப்படையிலான 5 மெ.வா திறனுள்ள அனல் மின் திட்டங்கள் B1 ஆக வகைப்படுத்தப்பட்டள்ளன மற்றும் அவற்றிற்கு EIA. தேவைப்படுகிறது.

2. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகம்/SEIAA பார்வைக்கான விதிகள் வழங்கல் :

கட்டாயமாக்கப்பட்ட கால வரம்பு – 60 நாட்கள்

1.     விண்ணப்பத்தைப் பெற்றதன் பேரில்,  SEIAA/ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  தேவையான ஆவணங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனவா என்பதை சரி பார்க்கும்.

2.     கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரர் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

3.     விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பேரில், மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சகம் / SEIAA முன்மொழிபவர் / விண்ணப்பதாரரை EAC/SEAC உடன் ஒரு கூட்டத்திற்கு அழைக்கும், அதில் இந்த திட்டம் மதிப்பீடு செய்யப்படும்.

4.     கூட்டத்தில், EIA ஆய்வுகளை  மேற்கொள்ளுவதற்காக அனைத்து சுற்றுச்சூழல் கவலைகளை நிறைவு செய்வதற்காக MoEF/SEIAAயால் ToR வழங்கப்படும். இந்த செயல்முறை ஸ்கோப்பிங் என்று அழைக்கப்படும்.

குறிப்பு:

ToR (Contents of a ToR) வரைவாக்குவதற்காக உறுப்பினர்கள் தள இடத்திற்கு வருகைத் தருவது அவசியம் என்பது, விண்ணப்பத்தின் மதிப்பீட்டின் போது, EAC/ SEACயின் கருத்தாக இருக்குமானால், தள-வருகை மேற்கொள்ளப்பட்டு அதைத்  தொடர்ந்து ToR வழங்கப்படும். இதற்காக, MOEF/SEIAA திட்ட முன்மொழிபவருக்கு/விண்ணப்பதாரருக்கு 7 நாட்கள் முன்னதாக அறிவிக்கை வழங்கப்பட  வேண்டும்,  திட்ட  முன்மொழிபவர் / விண்ணப்பதாரர் ஆய்வுமேற்கொள்வதற்குத் தேவையானவற்றை வழங்க வேண்டும்.

பின்வருவனவற்றின் அடிப்படையில் ToR தீர்மானிக்கப்படுகிறது

  • படிவம் 1
  • திட்ட  முன்மொழிபவர்/ விண்ணப்பதாரரால் முன்மொழியப்படும் ஒரு ToR
  • EAC அல்லது SEAC துணைக் குழுவின் தள வருகை (நடத்தப்பட்டால்)
  • EAC/SEAC யிடம் கிடைக்கப் பெறும் பிற தகவல்கள்

படிவம் 1 கிடைக்கப்பெற்ற 60 நாட்களுக்குள் ToRஐ EAC/SEAC தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், EIA   நோக்கங்களுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்ட ToR ஆக திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரர் முன் மொழிந்த ToR கருதப்படும்.

ஒப்புதளிக்கப்பட்ட ToR சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட SIEAA  வலைதளத்திலும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். கடலோரங்களில் அமைந்திருக்கும் உற்பத்தி நிலையங்களுக்கான ToR தேவைப்படுகிற கூடுதல் ஆய்வுகளுக்கான விவரங்களைக் கொண்டிருக்கும்.

மத்திய சுற்றுச்சூழல்  அமைச்சகம் / SEIAA வினால் EAC/SEACயின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நிலையிலேயே விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். அப்படியானால், இந்த முடிவு, நிராகரிக்கப்படுவதற்கான காரணங்களுடன் விண்ணப்பத்தைப் பெற்ற 60 நாட்களக்குள் திட்ட முன்மொழிபவர்/ விண்ணப்பதாரருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட வேண்டும்.

3. திட்ட முன்மொழிபவர் / விண்ணப்பதாரர் EIA சமர்ப்பித்தல் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்   பொது ஆலோசனை: கட்டயமான காலவரை – 45 நாட்கள்

1.     ToR  பெற்ற பிறகு, ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர் திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரரால் EIA ஆய்வுகள் நடத்துவதற்காகவும் ஒரு வரைவு EIA அறிக்கைத் தயாரிப்பதற்காகவும் ஈடுபடுத்தப்படுவார். (ஆய்வு நடத்துவதற்காக, ToRல், குறிப்பிடப்பட்டுள்ள பருவங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலிருக்கும் என்பதால், இந்த வரைவு குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் எடுத்துக்கொள்ளக்கூடும்.)

2.     வரைவு EIA அறிக்கை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAAவிற்கு திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதே சமயம் திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரரால் பொது ஆலோசனை நடத்துவதற்காக ஒரு கோரிக்கையை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

3.     பொது ஆலேசானை என்பது இரண்டு பாகங்களைக் கொண்டது:

1.     அந்த இடத்தில் அல்லது அதற்கு அருகாமையில் பாதிக்கப்படும் உள்ளூர் மக்களின் குறைகளை உறுதிப்படுத்துவதற்கான ஒரு பொது விசாரணை.

2.     திட்டத்தின் சமூக-சுற்றுச்சூழல் அம்சங்கள் அல்லது நடவடிக்கையில் ஒரு நம்பத்தகுந்த பங்கினைக்கொண்டிருக்கும் சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து  எழுத்துப்பூர்வமான மறுமொழிகள்  பெறப்படுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAA மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் திட்டம் பற்றிய எழுத்துப்பூர்வமான மறுமொழிகளை வரவேற்கவேண்டும்.

பொது ஆலோசனை நடத்தப்படவேண்டும் மற்றும் விசாரணையின் சுருக்கம், பொதுமக்களால் எழுப்பப்ட்ட பிரச்சனைகளின் அறிக்கைகள், மற்றும் விண்ணப்பதாரரின் கருத்துக்கள், கூட்டத்தின் காணொளிப் பதிவுகள் மற்றும் பெறப்பட்ட எழுத்துப்பூர்வமாக மறுமொழிகளை உள்ளடக்கிய -   பொது விசாரணை அறிக்கை  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவுக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் திட்ட  முன்மொழிபவர்/ விண்ணப்பதாரரிடமிருந்து கோரிக்கையைப் பெற்ற 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, பொது ஆலோசனை செயல்முறையில் செயல்திறனுடன் பங்கேற்கவும் பார்க்கவும்

4. EC வழங்கல்/மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம்/ SEIAAவால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது: கட்டாயமான காலவரை – 135 நாட்களாகும்

1.     திட்டத்தை முன்மொழிபவர்/விண்ணப்பதாரர் பொது ஆலோசனை செயல்முறை நடத்தப்பட்ட போது எழுப்ப்பட்ட சமூக – சுற்றுச்சூழல் குறைகளை நிறைவு செய்ய வேண்டும் மற்றும் வரைவு EIA அறிக்கையில் பொருத்தமான மாற்றங்களை செய்ய வேண்டும். திருத்தப்பட்ட ஆவணம் இறுதி EIA அறிக்கை என்று அழைக்கப்படும்.

2.     இறுதி EIA அறிக்கை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு மதிப்பீட்டுக்காக அனுப்பப்படும். (மாற்றாக, திட்ட  முன்மொழிபவர்/விண்ணப்பதாரர் பொது ஆலோசனையின் போது வெளிப்படுத்தப்பட்ட அனைத்து குறைகளைத் தெரிவித்து ஒரு துணை அறிக்கையை சமர்ப்பிக்கலாம். இந்த வரைவு EIA  ஒரு இறுதி EIAவை உண்டாக்கும்.)

      திட்ட  முன்மொழிபவர் பின்வருவனவற்றை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு/SIEAAக்கு சமர்ப்பிப்பார்:

  • இறுதி EIA அறிக்கை [20 வண் பிரதிகள், 1 மென்பிரதி]
  • இறுதி அமைப்புத் திட்டம் [20 பிரதிகள்]
  • திட்ட செயலாக்க அறிக்கை (1 பிரதி)

      திட்டத்தை முன்மொழிபவர் பொது விசாரணை செயல்முறைகளின் வீடியோடேப் அல்லது சிடியையும் சமர்ப்பிக்கலாம் (1 பிரதி)

3.     இந்த ஆவணங்களைப் பெற்ற 30 நாட்களுக்குள்,  மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ToRல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி அவற்றை ஆராய்ந்து, ஏதேனும் போதுமானதற்ற அறிக்கையை  உள்ளடக்கி, EAC/SEACக்கு கவனிப்பு அறிக்கையை மின்னணு முறையிலோ அல்லது மற்ற  வகையிலோ அனுப்பும். அதுனுடன், இறுதி EIAஅறிக்கை, பொது ஆலோசனை அறிக்கை மற்றும் படிவம் 1ம் இணைக்கப்பட்டிருக்கும். முன் மொழிவினை கருதுவதற்கான EAC/SEAC கூட்டத்திற்கான திட்டமிடப்பட்டத் தேதிகளும் குறிப்பிடப்பட வேண்டும்.

4.     கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கும் , திட்டங்கள் பற்றி, தேவைப்பட்டால், மேற்கொண்டு விளக்கங்களை  நேரடியாகவோ அல்லது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ தருவதற்காக ஒரு கடிதம் திட்ட முன்மொழிபவருக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவால் அனுப்பப்படும். EAC/SEAC கூட்டம் பற்றி திட்ட முன்மொழிபவர் குறைந்தது 15 நாட்களுக்கு முன்னதாக  தெரிவிக்கப்பட வேண்டும்.

5.     கோரப்பட்ட ஆவணங்களை பெற்ற 60 நாட்களுக்குள்  விண்ணப்பத்தின் மதிப்பீட்டினை EAC/SEAC அனுப்ப வேண்டும்.  EC வழங்குவதை EAC/SEAC பரிந்துரைத்தால், நிகழ்ச்சிக் குறிப்புகள்  சுற்றுச்சூழலுக்கு குறிப்பான பாதுகாப்புகளையும் நிபந்தனைகளையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். விண்ணப்பம் நிராகரிப்பது பரிந்துரைக்கப்பட்டால், அதற்கான காரணங்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.

6.     EAC/SEAC கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகள் 5   வேலை நாட்களுக்குள் இறுதியாக்கப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவின் வலைதளத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

7.     மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAA திட்ட முன்மொழிபவருக்கு EC வழங்கல் அல்லது விண்ணப்பம் நிராகரிக்கப்படுதல் நிலையினை – EAC/SEACயிடமிருந்து தகவலைப் பெற்ற 45 நாட்களுக்குள்  தெரிவிக்கவேண்டும்.

இந்த காலத்திற்குப் பிறகு, EAC/SEACயின் திட்டத்திற்கு EC வழங்குவது அல்லது நிராகரிப்பதற்கான பரிந்துரைகள் பொது ஆவணங்களாக ஆகிவிடும். எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவின் முடிவு குறிப்பு 7ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட காலவரைக்குள் முன்மொழிபவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றால், EAC/SEACயின் பரிந்துரைகளின் அடிப்படையில் EC வழங்கப்பட்டதாகவோ அல்லது மறுக்கப்பட்டதாகவோ  முன்மொழிபவர் தொடரலாம்.

ECயின் மறுகருதுதல்: 135 நாட்கள்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் /SEIAA  சாதாரணமாக EAC/SEACயின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளும். பரிந்துரைகள் ஏற்கப்படாத பட்சத்தில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAA, அவற்றை ஏற்காததற்கான காரணங்களைத் தெரிவித்து, EAC/SEACயின் முடிவை மீண்டும் கருதுமாறு கோரலாம்.  பரிந்துரைகளைப் பெற்ற 45 நாட்களுக்குள் கோரிக்கை அனுப்பப்படும்.

அதே சமயம், முடிவு பற்றி திட்ட முன்மொழிபவருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம்/SEIAAவின் கணிப்புகளை EAC/SEAC கருத வேண்டும் மற்றும் அதன் கருத்துக்களை 60 நாட்களுக்குள் அளிக்கவேண்டும்.

EAC/SEACயின் கருத்துக்களை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAA  கருத்தில் கொண்டு EC வழங்குவது மீது முடிவெடுக்கவேண்டும். எனினும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முடிவே இறுதியானது, அது அடுத்த 30 நாட்களுக்குள்  திட்ட  முன்மொழிபவருக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.

ECயின்  செல்லுபடியாகும் தன்மை

அனல் மின்நிலையத்திற்கான ECயின் செல்லுபடியாகும் தன்மை உற்பத்தி செயல்பாடுகள் துவங்கிய நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்கானதாகும்.

ECயைப் புதுப்பிப்பதற்கு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவுக்கு  செல்லுபடியாகும் காலத்திற்குள், புதுப்பிக்கப்பட்ட படிவம் 1 உடன் ஒரு விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAA  தேவைப்பட்டால் EAC/SEAC உடன் கலந்தாலோசிக்கலாம்.

ECயை இரத்து செய்தல்

திட்ட முன்மொழிபவர் வேண்டுமென்றே  தகவல்களை மறைக்கிறார் அல்லது பொய்யான அல்லது தவறான தகவல்களை EC பெறுதவற்காக வழங்குகிறார் என்று கண்டறியப்பட்டால் , அதே போல் திட்டம் மோசமான அல்லது எதிர்மறையான சுற்றுச்சூழல் அல்லது சமூகப் பொருளாதார பாதிப்புகளைக் கொண்டிருக்குமானால், EC இரத்து செய்யப்படலாம். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவினால் முன்மொழிபவருடன் ஒரு தனிப்பட்ட விசாரணைக்குப் பிறகு இயற்கை நீதிக் கொள்கைளைப் பின்பற்றி முடிவு  எடுக்கப்படும்.

3. நடப்புத் திட்டங்களுக்காக ஒரு EC பெறும் செயல்முறை (தயாரிப்பு கலவையின் விரிவாக்கம்/நவீனமயமாக்கல்/மாற்றம்)

1.பின்வருவனவற்றிற்கான முன் அனுமதியைக்   கோரும் அனைத்து விண்ணப்பங்களுக்காகவும் ஒரு புதிய படிவம் 1 சமர்ப்பிக்கப்பட வேண்டும்

  • உற்பத்தி நிலைய விரிவாக்கம்
  • EIA அறிக்கையின் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள துவக்க நிலைக்கு அப்பால் உற்பத்தித் திறன் அதிகரிப்புடன் கூடிய நடப்பு உற்பத்தி நிலையத்தின் நவீன மயமாக்கல் *
  • தற்போதை ய உற்பத்தி நிலையத்தின் தயாரிப்பு கலவையில் மாற்றம்

விரிவாக்கதின் அடிப்படையில் SEIAA/மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. விண்ணப்பமானது 60 நாட்களில்  EAC/SEACCயால் கருதப்படும்.

3. தேவையான விடாமுயற்சியுடன் EC/SEAC, EIA  தயாரிப்பு மற்றும்  பொது ஆலோசனையை முடிவு செய்ய வேண்டும். EC வழங்குவதற்காக விண்ணப்பம் அதற்கேற்ப மதிப்பீடு செய்யப்படும்.

“SEIAAவால் EC வழங்கப்பட்ட,  அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கான தொடக்க நிலை, 500 மெ.வா. ஆகும். எனவே, திறனானது 300 மெ.வா. உற்பத்தி நிலையமாக இருந்தால் நவீன மயமாக்கலுக்குப் பின் 500 மெ.வா. ஆக இருக்கும், அதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திலிருந்து அனைத்து EIA செயல்முறை நிலைகளிலும் சுற்றுச்சூழலுக்கான முன்னதான ஒப்புதல்  தேவைப்படும்.”

4. சுற்றுச்சூழல் அனுமதிக்குப் பிந்தைய கண்காணிப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ம் தேதி மற்றும் டிசம்பர் 1ம் தேதி வண் மற்றும் மென் பிரதிகளாக ECயில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப, அரையாண்டுப்படி இணக்க அறிக்கைகளை திட்டத்தின் முன்மொழிபவர்/SEIAA சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்திய இணக்க அறிக்கை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAAவின் வலைதளத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

5. ஒரு ECயின் மாற்றத்தக்கத்தன்மை

ஒரு திட்ட முன் மொழிபவருக்கு ஒரு திட்டத்திற்காக தரப்பட்ட ECயானது திட்டத்தை மேற்கொள்வதற்கு உரிமையுள்ள மற்றொரு நபருக்கு அதன்  செல்லுபடியாகும் காலத்தில் மாற்றத்தக்கதாகும். அவ்வாறானால், இந்த விளைவுக்கான ஒரு விண்ணப்பம் மாற்றித் தருபவர் அல்லது மாற்றிக்கொள்பவர் எழுத்துப்பூர்வமாக மாற்றிக்கொள்பவரால் தரப்பட்ட “ஆட்சேபணையில்லை” சான்றிதழும் சமர்பிக்கப்பட வேண்டும்.

விதிகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் ECயில் நிர்ணயிக்கப்பட்டவாறு நடைமுறையில் அப்படியே இருக்கும். இந்த EAC/SEAC மூலம் இவைத் தொடர்பாக எந்தவிதமான மேற்கொண்டு உறுதிப்படுத்தலும் தேவையில்லை.

சட்டங்கள் மற்றும் விதிகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986  (EPA), எந்தவொரு தொழில்துறையும்,செயல்பாடுகள் அல்லது செயல்முறைகளை மேற்கொள்ளாமல் தடுப்பதற்கு அல்லது குறிப்பிட்ட பாதுகாப்புகளுக்கு உட்பட்டு அனுமதிப்பதற்கான அதிகாரத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்குத் தருகிறது [EPAவின் பிரிவு 3, துணைப் பிரிவு (2)ன், உட்பிரிவு 5]

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிவிக்கை 2006  (EIA அறிவிக்கை) EPAவின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.