நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார தாக்கங்கள்
காற்று, நீர், மண் மற்றும் மக்கள் மீதான பாதிப்பு
- சுவாச கோளாறுகளை ஏற்படுத்தும். வரலாற்று கட்டுமானங்களை பாதிக்கும். பருவநிலை மாற்றங்களை ஏற்படுத்தும்
- நீரின் தரத்தை பாதிக்கிறது மற்றும் இதனால் மனிதர்கள் பயன்படுத்துவதற்கான நீரின் அளவு குறைகிறது
- கடலில் வெந்நீர் விடப்படுவதனால் கடல் வாழ் இனங்கள் கொல்லப்படுகிறது அல்லது இடம் பெயர்கிறது. இது மீன்பிடித்தலை பாதிக்கிறது
- மண்ணின் அமிலத்தன்மை அதிகரிப்பதனால் பயிர் செய்வது குறைந்துவிடும்.
- விவசாயத்திற்கு கிடைக்கும் நிலத்தின் அளவு குறைவதனால் பயிர் செய்வதை வரம்புப்படுத்தும்
- தாவர வளர்ச்சியை பாதிக்கும்
- விவசாயிகள் மற்றும் மீன்பிடிப்பவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
- அபாயகரமான பணி நிலைமைகளின் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கான இடரை அதிகரிக்கும்.
நிலக்கரியை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் நீரானது, நேரடியாக நீர் நிலைகளில் விடப்பட்டால், அது நீரை மாசுப்படுத்தும். இந்த நிலையங்களில் இருந்து வரும் உலை சாம்பல் நிலத்தில் தங்கிவிடும் போது மண்ணை மாசுப்படுத்தும். இந்த நிலையங்களில் இருந்து உமிழப்படும் காற்று சல்ஃபர் டைஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சிறு துகள்கள், ஆவியாகும் பொருட்கள், கார்பன் மோனாக்சைடு, ஆவியாகக்கூடிய கரிமக் கூறுகள் மற்றும் உடல்நலம் மற்றும் நலவாழ்வினை பாதிக்கும் பாதரசம், போன்ற பிற உலோகங்களைக் கொண்டிருக்கின்றன.
பாதிப்புகளின் தன்மைக்கு ஏற்ப நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றன
• நேரடி பாதிப்பு – எ.கா. மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் அல்லது ஓடைகளில் விடப்படும்போது நீர்வாழ் உயிரினங்கள் மீது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
• மறைமுக பாதிப்பு – எ.கா., மின் உற்பத்தி நிலையங்களில்இருந்து வரும் SO2, மண்ணில் SO4ஆக படிந்து விவசாயத்தைப் பாதிக்கிறது.
• திரள் பாதிப்பு - எ.கா., பிராந்தியத்தில் இருக்கும் நடப்பில் உள்ள மற்றும் வரவிருக்கும் திட்டங்களின் அனைத்து உமிழ்வுகளுக்கான கூட்டு பாதிப்பு
• தூண்டப்பட்ட பாதிப்பு – எ.கா., மின் உற்பத்தி நிலையங்கள், நீர், காற்று போன்ற இயற்கை வளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பினால் அந்த பகுதியில் உள்ள நிலங்களின் பயன்பாடு, மக்கள் தொகை போன்ற பல்வேறு துணை பாதிப்புகளை ஏற்படுத்துக்கிறது.
சுற்றுச்சூழல் பாதிப்புகள்
1. காற்று மாசு
ஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திலிருந்து பல்வேறு மாசுப்படுத்திகள் உமிழப்படுகின்றன. அவை சல்ஃபர்டைஆக்சைடு (SO2), கார்பன் மோனாக்சைடு (CO2), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx), மற்றும் ஓஸோன் (O) ஆகியனவாகும். மேலும் இடைநீக்க நுண் துகள்கள் (SPM), ஈயம் மற்றும் மீதேனல்லாத ஹைட்ரோகார்பன்களும் வெளியிடப்படுகின்றன.
எந்தவொரு எரிப்பு செயல்முறைக்கும் NOx உற்பத்தி ஒரு ஆதாரமாக இருக்கிறது. அவை எரிபொருளில் இருக்கும் நைட்ரஜன் மற்றும் காற்றில் இருக்கும் பிராண வாயு எரிவால் உருவாகின்றன. எரிவதன் வெப்பநிலை அதிகரிப்பதால் NOx உருவாவது மேலும் அதிகரிக்கிறது.
மேலும் பெரும்பாலான பசுமைக்குடில் வாயுக்களான கார்பன்டை ஆக்சைடு (CO2) – வளி மண்டலப் பிராண வாயு CO உடன் கலப்பதால் உருவாகிறது மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு (NO ) – வளி மண்டல பிராண வாயுவுடன் NOx கலப்பதால் உருவாகிறது.
அதுபோல, SOx (சல்ஃபர் ஆக்சைடுகள்) எரிபொருளில் உள்ள சல்ஃபரும் காற்றில் உள்ள பிராணவாயுவின் கலவையால் உருவாகிறது. சல்ஃபர் டைஆக்சைடு (SO) என்பது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் பொதுவான மாசுப்படுத்தியாகும். சில நேரங்களில், அதிகப்படியான பிராண வாயு காரணமாக, வளி மண்டலத்தில் உள்ள நீருடன் கலப்பதால் SO உருவாகிறது, அது அமில மழையை விளைவிக்கிறது. நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வரும் SPM முக்கியமாக புகைக்கரி, புகை மற்றும் தூசு துகள்களாக இருக்கின்றன, இவை ஆஸ்துமா மற்றும் சுவாச நோய்களை உண்டாக்கும்.
2. நீர் மாசு
நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில், தண்ணீர் ஆனது நிலக்கரியை கழுவுவதற்கும், வெப்பத்தை உண்டாக்குவதற்கும் உபகரணத்தைக் குளிர்விப்பதற்கும் கொதிகலன் உலையில் நீரை சுழற்சியாக்குவதற்கும் உதவுகிறது. நிலக்கரி சுத்தம் செய்யப்பட்ட நீரில் இருந்து வரும் தூசு நிலத்தடி நீரை மாசுப்படுத்துகிறது. வெந்நீர், குளிர்விக்கப்படாமல் நீர் நிலைகளில் வெளியேற்றப்படுமானால், அது வெப்பநிலையை அதிகரிக்க செய்து, நீர் வாழ் தாவரங்கள் மற்றும் உயிரினங்களையும் பாதிக்கிறது.
3. நிலச்சீரழிவு
நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து சுத்திகரிக்கப்படாத காற்று மற்றும் நீர் மாசுப்படுத்திகள் அருகில் உள்ள பகுதிகளில் தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பாதிப்பதுடன் அவற்றை வாழ்வதற்கு அல்லது வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு உகந்ததல்லாததாக மாற்றுகிறது.
4. ஒலி மாசு
கொதிகலன்கள், சுழலிகள் மற்றும் நொறுக்கிகள் போன்ற உபகரணங்களின் பயன்பாட்டில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான இரைச்சல், உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் மக்களை பாதிக்கிறது.
5. சுகாதார பாதிப்புகள்
இரசாயன மாசுப்படுத்திகள் |
சுகாதார பாதிப்பு |
சல்ஃபர் டைஆக்சைடு |
§ சுவாச மண்டலத்தையும் நுரையீரல் செயல்பாடுகளையும் பாதிக்கிறது |
நைட்ரஸ் ஆக்சைடுகள் |
§ ஆஸ்துமாவை உண்டாக்குகிறது |
நுண் துகள்கள்(PM): |
§ ஆஸ்துமாவை உண்டாக்குகிறது |
அமோனியா |
§ சுவாசப் பிரச்சனைகளை உண்டாக்குகிறது |
ஹைட்ரஜன் குளோரைடு மற்றும் ஃபுளோரைடு |
§ தோல், கண்கள், மூக்கு, தொண்டை, சுவாசப் பாதைகளில் எரிச்சலை உண்டாக்குகிறது |
டயாக்ஸின்கள் மற்றும் ஃபுயூரான்கள் |
§ வயிற்றுப் புற்றுநோய் உண்டாக்குவதற்கான சாத்தியமுள்ளது |
பல்சுழற்சி அரோமாடிக் ஹைட்ரோ கரிமங்கள் |
§ கல்லீரல், சிறுநீரகம் மற்றும் விதைப்பைகளை மோசமாக பாதிக்கிறது |
பாதரசம் |
§ மூளை, நரம்பு மண்டலம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை சேதப்படுத்தலாம் |
ஈயம் |
§ குழந்தைகளின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கலாம் |
ஆண்டிமனி, ஆர்சனிக், கேட்மியம், நிக்கல்,செலினியம், மாங்கனீசு |
§ சாத்தியமுள்ள கார்சினோஜென் விளைவுகள் (நுரையீரல்கள், சிறுநீர்பை, சிறுநீரகம், தோல் புற்றுநோய்கள்) |
ரேடியம் |
§ சாத்தியமுள்ள கார்சினோஜென் விளைவுகள் (நுரையீரல் மற்றும் எலும்பு புற்றுநோய்கள்) |
யுரேனியம் |
§ சாத்தியமுள்ள கார்சினோஜென்கள் (நுரையீரல் மற்றும் நிணநீர் மண்டலம்) |