படிவம் 1
1. அடிப்படை தகவல்
- திட்டத்தின் பெயர்:
- தன்மை:
- திட்டமிடப்பட்டுள்ள திறன்:
- கி.மீ.ல் தூரம் குறிக்கப்பட்டு அருகில் உள்ள சிறுநகரம்/பெருநகரம்/இரயில்வே நிலையம்/விமான நிலையம் :
- கிராம பஞ்சாயத்து/மாவட்ட சபை/நகராட்சி சபை/உள்ளாட்சித் துறை அவற்றின் முகவரி மற்றும் தொடர்பு எண்களுடன்:
- பின்வருவனவற்றின் கீழ் ஒப்புதல் / அனுமதியை உள்ளிடுமானால் அதன் விவரங்கள்:
- வனம் (காப்பு) சட்டம் 1980
- வனஉயிர் (காப்பு) சட்டம் 1972
- CRZ அறிவிக்கை 1991
- ஆய்வு செய்யப்பட்ட மாற்றுத்தளங்கள் ஏதேனும் விவரங்கள், டோப்போ தாள் உடன்:
- இடைத்தொடர்புள்ள திட்டங்கள் மற்றும் இடைத்தொடர்புத் திட்டங்களுக்காக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் விவரங்கள்:
- விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, மற்றும் பதவி:
- தளம் தொடர்பாக அரசு ஆணை/கொள்கை மீதான தகவல் :
- காட்டு நிலம்
- திட்டம்/நிலத்துக்கு ஏதேனும் வழக்குகள் நிலுவையில் இருக்குமானால் அதன் விவரங்கள்
2. நடவடிக்கை விவரங்கள்
- கட்டுமானம்
- வட்டாரத்தில் – நில அமைப்பு, நிலப் பயன்பாடு, நீர் நிலைகளில் மாற்றம் மற்றும் மற்றவற்றில் இயன் மாற்றங்களை உண்டாக்கும் நடவடிக்கைகளை ஈடுபடுத்தும் திட்டத்தின் அல்லது நீக்கம்
- நிலப் பயன்பாட்டில் நிரந்தர அல்லது தற்காலிக மாற்றம்
- நிலப் பயன்பாட்டின் தீவிரம் அதிகரித்திருப்பது (உள்ளூர் நிலப் பயன்பாட்டு திட்டம் தொடர்பாக) உள்ளிட்டு உள்ளடக்கம் அல்லது நில அமைப்பு
- ஏற்கனவே உள்ள நிலத்திற்கான அனுமதி
- தாவரம் மற்றும் கட்டிடங்கள்
- புதிய நிலப்பயன்பாடுகளின் உருவாக்கம்
- கட்டுமானத்திற்கு முந்தை ய விசாரணைகள், ஆழ்துளைக் கிணறுகள், மண் பரிசோதனை மற்றும் மற்றவை
- கட்டுமானப் பணிகள்
- தகர்ப்புப் பணிகள்
- கட்டுமான வேலை அல்லது கட்டுமான தொழிலாளர்கள் மேலே தரை கட்டிடங்கள் கட்டமைப்புகள் வீடுகள் அல்லது நீள்கட்டமைப்புடைய உட்பட அகழ்வுப் பணிகளில் பயன்படுத்தப்படும் தற்காலிக தளங்கள்
- வெட்டி நிரப்புவது அல்லது அகழ்வுகள்
- சுரங்கம், குடைவு உட்பட நிலத்தடிப் பணிகள்
- மீட்டல் வேலைகள்
- தூர்வாரல்
- அயலக கட்டமைப்புகள்
- தயாரிப்பு மற்றும் உற்பத்தி செயல்முறைகள்
- சரக்குகள் அல்லது மூலப்பொருட்களை சேமிப்பதற்கான கட்டிடங்கள்
- திடக்கழிவு அல்லது திரவக் கழிவுகளின் சுத்திகரிப்பு அல்லது அகற்றுதலுக்கான கட்டுமானங்கள்
- இயக்குதல் பணியாளர்களுக்கான நீண்டகால வீட்டுவசதிக்கான கட்டுமானங்கள்
- புதிய சாலை
- கட்டுமானம் அல்லது இயக்குதலின்போது ரயில் அல்லது கப்பல் போக்குவரத்து
- புதிய அல்லது மாற்றியமைக்கப்பட்ட தடங்கள் மற்றும் நிலையங்கள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், முதலியன உள்ளிட்ட புதிய சாலை, ரயில், விமானம் மற்றும் நீர்வழி அல்லது பிற போக்குவரத்து உள்கட்டமைப்பு
- ஏற்கனவே உள்ள போக்குவரத்து தடங்களின் மூடுதல் அல்லது திருப்பிவிடுதல் அல்லது போக்குவரத்து நகர்வில் மாற்றங்களுக்கு வழி வகுக்கும் உள்கட்டமைப்பு
- புதிய அல்லது திருப்பிவிடப்பட்ட செலுத்துத் தடங்கள் அல்லது குழாய் தடங்கள்
- கைப்பற்றுதல்/அணைக்கட்டுதல்/சிறுபாலம் அமைத்தல்
- மீள்வரிசையாக்கல் அல்லது நீர்வழி அல்லது நிலத்தடி நீர்நிறைப் பகுதிகளின் நீர்வள இயல்
- ஓடை கடத்தல்கள்
- நிலம் அல்லது மேற்பரப்பு நீர்களில் இருந்து நீரை வடித்தல் அல்லது மாற்றுதல்
- நீர்நிலைகளில் மாற்றம் அல்லது வடிகால் அல்லது ஓடுநீரை பாதிக்கும் நிலமேற்பரப்பு
பணியாளர் அல்லது கட்டுமானப் பொருள் போக்குவரத்து; இயக்குதல் அல்லது நீக்குதல் நீண்டகால பிரித்தெடுத்தல் அல்லது நீக்குதல் அல்லது மீள்படுத்துப் பணிகள்
- சுற்றுச்சூழலில் தாக்கத்தைக் கொண்டிருக்கும் நீக்குதலின்போதான தொடர்ந்து நடக்கும் செயல்பாடு
- தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஒரு பகுதிக்கான மக்களின் உள்நோக்கிய ஓட்டம்
- அயல் இனங்களின் அறிமுகம்
- பிறப்பிட இனங்களின் இழப்பு அல்லது மரபியல் விரிவு
- ஏதேனும் பிற நடவடிக்கைகள்
3. ஆதாரத் தகவல் மற்றும் தரவினை உள்ளடக்கி இயற்கை வளங்களின் பயன்பாடு
- நிலம் – குறிப்பாக மேம்படுத்தப்படாத அல்லது விவசாய நிலம் – ஹெக்டேர்களில்
- நீர் – எதிர்பார்க்கப்பட்ட ஆதாரம் மற்றும் திறனுள்ள பயனர்கள் – யூனிட்கள் கிலோ லிட்டர்கள்/நாள்
- தாதுக்கள் மெட்ரிக் டன்களில்
- கட்டுமானப் பொருள்- கல், சல்லி, மணல் / மண் – எதிர்பார்க்கப்பட்ட ஆதாரம் – மெட்ரிக் டன்களில்
- காடுகள் மற்றும் மரம் – ஆதாரம் – மெட்ரிக் டன்களில்
- எரிசக்தி – ஆதாரம், திறனுள்ள பயனர்கள் உள்ளிட்ட மின்சாரம் மற்றும் எரிபொருள் –எரிபொருளுக்கான யூனிட் மெட்ரிக் டன்களில் மற்றும் மின்சாரத்திற்கு மெகாவாட்களில்
- ஏதேனும் இயற்கை வளம் (பொருத்தமான நிலையான யூனிட்களைப் பயன்படுத்தவும்)
4. சேமிப்பு, போக்குவரத்து, கையாளுதல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது சூழ்நிலைக்கு ஊறுமிக்க பொருட்களின் தயாரிப்பு
- நோய் நிகழ்வில் மாற்றங்கள்
- நோய் பரப்பு காரணிகள் பாதிப்பு (எ.கா., பூச்சி அல்லது நீர்வழி பரவும் நோய்கள்)
- மக்களின் நலவாழ்வு பாதிப்பு (எ.கா. வாழும் நிலைகளை மாற்றுவதன் மூலம்)
- திட்டத்தினால் பாதிக்கப்படும் மக்களில் பாதிக்கப்படும் குழுக்கள் (எ.கா., மருத்துவமனை நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள், முதலியோர்)
- ஏதேனும் பிற காரணங்கள்
5. கட்டுமானம் / இயக்குதல் / நீக்குதலின் போது திடக்கழிவு உற்பத்தி
- கழிவு
- பெருஞ்சுமை அல்லது சுரங்கக் கழிவு
- நகராட்சி கழிவு (உள்நாட்டு மற்றும் / அல்லது வணிக கழிவுகள்)
- நச்சுக் கழிவுகள் (நச்சுக் கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி)
- மற்ற தொழில்துறை செயல்முறை கழிவு
- உபரி உற்பத்திப் பொருட்கள்
- கழிவுகளை சிகிச்சை இருந்து சாக்கடையை அல்லது பிற கசடு
- கட்டுமான அல்லது இடிப்பு கழிவு
- மிகைப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் அல்லது உபகரணங்கள்
- அசுத்தமான மண் அல்லது மற்ற பொருட்கள்
- விவசாய கழிவு
- மற்ற திட கழிவு
1. மாசுப்படுத்திகள் அல்லது ஏதேனும் அபாயகரமான, நச்சு அல்லது காற்றில் நச்சுமிக்கப் பொருள்களின் வெளியீடு
- நிலையான அல்லது நகரும் ஆதாரங்களில் இருந்த படிவ எரிபொருட்கள் எரிக்கப்படுவதிலிருந்தான உமிழ்வுகள்
- உற்பத்தி செயல்முறைகளில் இருந்தான உமிழ்வுகள்
- சேமிப்பு அல்லது போக்குவரத்து உள்ளிட்ட பொருட்கள் கையாள்வதில் இருந்தான உமிழ்வுகள்
- ஆலை மற்றும் உபகரணம் உள்ளிட்ட கட்டுமான செயல்பாடுகளில் இருந்தான உமிழ்வுகள்
- கட்டுமானப் பொருட்கள், கழிவுநீர் மற்றும் கழிவு உள்ளிட்ட பொருட்களில் இருந்தான தூசு அல்லது வாடை
- கழிவு எரியூட்டுதலில் இருந்தான உமிழ்வுகள்
- திறந்த வெளியில் கழிவு எரிப்பதில் இருந்தான உமிழ்வுகள் (எ.கா., சவுக்குப் பொருட்கள், கட்டுமானக் குப்பைகள்)
- ஏதேனும் பிற ஆதாரங்களில் இருந்தான உமிழ்வுகள்
7. இரைச்சல் மற்றும் அதிர்வு உண்டாக்குதல் மற்றும் ஒளி மற்றும் வெப்பம் உமிழ்வுகள்
- உபகரண இயக்கத்திலிருந்து (எ.கா., இன்ஜின்கள், காற்றோட்ட ஆலை, கிரஷ்கள்)
- தொழிற்சாலை அல்லது அது போன்ற செயல்முறைகளில் இருந்து
- கட்டுமானம் அல்லது இடித்தலில் இருந்து
- வெடித்தல் அல்லது குவித்தலில் இருந்து
- கட்டுமானம் அல்லது இயக்குதல் போக்குவரத்திலிருந்து
- ஒளியூட்டுதல் அல்லது குளிர்வித்தல் அமைப்புகளில் இருந்து
- வேறு ஏதேனும் பிற ஆதாரங்களில் இருந்து
8. நிலம் அல்லது நீர் மாசுப்படுவதற்கான அபாயம்
- நிலம் / சாக்கடைகள் / மேற்பரப்பு நீர்கள் / நிலத்தடி நீர் / கடலோர நீர் / கடலில் விடுவிக்கப்படும் மாசுப்படுத்திகள்
- அபாயகரமான பொருட்களின் கையாளுதல், சேமித்தல் அல்லது சிந்துதலில் இருந்து
- கழிவுநீர் விடுவித்தல் அல்லது பிற கழிவுகளை நீர் அல்லது நிலத்தில் விடுவித்தல் (எதிர்பார்க்கப்பட்ட வகை மற்றும் விடுவிக்கப்படும் இடம்)
- மாசுப்படுத்திகளின் படிவு காற்றில், நிலம் மற்றும் நீரில் உமிழப்படுதலில் இருந்து
- இந்த ஆதாரங்களில் இருந்து சுற்றுச்சூழலில் நீண்டகாலமாக உருவான மாசுப்படுத்திகளில் இருந்து
- பிற ஆதாரங்களில் இருந்து
9. மனித உடல்நலம் அல்லது சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய கட்டுமானம் அல்லது இயக்குதலின் போதான விபத்துகளின் அபாயம்
- வெடிவிபத்துகள், சிந்துதல்கள், தீவிபத்துகள் முதலியவற்றிலிருந்து
- சேமிப்பினை கையாளும் பயன்பாடு அல்லது அபாயகரமான பொருட்களின் தயாரிப்புகளில் இருந்து
- பூகம்பம், வெள்ளம் முதலியன போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தும் இயற்கைப் பேரிடர்களை உள்ளிட்டு, வேறு பிற காரணங்களில் இருந்து
10. சுற்றுச்சூழல் விளைவுகள் அல்லது வட்டாரத்தில் ஒட்டுமொத்த பாதிப்புகளுக்கான சாத்தியத்திற்கு வழி வகுக்கும் காரணிகள்
- ஆதரவளிக்கும் துணை வளர்ச்சிக்கு வழிவகுத்தல் அல்லது சுற்றுச்சூழலில் தாக்கத்தைக் கொண்டிருக்கும் திட்டத்தின் மூலம் தூண்டப்பட்ட மேம்பாடு (எ.கா., ஆதரவு உள்கட்டமைப்பு, சாலைகள், மின் வினியோகம், கழிவு அல்லது கழிவு நீர் சுத்திகரிப்பு முதலியன)
- வீட்டுவசதி மேம்பாடு
- பிரித்தெடுக்கும் தொழில்கள்
- வழங்கல் தொழில்கள் ;
- மற்றவை
- சுற்றுச்சூழலில் தாக்கத்தைக் கொண்டிருக்கக்கூடிய தளத்தின் பிந்தை பயன்பாட்டுக்கு வழி வகுக்கும்
- பிற்காலத்திய மேம்பாட்டுக்காக ஒரு முன்னோடியை அமைக்கும்
- பிற நடப்பில் இருக்கிற அல்லது அதே போன்ற விளைவுகளுடன் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்களில் அருகில் இருப்பதன் காரணமாக ஒட்டுமொத்த விளைவிகளைக் கொண்டிருக்கும்
11. சுற்றுச்சூழல் உணர்திறன்
- சர்வதேச மரபுகளை கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்; அவற்றின் சுற்று சூழல் இயற்கை , கலாச்சார அல்லது பிற தொடர்புடைய மதிப்புக்கான தேசிய அல்லது உள்ளூர் சட்டம்
- சுற்றுச்சூழல் காரணங்களுக்காக முக்கியமான அல்லது உணர்வுள்ள பகுதிகள் – ஈரநிலங்கள், ஓடைகள் அல்லது பிற நீர் நிலைகள், கடலோர மண்டலம், உயிர்கோளங்கள், மலைகள் மற்றும் காடுகள்
- இனப்பெருக்கம், கூடுகட்டுதல், இரைதேடுதல், ஓய்வெடுத்தல், குளிர்காலத்தைக் கழித்தல், புலம் பெயர்தலுக்கான தாவர அல்லது விலங்கினங்களின் பாதுக்காக்கப்பட்ட முக்கியமான அல்லது நுண்ணுர்வுமிக்க இனங்களால் பயன்படுத்தப்படும் பகுதிகள்
- உள்நாடு, கடலோரம், கடல்சார்ந்த மற்றும் நிலத்தடி நீர்கள்
- மாநில, தேசிய எல்லைகள்
- பொழுதுபோக்கு, அல்லது பிற சுற்றுலா புனித யாத்திரைப் பகுதிகளை அணுகுவதற்காக பொதுமக்களால் பயன்படுத்தப்படும் தடங்கள் மற்றும் கட்டிடங்கள்
- பாதுகாப்பு நிறுவல்கள்
- அடர்த்தியான மக்கள்தொகையுள்ள அல்லது உருவாக்கப்பட்டப் பகுதிகள்
- உணர்திறன் உள்ள மனிதால் உருவாக்கப்பட்ட நிலப் பயன்பாடுகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் (எ.கா. மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டிடங்கள், சமூதாயக் கூடங்கள்)
- முக்கியமான, உயர் தரமுள்ள அல்லது அரிய வளங்களைக் கொண்டிருக்கும் பகுதிகள் (நிலத்தடி நீர் வளங்கள், மேற்பரப்பு வளங்கள், வனவியல், விவசாயம், சுற்றுலா, கனிமங்கள்)
- மாசு அல்லது சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஏற்கனவே உட்பட்டுள்ள நடப்பில் உள்ள சட்டப்பூர்வ சுற்றுச்சூழல் தரங்களை விஞ்சியிருக்கிற பகுதிகள்
- தற்போதைய சுற்றுச்சூழல் பிரச்சனைகளை வழங்க செய்யக்கூடிய இயற்கை அபாயத்தினால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் (எ.கா., பூகம்பங்கள், மூழ்குதல், நிலச்சரிவுகள், அரிப்புகள், வெள்ளம் அல்லது மோசமான பருவ நிலைமைகள்)
12. பார்வைக்காக முன்மொழியப்பட்ட விதிகள் (ToR)
இதைப் பின்பற்றி, ஒரு வாக்குமூலம் தெரிவிக்கிறது;
“எனது அறிவு மற்றும் நம்பிக்கைக்கு சிறந்த வகையில் விண்ணப்பத்தில் மற்றும் இணைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ள தரவு மற்றும் தகவல்கள் உண்மையானவை என்று நான் உறுதி கூறுகிறேன் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட தரவு மற்றும் தகவல்களின் எந்தவொரு பகுதியும் பொய்யாக இருக்குமானால் அல்லது எந்த நிலையில் தவறாக வழிநடத்துமானால்; திட்டம் நிராகரிக்கப்படும் என்பதையும், திட்டத்திற்காக கொடுக்கப்பட்டுள்ள அனுமதிகள் எங்களின் சொந்த பொறுப்பிலும் செலவிலும் திரும்பப் பெறப்படும் என்பதை நான் அறிவேன்”
தேதி: விண்ணப்பதாரர் கையொப்பம்
இடம்: பெயர் மற்றும் முழு முகவரியுடன்
சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
குறிப்பு:
CRZ அறிவிக்கை 1991ன் கீழ் ஒப்புதலை ஈடுபடுத்தும் திட்டங்கள் தொடர்பாக, பின்வருவன விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- CRZக்கான குறிப்புடன் (ToR நிலையில்) ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகமையினால் திட்ட நடவடிக்கைகளைக் காட்டும் வரைபடம் ஒரு CRZ எல்லை குறிக்கப்படவேண்டும்
- மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகள் (சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்கப்படுவதற்கு முன்னால்)
தேசியப் பூங்காக்கள், சரணாலயங்கள், உயிர்கோள காப்பகங்கள் மற்றும் வனவிலங்குகளின் புலம்பெயரும் இடைவழிகளில் 10 கிமீ க்குள் அமைந்திருக்கும் திட்டங்கள் தொடர்பாக பின்வருவன விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் -
- முதன்மை வனப் பாதுகாவலரால் அங்கீகரிக்கப்பட்ட இந்த முக்கிய அம்சங்கள் மற்றும் திட்ட இடத்தைக் காட்டும் ஒரு வரைபடம்
- முதன்மை வனப் பாதுகாவலர்
பார்வைக்கான பொதுவான விதிகள்
- தளத்திற்கான நீண்டகால வாய்ப்பினை குறிக்கும் நோக்க ஆவணம் ஏதேனும் இருந்தால் வகுக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- முந்தைய கட்டம் / கட்டங்களின் சுற்றுச்சூழல் மற்றும் CRZ ஒப்புதலுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கான இணக்க நிலை,பொருந்துகிறவாறு, சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள தளத்தின் சமீபத்திய புகைப்படங்களடன் சேர்த்து தொடர்புடைய விவரங்களை குறிக்கிற திட்டத்திற்கான நிறைவேற்று சுருக்கம் வழங்கப்பட வேண்டும்.
- பொது மக்கள் விசாரணையின்போதும் எழுத்துப்பூர்வமான பிரதிநிதித்துவங்களின்போதும் எழுப்பப்பட்ட பிரச்சனைகளுக்கான மறுமொழி (ஏதேனும் இருந்தால், ஒரு கால வரையறைக்குட்பட்ட நடவடிக்கைத் திட்டத்துடன் மற்றும் அதை நிறைவேறநிதிநிலை ஒதுக்கீடுகளுடன், ஒவ்வொரு திட்டமிடப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக ,அட்டவணை வடிவில், வழங்கப்படவேண்டும்.
- சூரிய சக்தி மின்சாரத்தை வாளகத்தில் குறிப்பாக கிடைக்கப்பெறும் கூரைகளில் இருந்தும் பிற கிடைக்கக்கூடிய பகுதிகளிலும் வகுக்கப்பட்டு செயல்படுத்துவதற்கான நிலை அமைச்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- சாம்பல்குளத்திற்கான அமைவிடத்தை உள்ளிட்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட தளத்தின் ஆள்கூறுகள் இடவிளக்க வரைபடத் தாள் (1:50,000 அளவை), ஆலையின் வரையறுக்கப்பட்ட எல்லைகளின் உறுதிப்படுத்தப்பட்ட GPS பதிவுகள் மற்றும் பகுதியின் NRS செயற்கைக்கோள் வரைபடம், சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆலைத்தளம் மற்றும் நீர் நிலை/நல்லா/ஆறின் HFL தொடர்பான சாம்பல் குளம், தளம் அதற்கு அருகாமையில் அமைந்திருந்தால், குறிப்பிடப்பட வேண்டும்.
- ஆலைப் பகுதி, பசுமை வளையத்துக்கான பகுதி, உள்கட்டமைப்பு, சாலைகள் முதலியனவற்றை சுட்டிக்காட்டும் அமைப்புத் திட்டம் வழங்கப்படவேண்டும்,
- திட்டத்திற்கான மனைத்தேவை தெளிவாக்கப்பட வேண்டும் மற்றும் அது அவ்வப்போது CEA வால் குறிப்பட்டதற்கு அதிகமாக இருக்கக்கூடாது. மனைத் தேவைக்கான உருப்படியான பிரிவுகள் மற்றும் திருத்தப்பட்ட அமைப்பு (EACயால் மாற்றியமைக்கப்பட்டவாறு) வழங்கப்பட வேண்டும்.
- வருவாய் பதிவுகளின் படி தற்போதைய நிலப் பயன்பாடு (திட்டமிடப்பட்டத் தளத்திற்கான வில்லங்கங்கள் ஏதுமில்லாமல் தரப்பட வேண்டும். கையகப்படுத்தப்படவேண்டிய நிலத்தின் தகவல்) ஏதேனும் இருந்தால், நிலக்கரி போக்குவரத்து அதோடு வரிசையை உள்ளடக்கி, குழாய்பாதை பதிப்பதற்காக குறிப்பாகத் தெரிவிக்கப்படவேண்டும்.
- நிலம் கையகப்படுத்துதல் மற்றும் R&R திட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கான காலவரையுள்ள நடவடிக்கைத் திட்டம் வகுக்கப்பட்டு EIA அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- வடிகால், பயிர்முறை, நீர்நிலைகள் (ஈரநிலம், ஆற்றின் அமைப்பு, ஓடைகள், நல்லாக்கள், குளங்கள் முதலியன), அருகாமையில் உள்ள கிராமங்கள், சிற்றோடைகள், சதுப்புநிலங்கள், ஆறுகள், நீர்த்தேக்கங்கள் முதலியன செயற்கைகோள் படம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இட விளக்க தாள் உடன் வழங்கப்பட வேண்டும்.
- ஏதேனும் தேசிய பூங்கா, சரணாலயம், யானை/புலிகள் காப்பகம் (நடப்பில் உள்ளதுடன் திட்டமிடப்பட்டுள்ளது), புலம்பெயரும் தடங்கள்/வனஉயிர் இடைவழி, ஏதேனும், 10 கிமீக்குள் திட்டத் தளத்தில் இருந்தால் அது குறிக்கப்படவேண்டும் மற்றும் அந்தப் பகுதியின் சம்பந்தப்பட்ட தலைமை வன பாதுகாவலரால் வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டும்.
- ஆய்வுப் பகுதியின் இடவிளக்கம் இடவிளக்கத்தாளினால் இந்திய சர்வேயின் அளவையில் 1:50,00 மீது, 1,25,000 அளவியல் பெரிய அளவு வரைபடத்தில் குறிக்கப்பட வேண்டும் மற்றும் ஏதேனும் நிரப்புதல் திட்ட தளத்தில் தேவைப்படுமானால் அது குறிப்பாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறானால், நிரப்புதலின் விவரங்கள், நிரப்புதலுக்குத் தேவைப்படும் பொருளின் அளவு, அதன் ஆதாரம், போக்குவரத்து முதலியன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பொதுவாக கிடைக்கப் பெறும் சொத்து வளங்களை அடையாளம் காண்பதை உள்ளிட்டு விரிவான நில்லப் பயன்பாட்டு வகை மீதான ஒரு ஆய்வு நடத்தப்படவேண்டும் மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்கான நடவடிக்கைத் திட்டம் வகுக்கப்படவேண்டும். மேய்ச்சல் நிலத்தை கையகப்படுத்துவது ஈடுபடுத்தப்படுமானால், ஒரு சமஅளவிலான மேய்ச்சல் நிலம்கையகப்படுத்தப்பட்டு மாற்றாக மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் விவரங்கள் திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- திட்டமிடப்பட்டத் தளத்தின் ஒரு கனிமவியல் வரைபடம் (மண்வகையை உள்ளடக்கி) மற்றும் தகவல்கள் (கிடைக்குமானால்) அந்த தளம் பொருளாதார ரீதியாக தாது சுரங்க படிவில் இல்லை என்பதை சமர்ப்பிக்க வேண்டும்.
- 100% புகை சாம்பல் பயன்படுத்தல் திட்ட விவரங்களுக்கான இந்திய அரசின் அறிவிக்கை உறுதியான ஒப்புதல்களுடன் / ஒப்பந்தத் தரப்புகளின் புரிந்துணர்வுடன் மற்றப் பயன்பாடுகள் முதலியனவற்றுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். திட்டமானது அடி சாம்பலின் அகற்றுதல் முறை/இயங்கமைப்புடன் உள்ளடக்கப்பட வேண்டும்.
- அவ்வப்போது, CEAவினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிகளின் படி நீர் தேவைகள் கணக்கிடப்பட வேண்டும், அவை நீர் சமநிலை வரைபடத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நீர் சமநிலைக்கான விவரங்கள் கணக்கிடப்பட்டு மீள் பயன்பாட்டிற்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் கழிவுகளின் மறுசுழற்சி வெளிப்படையாக குறிப்பிடப்பட வேண்டும்.
- நீர் நிலை/நல்லா (ஏதேனும் இருந்தால்) தளத்தினை கடக்குமானால் இயன்ற அளவு அது தொந்தரவு செய்யபடக்கூடாது. ஒரு வேளை ஏதேனும் நல்லா / வடிகால் திருப்பிவிடப் படவேண்டுமானால் திருப்புதல் பகுதியின் இயற்கை வடிகாலை தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். திருப்பிவிடுதலுக்கான விவரங்கள் தரப்படவேண்டும்,அவை சம்பந்தப்பட்ட துறையினால் ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
- ஆறு அமைப்பு/நீரோடைகளின் HFLல் இருந்து ஆலையின் எல்லை குறைந்தபட்சம் 500 மீ தூரம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
- பகுதிக்கான நீர் நிலவியல் ஆய்வு ஒரு மதிப்புமிக்க நிறுவனம் / அமைப்பின் மூலமாக நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர் முறையில் தாக்கத்திற்கான மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட மட்டுப்படுத்தல் நடவடிக்கை தெரிவிக்கப்பட்டு காலவரைப்படியான நடவடிக்கை அதை செயல்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- திட்டமிடப்பட்டுள்ள நீர் எடுத்தல் / சுத்திகரிக்கப்பட்ட நீரை ஆறு/சிற்றோடை/கடல் முதலியவற்றில் வெளியேற்றுவதன் காரணமாக / ஆறு/உப்புநீர்/கடல் மீன்பிடித்தல் உள்ளிட்ட சூழலியல் தாக்கங்கள் மீதான விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டு, EIA அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கடல் சார் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆய்வுக்கான தேவை இருக்குமானால், உள்ளெடுக்கும் இடம் மற்றும வெளிவிடும் இடம் நீர் எடுத்தல் மற்றும் கடலில் வெளியேற்றுவதற்கான நீரின் ஆழத்துடன் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
- நீர் ஆதாரம் மற்றும் அதன் நிலைத்திருக்கும் தன்மை வளமற்ற பருவத்திலும் நீர் எடுத்தலால் எழும் சூழலியல் தாக்கங்களின் விவரங்களுடன் மற்றும் மாநிலங்களுக்கிடையேயான பகிர்மானம் (ஏதேனும் இருந்தால்) கணக்கில் எடுத்துக் கொண்டு அளிக்கப்பட வேண்டும். முன்மொழியப்பட்டத் திட்டத்தின் பிற போட்டியிடும் ஆதாரங்களின் தகவல்கள் கீழ்நிலையாக்குகிறது. தகுதி வாய்ந்த ஆணையத்திலிருந்து வரும் நீரின் அளவுக்கான தேவையான கிடைக்குந்திறன் தொடர்பான பொறுப்பு நீரின் உறுதியான ஒதுக்கீட்டினைத் தெரிவிக்கும் கடிதம் / ஆவணத்துடன் அளிக்கப்பட வேண்டும்.
- ஆலையில் மழைநீர் சேகரிப்பை மேற்கொள்வது மற்றும் அதன் திட்டமிடப்பட்ட பயன்பாட்டுக்கான விரிவான திட்டம் தரப்பட வேண்டும்.
- பூஜ்ஜியம் வெளியீட்டுக்கான செயலாக்கம் கருத்தாக்கம் முக்கியமாக ஆய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் அனைத்து விவரங்களும் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
- திட்டத்தில் COCயின் தெளிவுப்படுத்தல் பிற நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தெரிவிக்கப்பட வேண்டும்.
- சாம்பல் குள நீர் மறுசுழற்சிக்கான திட்டம் மற்றும் அதன் செயல்பாடு சமர்ப்பிக்கப்ப வேண்டும்.
- பதிவுகளின் முறையான பராமரிப்புடன் வழக்கமாக நீரின் தரத்தினைக் கண்காணிப்பதற்கான விரிவானத் திட்டம் வகுக்கப்படவேண்டும். ஆய்வுமுறை மற்றும் கண்காணிப்பு முனைகளை ஆலை மற்றும் வடிகால் இடையே (மேற்பரப்பில் / நிலத்திடி நீரில் பாய்வதற்கான திசையில்) அடையாளம் காண்பதற்கான விவரம் சமர்ப்பிக்கப்படவேண்டும். கண்காணிப்பதற்கான அளபுருக்கள் கனமான உலோகங்களையும் உள்ளடக்குகிறது.
- ஆய்வுப்பகுதிக்கான சமூகப் பொருளாதார ஆய்வு ஆலையின் தளத்திலிருந்து 10 கிலோமீட்டரை உள்ளடக்கி உள்ளூர் சமூகங்களின் வாழ்வாதாரத்தின் பாதிப்பு மீதான விரிவான மதிப்பீடு ஒரு மதிப்புமிக்க நிறுவனம் / முகமையால் நடத்தப்படவேண்டும்.
- திட்டத்தில் இறுதியில் வேலைவாய்ப்புக்கான, திட்டத்திற்குத் தொடர்புடைய, திறன் பயிற்சிக்கான உள்ளூரின் வேலைக்கு அமர்த்தத் தக்க இளைஞர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைத் திட்டம் வகுக்கப்படவேண்டும் மற்றும் திட்டத்தின் கட்டுமானம் மற்றும் இயக்குதல் நிலைகளின் போது எண்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
- பழங்குடியின் மக்கள் தொகையை அந்தப் பகுதி கொண்டிருக்கமனால், பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். திட்ட முன்மொழிபவர் நாட்டின் பல்வேறு சட்டங்களின் கீழ் பழங்குடியினரின் பிரச்சனைகளை அடையாளம் காண வேண்டும்.
- நிதிப்பொறுப்புக்கான நடவடிக்கைப் படியான பிரிவுகளுடன் ஒரு விரிவான CSR திட்டம் தயார் செய்யப்படவேண்டும். தேவை அடிப்டையிலான மதிப்பீட்டு ஆய்வினைக் கருதி CSR கூறுகள் அடையாளம் காணப்படவேண்டும். சமூகத்தின் ஏழ்மையான பிரிவில் உள்ளவர்களின் மேம்பாட்டிற்கு உதவும் நீடித்திருக்கும் வருவாய் உண்டாக்கும் நடவடிக்கைகள், ஒத்துப்போகக்கூடிய அந்த மக்களின் பராம்பரிய திறன்கள் அடையாளம் காணப்படவேண்டும். சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வருவாய் உண்டாக்கும் திட்டங்களுக்கான தனி வரவுசெலவுத் திட்டம் குறிப்பிடப்படவேண்டும்.
- CSR திட்டங்களை வகுக்கும்போது அடையாளம் காணப்பட்டத் திட்டங்களுக்கான உள்அமை கண்காணிப்பு இயங்குமுறை இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும் மற்றும் அந்தப் பகுதியின் அருகாமையில் உள்ள மதிப்புமிக்க அரசாங்க நிறுவனத்தினால் நடத்தப்படும் வருடாந்திர சமூகத் தணிக்கையை நடத்துவதற்கான இயங்குமுறை தயார்படுத்தப்பட வேண்டும். திட்ட முன்மொழிபவர் அவ்வப்போது திட்டத்தினை செயல்படுத்தவதற்கும் அதனை ஏதேனும் அரசாங்கத் திட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைத் திட்டத்தையும் அளிக்கவேண்டும். திட்ட விரிவாக்கங்களின் போது கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட CSR விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
- பொருந்தக்கூடிய R&R திட்டம், வகுக்கப்பட்டு, பாதிக்கப்படக்கூடிய பகுதியில் உள்ள மக்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கான இயங்குமுறை கருத்தில்கொள்ளப்படவேண்டும். திட்டத்தின் நில அமைப்பினை சார்ந்திருக்கிற, அதோடு தங்களுக்கு சொந்த மில்லாத நிலங்களை சார்ந்திருப்பவர்களுக்கான சமூகப்பொருளாதார அடிப்படையிலான விரிவான மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு R&R திட்டம் வகுக்கப்பட வேண்டும்,
- சுற்றுச்சூழலில் தோன்றக்கூடிய உட்பரவும் நோய்களுக்கான தொழில்சார்ந்த உடல்நல மதிப்பீடு மேற்கொள்ளப்படவேண்டும் மற்றும் அதனை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைத் திட்டம் தயார்படுத்தப்பட வேண்டும்.
- உடல்நல அபாயங்கள் தொடர்பான பணி சார்ந்த அடையாளத்தை உள்ளடக்கி பணியாளர்களுக்கான தொழில்சார்ந்த உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் வகுக்கப்படவேண்டும். நிறுவனம் தொழில் சார்ந்த உடல்நலத்தில் பயிற்சிப்பெற்ற முழுநேர தகுதி வாய்ந்த மருத்துவர்களை நியமிக்கவேண்டும், பணியாளர்களுக்கான உடல்நலக் கண்காணிப்பு அவ்வப்போதான இடைவெளிகளில் நடத்தப்பட்டு பதிவுகள் பராமரிக்கப்படவேண்டும். உகந்ததல்லாத பணிச்சூழல்களில் பணியாற்றும் போது ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகளுக்கான பணியாளர்கள் விழிப்புணர்வு திட்டம் மற்றும் தனிப்பட்ட உபகணரங்களின் பயன்பாடுகள் முதலியனவற்றின் பயன்பாடு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும். தேவைப்படும் இடங்களில் அற்புதமான பின்தொடர்தல் நடவடிக்கையுடன் பல்வேறு உடல்நல நடவடிக்கைகளுக்கான தாக்கத்தின் மறுஆய்வு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறைக்கான இடைவெளியில் நடத்தப்படவேண்டும்.
- ஒரு முழுமையான பருவத்திற்கான தளத்திற்கு குறிப்பான வானிலையியல் மற்றும் AAQ தரவு (மழைக்காலத்தைத் தவிர) அதோடு 16.11.2009 தேதியிடப்பட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் அறிவிக்கை சேகரிக்கப்பட்டு கண்காணிக்கும் தேதிகள் பதிவு செய்யப்படவேண்டும். AAQவுக்கு உள்ளிடப்படவேண்டிய பண்புருக்கள் SPM, RSM (PM10, PM2.5), SO2, NOx, Hg மற்றும் O3 (அடிப்டை நிலை) உள்ளடக்கவேண்டும். கண்காணிப்பு மையங்களின் அமைவிடங்கள் தீர்மானிக்கப்பட்டு மேலோங்கிய கீழ்க்காற்று திசை, மக்கள்தொகை மண்டலம், அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் காப்புக் காடுகளை உள்ளிட்டு உணர்திறன் ஏற்பிகளுக்காக கருதப்படவேண்டும். மேல் காற்று மற்றும் அதிகபட்ச அடிப்படை நிலை செறிவு ஏற்படக்கூடிய ஓர் அமைவிடத்திற்கான மேலாதிக்க கீழ்க்காற்று திசை ஒவ்வொன்றிலும் ஒரு கண்காணிப்பு நிலையம் இருக்கவேண்டும்.
- ஆய்வுப் பகுதியில் ஏற்கனவே இருக்கிற மற்றும் திட்டமிடப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் பட்டியலும் தரப்படவேண்டும்.
- அந்தப் பகுதியின் AAQ மீது உமிழ்வுகளின் அனைத்து ஆதாரங்களின் ( போக்குவரத்தினை உள்ளிட்டு) ஒட்டுமொத்த தாக்கம் நன்றாக மதிப்பிடப்பட வேண்டும். பயன்படுத்தப்படும் உரு மாதிரியின் விவரங்கள் மற்றும் உருமாதிரிக்கு பயன்படுத்தப்படும் உள்ளீட்டுத் தரவுகளும் தரப்படவேண்டும். காற்றுத் தர வரையறைகள் திட்ட அமைவிடத்தை, அதன் அருகாமையில் உள்ள வாழிடங்களை, கூர் உணர்வு ஏற்பிகள், ஏதேனும் இருந்தால், அவற்றைக் காட்டும் அமைப்பு வரைபடத்தில் குறிக்கப்படவேண்டும். காற்றுப்படங்களும் அமைவிட வரைபடத்தில் காட்டப்படவேண்டும்.
- நிலக்கரியில் கதிர்வீச்சு மற்றும் கனரக உலோக உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு ஆய்வுக்கூட அறிக்கைகளுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- எரி பொருள் பகுப்பாய்வு வழங்கப்பட்டு, துணை எரிபொருள் விவரங்கள், ஏதேனும் இருந்தால், அதன் அளவு, தரம், சேமிப்பு முதலியன தரப்படவேண்டும்.
- தேவைப்படும் எரிபொருளின் அளவு, அதன் ஆதாரம் மற்றும் பண்புகள், மற்றும் அதன் உறுதிப்படுத்தப்பட் எரிபொருள இணைப்பினை உறுதிப்படுத்துவதற்கான ஆவண சான்றுகள் தரப்பட வேண்டும்.
- திட்டமிடப்பட்டுள்ள ஆலைக்கான ஆதாரத்திலிருந்தான (துறைமுகக் கையாளுதலை உள்ளிட்டு) எரிபொருள் போக்குவரத்து விவரங்கள் மற்றும் அதன் சுற்றுப்புற AAQ மீதான தாக்கம் பொருத்தமாக மதிப்பீடு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும். போக்குவரத்து நீண்ட தூரம் இன்றியமையாததாகிறது என்றால் தளத்திற்கான இரயில் போக்குவரத்து முதலில் மதிப்பிடப்படவேண்டும். ஆதாரத்திலிருந்து வாகனத்தில் ஏற்றுதல் ஒரு கிடங்கு / கன்வேயர் பெல்ட் மூலமாக செய்யப்படுவது விரும்பத்தக்கதாகும்.
- இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி அடிப்படையிலான உத்தேசத் திட்டங்களுக்காக, உள்நாட்டுபோக்குவரத்து மற்றும் சரக்கு வாகனங்கள்/ரயில் நடமாட்டம் சிக்கல்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு விவரங்கள் தரப்படவேண்டும்.
- தூய்மை, எரிபொருள், கழிப்பறைகள், மருத்துவ வசதிகள, கட்டுமான நிலையில் பாதுகாப்பு, முதலியன தொழிலாளர்களுக்கு கட்டும்மானத்தின்போதும் அதோடு இயக்குதல் நிலையில் டிரக் ஓட்டுனர்கள் போன்ற வழக்கமான பணியாளர்களுக்கு போதுமான அளவு வழங்கப்பட்டு விவரங்கள் தரப்பட்ட வேண்டும்.
- காலவரையறைப்படி அதன் செயல்படுத்தல்களுக்கான கூறுகள் அடிப்படையிலான விலையுடன் திட்டம் காரணமான மோசமான பாதிப்புகளை மட்டுப்படுத்துவதற்கான EMP குறிப்பிடப்படவேண்டும்.
- ஒருபேரிடர் மேலாண்மை திட்டம் (DMP) எரிபொருள் சேமிப்பு மற்றும் பயன்படுத்துதல் காரணமாக தீவிபத்து மற்றும்வெடிவிபத்துக்களை உள்ளடக்கி, இடர் மதிப்பீட்டு ஆய்வுடன் மேற்கொள்ளப்படவேண்டும். எந்தநேரத்திலும் சேமிப்புக்கான அதிகபட்ச சரக்கு கணக்கில் எடுக்கப்படவேண்டும். ஒரு விபத்து நிகழுமானால் எந்த திட்டமிடப்பட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்பதை தெளிவாக காட்டும் ஆலை அமைப்பு வரைபடத்தில் இடர் வரையறைகள் குறிக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில், திட்டமிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட வேண்டும். தீவிபத்து அபாயங்களுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் தவிர்க்கப்படாமல் வழங்கப்பட வேண்டும்.
- வகுக்கப்பட்ட DMP சுனாமி / புயல் அலைகள் / பூகம்பங்கள் முதலியன போன்றவற்றிற்கு எதிரான நடவடிக்கைகளை பொருந்துகிற வகையில் உள்ளடக்கவேண்டும். தளத்திலும் தளத்திற்குவெளியேயுமான திட்டத்தை DMP கொண்டிருப்பதையும், பேரிடருக்கான சாத்தியமுள்ள விவரங்களுடன் நிறைவாக இருப்பதையும், வேலைக்காக அடையாளம் காணப்பட்ட ஊழியர்களை குறிப்பாக குறிப்பிடுவதையும் அது உறுதிசெய்யவேண்டும். திட்டத்தின் சிறு பதிப்புரு ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழிகளில் தயாரிக்கப்பட வேண்டும்.
- பொருத்தமான அகலத்தில் பிறப்பிட இனங்களின் பசுமை வளைத்தை உருவாக்குவதற்கான விரிவானத் திட்டத்தை (50 முதல் 100 மீ), குறைந்தது 3 அடுக்குகள் ஆலையின் எல்லையை (சாத்தியமில்லாத பகுதிகள் தவிர) சுற்றி பிரதி ஹெக்டேருக்கு 2000 முதல் 2500 மர அடர்த்தியைக் கொண்டு நல்ல உயிர்வாழ்தல் விகிதத்துடன் சுமார் 80% சமர்ப்பிக்கப்படலாம். NRSA அறிக்கைகளை உள்ளிட்டு புகைப்பட ஆதாரங்கள் அவ்வப்போது சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- பசமை வளையத்திற்கு மேலாக, கார்பன் குறைப்பாக, தரம் குறைக்கப்பட்டக் காடுகளின் அடையாளம் காணப்பட்டத் தொகுதிகளில் நடுதல் மேற்கொள்ளப்படவேண்டும், அது மாவட்ட வனத்துறையின் நெருக்கமான ஆலோசனையுடன் செய்யப்பட வேண்டும். இதை முன்னெடுப்பதற்காக திட்டத்திற்கான திட்ட முன்மொழிபவர் காலவரையுள்ள நடவடிக்கைத் திட்டத்தை நிதி ஒதுக்கீடுடன் வகுக்கவேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் செயல்படுத்தலின் நிலையை சமர்ப்பிக்கவேண்டும்.
- பெருநிறுவன சுற்றுச்சூழல் கொள்கை
- நிறுவனம் தனது இயக்குநர்கள் குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட சுற்றுச்சூழல்கொள்கையைக் கொண்டிருக்கிறதா? அப்படியானால், அது EIAவில் விளக்கப்படலாம்.
- ஏதேனும் வரம்பு மீறல்கள் / விலகல் / சுற்றுச்சூழல் மீறல்கள் அல்லது காட்டு விதிகள் / நிலைமைகளில் கவனம் செலுத்துவதற்கான நிலையான இயக்குதல் செயல்முறை /செயல்பாடுகளை சுற்றுச்சூழல்கொள்கை பரிந்துரைக்கிறதா? அப்படியானால், அது EIAவில் விளக்கப்படலாம்.
- சுற்றுச்சூழல் பிரச்சனைகளை கையாள்வதற்கும் சுற்றுச்சூழல் அனுமதி நிலைமைகளுடன் இணங்குவதை உறுதி செய்வதற்குமான படிநிலை அமைப்பு அல்லது நிர்வாக வரிசை என்ன. இந்த அமைப்பின் விவரங்கள் தரப்படலாம்.
- இணக்கமில்லாமை / சுற்றுச்சூழல் விதி மீறல்களை நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் / அல்லது பங்குதாரர்களுக்கு அல்லது பெரிய அளவிலான பங்கதாரர்களுக்கு தெரிவிப்பதற்கான அமைப்பினை நிறுவனம் கொண்டிருக்கிறதா? இந்த புகார் தெரிவிக்கும் இயங்குமுறை EIA அறிக்கையில் விரிவாகத் தெரிவிக்கப்படவேண்டும்.
- மேலுள்ள விவரங்கள் அனைத்தும் போதுமான வகையில் EIA அறிக்கையில் மற்றும் கமிட்டியின் முன்னிலைப்படுத்துகையில் கொண்டு வரப்படவேண்டும்
- ஏதேனும் நீதிமன்றம், தீர்ப்பாயம் முதலியவற்றில் திட்டத்துடன் தொடர்புடைய ஏதேனும் வழக்குகள் பற்றி விவரங்கள் தவறாமல் தரப்பட வேண்டும்.
கடலோர அனல்மின் நிலையத் திட்டங்களின் கூடுதல் குறிப்புகள்:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொதுவான நிபந்தனைகளுக்குக் கூடுதலாக, பின்வருவன கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும் ( பொருந்துகிற வகையில்):
- ராம்சர் மாநாட்டின் படி ஈரநிலத்திற்கான வரையறை தாழ்வான பகுதிகளில் நிறைவு செய்வதற்காக அடையாளம் காணப்பட வேண்டும் மற்றும் முன்மொழியப்பட்ட தளம் தொடர்பாக தெளிவாகக் குறிக்கப்படவேண்டும்.
- தளமானது சதுப்பு நிலங்கள் அல்லது உப்பங்கழிகளை உள்ளடக்கியோ அல்லது அவற்றிற்கு நெருக்கமாகவோ இருந்தால், இந்த பகுதிகள் தளத்திலிருந்து விலக்கப்பட்டு,திட்டத்தின் எல்லை CRZ கோட்டிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட முகமையிலிருந்தான அங்கீகரிக்கப்பட்ட CRZ வரைபடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- மண் சமன்படுத்தல் அந்தப் பகுதியில் இயற்கை வடிகாலுக்கு எந்தவித தொந்தரவுமின்றி அல்லது குறைந்தபட்ச தொந்தரவுடன் செய்யப்பட வேண்டும். சிறு கால்வாய்கள் (ஏதேனும் இருந்தால்) திருப்பிவிடப்பட வேண்டுமானால், திருப்பிவிடுவதற்கான வடிவம் ஆலைப் பகுதியில் உள்ள கால்வாய்களை மட்டும் வடிப்பதாக இல்லாமல் சுற்றியுள்ளப் பகுதிகளில் வெள்ள நீரை சேகரிப்பதாகவம் இருக்க வேண்டும் மற்றும் அதை சதுப்புநிலப் பகுதிகளில்/சிற்றோடைகளில் நுழையும் பெரும் கால்வாய்களில் வெளியிடுவதாக இருக் கவேண்டும். முக்கிய கால்வாய்கள் மாற்றியமைக்கப்படக் கூடாது ஆனால் கரைகள் வலுவாக்கப்பட்டு தூர்வாரப்படவேண்டும்.
- அந்தப் பகுதியில் இயற்கை வடிகால் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்துவதற்கான ஒரு வகையில், தளங்களில் சமன்படுத்தலுக்கான கூடுதல் மண் இயன்ற அளவு தளத்திலிருந்தே உண்டாக்கப்பட வேண்டும்.
- பெரிய அளிவலான வெள்ள நீரை தக்கவைக்கும் சதுப்புநிலப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கு இடையூறு செய்யாமல் இருக்கவேண்டும்.
- சிற்றோடைகள், கால்வாய் அமைப்புகள், உப்பங்கழிகள், சதுப்பு நிலப் பகுதிகள் மற்றும் கடலில் முறையான சுத்திகரிப்பு இல்லாமல் கழிவு வெளியேற்றப்படக்கூடாது. வடிகால் முதலில் ஒரு பாதுகாப்பு குளத்தில் சுத்திகரிக்கப்பட்டு ( செயலாக்கக்கூடிய இடங்களில்) பிறகு ஆழ்கடலில் (10 முதல் 15 மீ ஆழம்) வெளியேற்றப்பட வேண்டும். அதேபோல, உள்ளெடுப்பதும் மீன் திரட்சியைத் தவிர்ப்பதற்காக ஆழ்கடலில் இருந்து எடுக்க வேண்டும் மற்றும் முகத்துவாரப் பகுதியில் இருந்து எடுக்கப்படக்கூடாது. உப்பு நீக்க ஆலையில் (ஏதேனும் இருந்தால்) இருந்து வரும் உப்பு போதுமான வடிகட்டுதல் இல்லாமல் கடலில் வெளியேற்றப்படக்கூடாது.
- சதுப்புநிலப் பாதுகாப்பு மற்றும் மீள் உருவாக்கத் திட்டம் வகுக்கப்பட்டு, ஆய்வுப் பகுதியில் சதுப்பு நிலங்கள் இருந்தால், காலவரைக்குட்பட்ட செயல்படுத்தலுக்கான நடவடிக்கைத் திட்டம் விவரங்களுடன் குறிப்பிடப்பட வேண்டும்.
- ஒரு பொதுவான பசுமை மானிய நிதி திட்ட முன்மொழிபவர்களால் EMP நிதிநிலையிலிருந்து உருவாக்கப்படவேண்டும். அதில் ஈட்டப்படும் வட்டி அந்த பகுதியின் பசுமையை மேம்படுத்துவதற்கும் நிர்வகிப்பதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.
- பல்வேறு சமூகப் பொருளாதார நிலையில் மீன்பிடித்தல் மீதான தாக்கம் மதிப்பிடப்பட வேண்டும்.
- ஒரு மீனவர்கள் நல நிதி CSR மானியங்களில் இருந்து உருவாக்கப்பட வேண்டும் அது அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாமல் மீன் இறக்கும் தளங்கள் / மீன்பிடி துறைமுகம் / குளிர்பத சேமிப்புக் கிடங்கு போன்றவற்றை உருவாக்குவதற்குமாகும், ஆனால் கடல் கொந்தளிப்பு, வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் புயல் முதலியனவற்றின் போது மீனவர்கள் காணாமல் போவது போன்ற அவசர சூழ்நிலைகளில் நிவாரணம் வழங்கவும் வேண்டும்.
- சுனாமி அவசரகால மேலாண்மைத் திட்டம் தயாரிக்கப்பட்டு கட்டுமானப் பணித் துவங்குவதற்கு முன்னதாக திட்டம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- மண், நிலம் மற்றும் மேற்பரப்பு நீர்கள் (கால்வாய்கள் மற்றும் கிராமத்துக் குளம்) கடல் நீரினால் திட்ட தளத்திலும் அதை சுற்றியுள்ளப் பகுதிகளிலும் எந்த மாசும் ஏற்படக்கூடாது. அதாவது கடலில் வெளியேற்றுவதற்கு முன்னால் வெளியேறும் நீரை சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் பாதுகாப்பு குளத்தில் உட்பூச்சிடுவது போன்ற குழாய்களில் சிந்துவதைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் அவசியமாகும் மற்றும் மேற்பரப்பு RCC கால்வாய்களில் குழாய்களில் வெளிவிழுவது மற்றும் உள்ளெடுப்பது ஏற்கப்பட வேண்டும். இதற்குக் காரணம் திட்டத்தின் எல்லையை சுற்றியுள்ள பகுதிகள் நெற்பயிர் செய்வதற்கான வளமான விவசாய நிலங்களாகும்.
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை
EIA கட்டமைப்பு |
பொருளடக்கங்கள் |
அறிமுகம் |
|
திட்ட விவரணை |
|
சுற்றுச்சூழல் விவரணை |
|
எதிர்பார்க்கப்படுகிற சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் |
|
மாற்றீடுகளின் பகுப்பாய்வு (தொழில்நுட்பம் மற்றும் தளம்) |
ஒவ்வொரு மாற்றீட்டுக்கான விவரங்கள் (சாத்தியமாக்கல் மாற்றீடுகளின்தேவையை குறிக்குமானால்)
|
சுற்றுச்சூழல் கண்காணிப்புத் திட்டம் |
மட்டுப்படுத்தல் நடவடிக்கைகளின் கண்காணிப்பு ஆற்றலின் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளடக்குவன:
|
கூடுதல் ஆய்வுகள் |
|
திட்ட பலன்கள் |
இயற்பியல் மற்றும் சமூக கட்டமைப்பு மேம்பாடுகள் வேலைவாய்ப்பு சாத்தியம் (திறனுள்ளவர்கள்/பகுதி திறனுள்ளவர்கள்/திறனற்றவர்கள்) பிற உறுதியான பலன்கள் |
சுற்றுச்சூழல் செலவு பலன் பகுப்பாய்வு |
சாத்தியமாக்கலின் போது பரிந்துரைக்கப்படுமானால் |
EMP |
மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது மற்றும் அவற்றின் ஆற்றல்களை கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக EIAவின் ஒப்புதலுக்குப் பிறகு நிர்வாக அம்சங்களின் விவரணை |
சுருக்கம் மற்றும் தீர்மானம் (இது EIA அறிக்கையின் சுருக்கத்தை கொண்டிருக்கும்) |
• திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஒட்டுமொத்த நியாயங்கள் • மோசமான விளைவுகளின் மட்டுப்படுத்தலுக்கான விளக்கம் |
ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆலோசகர்களை வெளிப்படுத்தல் |
பின்வருவனவற்றை உள்ளடக்கி ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆலோசகர்களின் விவரங்கள்: பெயர் சுருக்கமான தற்குறிப்பு ஆலோசனையின் தன்மை |
EIA அறிக்கையின் நிறைவேற்றுச் சுருக்கப் பொருளடக்கங்கள்
EIA அறிக்கைக்கான நிறைவேற்றுச் சுருக்கம் என்பது 10 A4 அளவுள்ள பக்கங்களுக்குள் EIA அறிக்கையை சுருக்கப்பெறுவதாகும். அது முழு EIA அறிக்கையின் பின்வரும் அத்தியாங்களை சுருக்கமாக உள்ளடக்குவது அவசியமானதாகும்:
- திட்ட விவரணை
- சுற்றுச்சூழல் விவரணை
- எதிர்பார்க்கப்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்
- சுற்றுச்சூழல் கண்காணிப்புத் திட்டம்
- கூடுதல் ஆய்வுகள்
- திட்டப் பலன்கள்
- சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்