2. பொது ஆலோசனையின் கட்டமைப்பு மற்றும் நோக்கம்
3. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. பொது ஆலோசனை செயல்முறை
பொது ஆலோசனை (PC) என்பது உள்ளூர் சமூகத்தினருக்கும், அனல் மின் உற்பத்தி நிலையம் முன்மொழியப்பட்டுள்ள பிராந்தியத்தின் சுற்றுச்சூழலில் பங்கினைக் கொண்டிருக்கும் அனைவருக்கும், திட்டம் பற்றிய கவலைகள் வெளிப்படுத்துவதற்கும், அது தங்கள் உரிமைகளில் நியாயமான தாக்கத்தைக் கொண்டிருக்குமா என்பது பற்றிய தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்வதற்கும், தற்போது ஒரு சிறந்த வாய்ப்பு கிடைக்கப் பெறுகிற மாபெரும் மேடையாகும். பொது ஆலோசனை செயல்முறையின் வெளிப்பாடு பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை மற்றும் பொது மக்களின் செயல்திறனான பங்களிப்பு ஆகிய இரண்டினையும் சார்ந்திருக்கும். கேள்விகள், கவலைகள், மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு குறித்துக்கொள்ளப்படவேண்டும், அவை சரியாக இருக்குமானால், விண்ணப்பத்தை நிராகரிப்பதற்காக ஒழுங்குமுறை ஆணையங்களால் பயன்படுத்திக்கொள்ளப்படவேண்டும்.
திட்டத்தினை முன்மொழிபவர்/விண்ணப்பதாரர் வரைவு EIAவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அல்லது SEIAAவுக்கு சமர்ப்பித்து அதே சமயம் பொது ஆலோசனையை நடத்துவதற்கான ஒரு கடிதத்தை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு சமர்ப்பித்த பின்னர் பொது ஆலோசனை நடத்தப்படுகிறது.
கடிதம் கிடைத்த 45 நாட்களுக்குள், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொது ஆலோசனை செயல்முறையை நிறைவு செய்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம்/SEIAAவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். கால வரைக்குள் பொது ஆலோசனை செயல்முறையை மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியம் முடிக்கவில்லை என்றால், விசாரணையைநடத்த மற்றொரு முகமையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAA நியமிக்கலாம்.
திட்ட முன்மொழிபவர் /விண்ணப்பதாரர் இந்தக் கருத்துக்களை கவனத்தில் கொண்டு அதற்கேற்ப வரைவு EIAவை திருத்த வேண்டும். ஒழுங்குமுறை ஆணையம் ECயை வழங்குவது/விண்ணப்பத்தை நிராகரிப்பது சமர்பிக்கப்பட்ட இறுதி EIAவின் அடிப்படையில் இருக்கும்.
பொது ஆலோசனை இரண்டு பாகங்களில் இருக்கும்:
1. பொது விசாரணை : அனைத்து அனல் மின் நிலையங்களுக்கும் அவற்றின் திறன் மற்றும் இடத்தைக் கருத்தில் கொள்ளாமல், அரசாங்க அதிகாரிகளால் நடத்தப்பட வேண்டிய ஒரு கட்டாயமான கூட்டமாகும். இங்கே, திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரர் அங்கு குழுமியிருக்கும் மக்களுக்குத் திட்டத்தை விளக்குவார். தனிப்பட்ட வகையிலும் கூட்டாகவும், இந்தத் திட்டம் பற்றி கேள்விகளை கேட்பதற்கும் அச்சம்/கவலைகளை எழுப்புவதற்குமான மன்றமாகும் இது. நடவடிக்கைகள் அதிகாரிகளால் பதிவுசெய்யப்படும்.
2. எழுத்துப்பூர்வமான மறுமொழி: இந்தத் திட்டம் பற்றி பொதுமக்கள் தங்கள் கேள்விகள் மற்றும் கவலைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் எழுதி அனுப்பலாம்.
2. பொது ஆலோசனைக்கான கட்டமைப்பு மற்றும் நோக்கம்
விளம்பரம்
பொது ஆலோசனையை (பொது விசாரணை மற்றும் எழுத்துப்பூர்வமான மறுமொழி) அறிவிக்கும் விளம்பரம் தெளிவாகவும் முறையாகவும் இருக்க வேண்டும்.
விளம்பரங்கள் ஒரு ஆங்கில தினசரியிலும் மாவட்டத்தில் விற்பனையாகும் ஒரு பிராந்திய மொழி தினசரியிலும் இடம் பெற வேண்டும்.
பொது விசாரணை
அறிவிக்கை காலம்
பொது மக்களுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னர் வரவிருக்கும் விசாரணை பற்றி மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தர வேண்டும்.
இடம்
1. பொது விசாரணைக்கான இடம் திட்ட இடத்திற்கு நெருக்கமாக இருக்கவேண்டும். ஒரு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) உத்தரவு என்ன சொல்கிறது என்றால், இயன்றளவு விசாரணைக்கான இடம் திட்ட இடத்திற்கு 1 கி.மீ. தொலைவில் இருக்கவேண்டும். (க்ரிஷ் விக்ஞான் ஆரோக்ய சன்ஸ்தா மற்றும் எதிராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பிறர்)
2. தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் திட்ட இடத்திற்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். [1] உதாரணத்துக்கு, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அருகில் 4 கிமீ தூரத்தில் ஒரு இடம் இருக்கும் போது அதைவிட தூரத்திலிருக்கும் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க முடியாது.
3. திட்ட இடத்திற்கு அந்த இடம் நெருக்கமானதாக இல்லை என்றால், பொதுமக்கள் அந்த இடத்திற்கு வருவதற்கு போக்குவரத்து வசதியை திட்ட முன்மொழிபவர் ஏற்பாடு செய்ய வேண்டும். திட்ட முன்மொழிபவர் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்தாலும் பொது விசாரணை தொலை தூரத்தில் நடத்தப்பட முடியாது .[2]
அரசாங்க அதிகாரிகள் கட்டாயமாக இருக்க வேண்டும்
1. மாவட்ட நீதிபதி/மாவட்ட ஆட்சியர்/துணை ஆணையர் அல்லது கூடுதல் மாவட்ட நீதிபதி பதவிக்கு கீழாக இல்லாத அவரின் பிரதிநிதி
2. மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் பிரதிநிதி
பொதுமக்கள் பங்கேற்பு
1. உள்ளூர் சமூகங்கள் மற்றும் பங்கேற்க விரும்பும் பொது மக்கள்
2. வருகைப்பதிவிற்கான குறைவெண் (quorum) தேவையில்லை
3. அந்த இடத்தில் வந்திருப்பவர்கள் அனைவரின் வருகைப் பதிவினை குறிக்கப்பட வேண்டும். கூட்டத்திற்கு வந்திருப்பவர்கள் அனைவரை பற்றியும் பதிவு செய்ய வேண்டும்.
4. வந்திருக்கும் அதிகாரிகளை பொதுமக்கள் சந்திக்க விரும்பினால் மேடைக்கான அணுகல் அவர்களுக்கு இருக்க வேண்டும். (மேடைப் பகுதி தடுக்கப்படக் கூடாது).
செயல்முறைக ளைப் பதிவு செய்தல்
மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொது மக்கள் விசாரணையை வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நிகழ்ச்சிக் குறிப்புகளை துல்லியமாக பதிவுசெய்ய வேண்டும்.
புகார்கள்
ஆவணங்களில் இருக்கும் திட்டம் பற்றிய ஏதேனும் பிழையான அல்லது மாறிய உண்மை இருந்தால் அல்லது அதன் தாக்கம் கூட்டத்தைத் தொடர்ந்து வழங்கப்படுமானால் அல்லது நிகழச்சிக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டு விசாரணையின் போது வாசிக்கப்படுமானால் பொது மக்கள் விசாரணையின்போது அங்கிருக்கும் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.
எதேனும் செயல்முறை சார்ந்த குறைவு பொதுமக்கள் விசாரணையின் போது இருக்குமானால் அது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAAக்கு புதிய விசாரணைக்கான கோரிக்கையுடன் தெரிவிக்கப்படலாம்.
எழுத்துப்பூர்வமான மறுமொழி
பொது மக்கள் விசாரணைக்காக கொடுக்கப்பட்ட ஒரு மாத அறிக்கை காலத்தின் போது, பொதுமக்களிடமிருந்து மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எழுத்துப்பூர்வமான மறுமொழிகளைப் பெறும்.
மறுமொழிகளைப் பெறுவதற்கான மின்னஞ்சல் மற்றும் தபால் முகவரி பொது ஆலோசனைக்கான மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விளம்பரத்தில் விளம்பரப்படுத்தப்படவேண்டும். இந்த மறுமொழிகள் தொகுக்கப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAAவுக்கான பொது ஆலோசனை அறிக்கையில் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விரைவாக கிடைக்கும் வகைகள் மூலமாக திட்ட முன்மொழிபவர்/விண்ணப்பதாரருக்கான பொது ஆலோசனையின் ஒரு பகுதியாகப் பெறப்படும் மறுமொழிகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்/SEIAA அணுக வேண்டும். பொது மக்கள் விசாரணையின் ஒரு பகுதியாக பெறப்படும் மறுமொழிகள் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சமர்ப்பிக்க வேண்டும், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வலைத்தளம் தவிர, பஞ்சாயத்து, மாவட்ட அலுவலகம், மாவட்ட நீதிபதி மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களிலும் அதைக் கிடைக்கப் பெற செய்ய வேண்டும்.
3.அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. நான் பொது மக்கள் விசாரணையில் கலந்து கொள்ளலாமா மற்றும் எழுத்துப்பூர்வ மறுமொழியை அனுப்பலாமா?
ஆம், உங்களால் முடியும்.
2. நான் முன்மொழியப்பட்ட திட்ட இடத்திற்கு அருகில் வசிக்கவில்லை - இருப்பினும் எனது கவலைகளை நான் பொது மக்கள் விசாரணையின் போது எழுப்பலாமா?
ஆம், உங்களால் முடியும், உங்களின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் செல்லத்தக்கதாக இருக்கும் வரையில்.
3. பொது விசாரணைக் கூட்டத்தில் எழுப்புவதற்கான முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏதுமில்லை. மாறாக, சமூக மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் பற்றிய கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். நான் அதை செய்யலாமா?
ஆம், பொது மக்கள் விசாரணையானது முன்மொழியப்பட்ட திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்கங்களில் கவனம் செலுத்த எண்ணப்பட்டுள்ளது. எனினும், சுற்றுச்சூழல் என்கிற வார்த்தை விரிவாக புரிந்துகொள்ளப்படுகிறது மற்றும் சமூகம் தொடர்பான அதோடு பொருளாதார (வாழ்வாதாரத்தை உள்ளடக்கி) தாக்கங்கள் EIA ஆய்வுகளின் ஒரு பகுதியாக இருக்கும். எனவே, அவைகள் பொது மக்கள் விசாரணையின் போது எழுப்பப்படலாம். சமூக பாதிப்பு மதிப்பீடு மற்றும் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் EIA ஆய்வுகள் ஒரு பகுதியாக இருக்கும் மற்றும் அவை தொடர்பான பிரச்சனைகள் விசாரணையின்போது எழுப்பப்படலாம்.
4. ஒரு திட்டம் பற்றிய எழுத்துப்பூர்வமான மறுமொழிகளை யார் அனுப்பலாம்?
உள்ளூர் சமுதாயங்கள் தவிர, ஆர்வலர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள், திட்டத்தின் சுற்றுச்சூழல் அம்சங்கள் அல்லது நடவடிக்கைகளில் சரியாகத் தோன்றுகிற பங்கினைக் கொண்டிருக்கும் எவரும், எழுத்துப்பூர்வ மறுமொழிகளை அனுப்பலாம்.
5. பொதுமக்கள் விசாரணை இன்றி திட்டத்திற்கு அனுமதி வழஙகப்பட்டிருந்தால் என்ன செய்யப்பட வேண்டும்?
பசுமைத் தீர்ப்பாயத்தில் அனுமதிக்கு எதிராக ஒரு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும். இது அனுமதி பற்றிய தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும், நியாயமான காரணங்கள் இருந்தால் 90 நாட்கள்வரை நீடிக்கப்படக்கூடும்.
6. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் இரண்டு திட்டங்களுக்கான பொது மக்கள் விசாரணை நடத்தப்படலாமா?
இல்லை, ஏப்ரல் 2010ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அலுவலகக் குறிப்பாணையின்படி இது அனுமதிக்கப்பட மாட்டாது.
7. ஒரு பொது மக்கள் விசாரணை ஒத்தி வைக்கப்படலாமா?
ஆம், ஒரு அவசர நிலையிருந்தால் மட்டுமே. மற்றபடி, பொது மக்கள் விசாரணைத் தேதி, நேரம் மற்றும் இடம் மாற்றப்பட முடியாது.
- மாவட்ட நீதிபதி/மாவட்ட ஆட்சியர்/துணை ஆணையரின் பரிந்துரையின்படி மட்டுமே ஒரு விசாரணை ஒத்திவைக்கப்படலாம்.
- விசாரணைக்காக விளம்பரப்படுத்த அதே ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி தினசரிகளில் விளம்பரங்களில் ஒத்திவைத்தல் பற்றி அறிவிக்கப்பட வேண்டும். அது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் அடையாளம் காணப்பட்ட அனைத்து அலுவலகங்களிலும் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
- பொது ஆலோசனைக்கான புதிய தேதி, நேரம் மற்றும் இடம் மாவட்ட நீதிபதி/மாவட்ட ஆட்சியர்/துணை ஆணையர் ஆகியோருடனான ஆலோசனையின் பேரில் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரால் முடிவு செய்து புதிதாகத் தெரிவிக்க முடியும்.
- உள்ளூர் சூழ்நிலைகளின் காரணமாக, பொது மக்கள் விசாரணைக்கான நிர்ணயிக்கப்பட்ட வகையில் நடத்தப்பட முடியாது என்றால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு/SEIAAவுக்கு தெரிவிக்கப்படும், அதை கருதுதலுக்குப் பிறகு, பொது விசாரணையை குறிப்பிட்ட நிகழ்வில் பொது ஆலோசனை உள்ளடக்க வேண்டாமா என்பதை முடிவுசெய்யும்.
- எனினும், ஒரு சமீபத்திய பசுமைத் தீர்ப்பாய உத்தரவானது மக்கள் தீவிரமாகவும் எதிர்ப்பாகவும் இருக்கும் சூழ்நிலைகளில், பொது மக்கள் விசாரணை இரத்து செய்யப்படவேண்டும் மற்றும் முறையான பிரதிநிதித்துவம் செய்வதை உறுதி செய்யப்பட்டப் பிறகு பின்னர் நடத்தலாம் என்றும் தெரிவிக்கிறது.
[1]Jeet Singh Kanwar & Anr. v. Union of India and Ors.(10-2011 (T) )
[2] Krishi Vigyan Arogya Sanstha & Ors. v.MOEF & Ors.(7-2011 (T) ) + Ossie Fernandes & Ors. v. MOEF & Ors. [12-2011 (Ap) ]
[3]http://envfor.nic.in/divisions/iass/Cir/pub_hear_EIA.pdf
[4]http://envfor.nic.in/divisions/iass/Cir/pub_hear_EIA.pdf
7. பொது விசாரணையை ஒத்திவைக்குமாறு மக்கள் கோர முடியுமா?
ஆம், விசாரணையை நடத்துவதில் செயல்முறைக் குறைபாடு இருந்தால் மட்டுமே – அதாவது இடம் வெகு தூரத்தில் இருந்தாலோ அல்லது வரைவு EIA குறிப்பிடப்பட்ட இடத்தில் இல்லாமல் இருத்தல். மாவட்ட நீதிபதி/ஆட்சியர் அல்லது துணை ஆணையரிடம் கூட்டு பிரதிநிதித்துவத்தை மக்கள் செய்யலாம்.
9. பொது மக்கள் விசாரணையில் எத்தனை பேர் பேச வேண்டும் என்பதில் ஏதேனும் விதிகள் உள்ளனவா?
இல்லை, வரம்புகள் ஏதுமில்லை. விசாரணையில் இருக்கும் அனைவருக்கும் தங்கள் கருத்துக்களை கூறுவதற்கான வாய்ப்பு தரப்படவேண்டும்.
10. பொது மக்கள் விசாரணைக்கான நேரத்திற்கு ஏதாவது வரம்பு உள்ளதா?
இல்லை! பொது மக்களுக்கு கேள்விகள் இருக்கும் வரை விசாரணைத் தொடர வேண்டும்.
11. அதிகப்படியாக மாசுப்படிந்துள்ள இடத்தில் ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. ஒரு திட்டத்திற்கான பொது மக்கள் விசாரணையில் அனைத்து மாசுப்படுத்தும் திட்டங்களின்மொத்த பாதிப்புகள் பற்றி நான் கேட்க முடியுமா?
ஆம், நீங்கள் கேட்கலாம்! திட்டப் பகுதியில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் வர விருக்கும் திட்டங்களின் மொத்த பாதிப்புகள் பற்றிய மதிப்பீட்டினை EIA ஆய்வு உள்ளடக்குகிறது. இந்தத் திட்டங்களின் மொத்த பாதிப்புத் தொடர்பான பிரச்சனைகள் பொது மக்கள் விசாரணையின் போது அனுமதிக்கப்பட வேண்டும்.
12. திட்டத்திற்கான இடம் இரண்டு மாநிலங்களின் எல்லையில் இருந்தால், பொது மக்கள் விசாரணை எங்கே நடத்தப்பட வேண்டும்?
அத்தகைய நிகழ்வில், விசாரணை இரண்டு மாநிலங்களின் சம்பந்தப்பட்ட மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
13.பொது மக்கள் விசாரணையை எவ்வாறு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளம்பரப்படுத்தியுள்ளது என்பதை அறிவதற்கான ஏதேனும் வகையுள்ளதா?
ஆம்! இந்த தகவல் பொது மக்கள் விசாரணை அறிக்கையில் கிடைக்கப்பெறும். ஏப்ரல் 2010ல் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ள ஒரு அலுவலகக் குறிப்பாணையில் பொது மக்கள் விசாரணையை உள்ளூர் மக்களுக்கு விசாரணை நேரம், இடம் மற்றும் தேதி பற்றி தெரியப்படுத்துவதற்கான என்ன போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதை மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட வேண்டியது தேவைப்படுகிறது. விசாரணைக்காக பின்பற்ற செயல்முறை போதுமானது என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் சான்றளிக்க வேண்டும். [4]