புதுப்பிக்கக் கூடிய எரிசக்திக்கு மாறுவது

  1. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது

    1.   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள்  

    2.   புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திட்டங்கள்

    3.   புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள் மற்றும் முயற்சிகள்

    4.   மின்சார சட்டம் 2003ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தேசிய மின்சாரக்கொள்கை 2005 மற்றும் தேசிய கட்டணக்கொள்கை  

    5.   புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிக்கும் நிறுவனங்கள்

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (RE) தீர்ந்துபோகாத மற்றும் இயற்கை வளங்களான, சூரியன், காற்று, தாவரங்கள் மற்றும் நீரை, நிலைத்திருக்கும் மற்றும் சுத்தமான எரிசக்திக்காக பயன்படுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரப் பலன்கள் உள்ளடக்குவன:

  2. பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வுகள் இல்லாத எரிசக்தி உற்பத்தி மற்றும் காற்று மாசு குறைப்பது.
  3. இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களை சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான எரிசக்தி பல்வகைப்படுத்தி விரிவாக்குதல்.
  4.  உற்பத்தி, நிறுவல் மற்றும் இன்னும் பலவற்றில் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைகள்

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள்

சூரிய சக்தி வெப்பமாக்க மற்றும் கட்டிடங்களுக்கு ஒளி தர, வெந்நீர், குளிர்வித்தல் மற்றும் பல்வேறு வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யப் பயன்படுத்துகிறது

காற்று சக்தி காற்றில் இருக்கும் சக்தியை மின்சார உற்பத்திக்காகவும், பேட்டரி சார்ஜ் செய்வதற்காகவும், நீரேற்றுவதற்காகவும் மற்றும் தானியங்களை அரைப்பதற்காகவும் பயன்படுத்துகிறது. பல சுழலிகள் நெருக்கமாக ஒரு காற்றுப் பண்ணை உருவாவதற்காக பயன்பாட்டு அளவு கட்டமைப்பு மின் உற்பத்திக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

பயோமாஸ் சக்தி  தாவரங்கள், விவசாய மற்றும் வன எச்சங்கள் மற்றும் நகராட்சி மற்றும் தொழிற்சாலை கழிவுகளில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக கரிமபொருட்களைப் பயன்படுத்துகிறது. உதாரணத்துக்கு, மரக்கட்டை வெப்பம் தருவதற்காக பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீர் சக்தி பாயும் நீரில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. பெரிய மற்றும் சிறிய அளவிலான நீர்மின் உற்பத்தி தொழில்நுட்பங்கள் கிடைக்க பெறுகின்றன.

புவி அனல் சக்தி  பூமியின் வெப்பத்தை எரிசக்திக்கான ஆதாரமாக பயன்படுத்துகிறது. புவி அனல் சக்தி ஆதாரங்கள் ஆழமற்ற நிலத்திலிருந்து வெந்நீர் மற்றும் பூமியின்மேற்பரப்புக்கு அடியில் காணப்படும் வெப்பான பாறைகளில் காணப்படுகிறது.

கடல் சக்தி இரண்டு வகையான சக்தியை உற்பத்திசெய்கிறது: சூரியனின்  வெப்பத்திலிருந்து அனல் சக்தி மற்றும் கடல்மட்டங்கள் மற்றும் அலைகளில் இருந்து இயந்திர சக்தி. பூமியின் மேற்பரப்பு 70% கடலால் சூழப்பட்டு, அதனை உலகின் மாபெரும் சூரிய சக்தி சேகரிப்பான்களாக ஆக்குகிறது. சூரிய ஒளி கடலின் மேற்பரப்பினை நீரின் ஆழத்தைக் காட்டிலும் அதிக வெப்பமாக்குகிறது மற்றும் இந்த வெப்பநிலை மாறுபாடு அனல் சக்தியை உருவாக்குகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள்

(i) சிறிய அளவு

இந்த RE  அமைப்புகள் மின்சாரம் பயன்படுத்தப்படுகிற இடங்களில் இருக்கும் (எ.கா.) கட்டிடங்களின் கூரைகள். சிறு அளவிலான RE தொழில்நுட்பங்கள் ஓரிடத்திற்கானதாகவும் பரவலாக்கப்பட்டதாகவும் இருக்கின்றன (அதாவது, ஒரு அடுக்ககம், தொழிற்சாலை, பொழுதுபோக்குக் மையம் அல்லது உள்ளூர் சமூகம் போன்ற உள்ளூர் தேவைகளை நிறைவு செய்கிற மின்சாரம் அல்லது குளிர்வித்தல்/சூடாக்குதல்) வழங்குவது. சிறு அளவிலான RE உற்பத்தி அமைப்புகள் (1) ஒரு மின்சாரக் கட்டமைப்பில் பதிக்கப்பட்டவையாகவோ (அதாவது இணைக்கபட்டிருக்கலாம்), மாவட்ட சூடாக்குதல் மற்றும் / அல்லது குளிர்விக்கும் கட்டமைப்பில் இணைக்கபட்டோ அல்லது (3) கட்டமைப்பில்லாத தனியாக நிற்கும் அமைப்பாக பயன்படுத்தப்படலாம். 

a. ரூஃப் டாப் சூரிய சக்தி

ரூப் டாப் சூரிய சக்தி மின்சார அமைப்பு ஒளி மின்னழுத்த தகடுகளை பயன்படுத்துகிறது, சூரிய ஒளியை மின்சாசாரமாக மாற்றும்.

d. வெப்ப எக்கிகள்

உங்கள் வீட்டின் வெப்பத்தை வெளியே எடுக்கும்  வெப்ப எக்கி தொழில்நுட்பம் (நீங்கள் விரும்பும் இடத்தில்) அல்லது வேறு எங்கிலும், அதை நீராக மாற்றும். மேலும், உங்கள் வீட்டில் அல்லது வளி மண்டலத்தில் உள்ள கூடுதலான வெப்பம்   வெயிலால் சூடாக்கப்படும்போது, இது உண்மையில் ஒரு சூரிய வெப்ப நீராக மாறும்.

e. வணிக ரீதியான தொழில்துறை சூரிய சக்தி நீர் கொதிகலன்கள்

சூரியசக்தி அனல் அமைப்புகளின் வாக்குறுதி தரும் பயன்பாடு வணிக மற்றும் சிறு தொழிற்சாலை பயன்பாடுகளுக்கானதாகும். (எ.கா.) மருத்துவமனைகள், சலவையகங்கள், பள்ளிகள், பல குடும்பங்களின் வீடுகள்.

f. சூரிய சக்தி குளிர்விக்கும் அமைப்புகள்    

சூரிய சக்தி குளிர்விக்கும் அமைப்பு என்பது சூரிய சக்தியை பயன்படுத்தும் குளிர்சாதன அமைப்புகளைக் குறிக்கிறது. இது செயல்திறமற்ற சூரிய சக்தி, சூரிய அனல் எரிசக்தி மாற்றுதல் மற்றும் ஒளிமின்னழுத்த மாற்றுதல் (சூரிய ஒளியிலிருந்து மின்சாரத்திற்கு) மூலமாக செய்யப்படலாம்.

(ii) பெரிய அளவு

RE அமைப்புகள் மின்சாரக் கட்டமைப்புகள் செலுத்துவதாக அமைக்கப்படலாம். கட்டமைப்புடன்  ஊடாடுகிற புதுப்பிக்கத்தக்க மின்சாரத் திட்டங்கள் காற்று மின்சாரம், பயோமாஸ்  மற்றும் சூரிய சக்தி (1 மெ.வா.க்கு மேலே) மற்றும் சிறு நீர்மின் (25 மெ.வா.க்கு கீழே) திட்டங்களின் அடிப்படையிலானவை,  அவை முதன்மையாக தனியார் முதலீட்டினால் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களினால் (SERC) ஏற்படுத்தப்பட்ட கட்டண கொள்கை நிர்வாகத்துடன் இயக்கப்படுகின்றன. 

(iii) நடுத்தர அளவு

     a. சமுதாய அடிப்படையிலான -  பரவலாக்கப்பட்ட வினியோகிகப்படும் உற்பத்தி (DDG)

DDG எரிசக்தி பயன்படுத்தப்படுகிற இடத்தில் அல்லது அதற்கு அருகில் இருக்கும் சிறு, நடுத்தர, பரவலாக்கப்பட்ட கட்டமைப்பிற்கு வெளியேயான RE அமைப்புகளைக் கொண்டிருக்கிறது. கட்டமைப்பிற்கு வெளியே இருக்கும் கிராமப்புறங்களுக்கு   அல்லது தூரம் / நிலப்பரப்பின் காரணமாக கட்டமைப்பில் இணைக்கப்படாத பகுதிகளுக்கு  பொருத்தமான ஒன்று. எனினும் இந்த தனித்து நிற்கும் அமைப்புகள் உள்ளூர் வேலைவாய்ப்பு, உள்ளூர் கழிவுகளின் மறுசுழற்சி,  உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி பயன்பாட்டின் மீதான உள்ளூர் கட்டுப்பாட்டுகளின் சாதகம் காரணமாக பொருத்தமானவையாகும்.

DDG அமைப்புகள் ஒரு ஒற்றை ஆதாரத்தில் இருந்தோ (எ.கா., மைய காற்றாலை அல்லது சூரிய சக்தி) அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட (கலப்பின) ஆதாரங்களில் இருந்தோ இருக்கலாம். DDG பாரம்பரிய மின்சார மின் அமைப்புக்கு மாற்றாக அல்லது மேம்பாடாக இருக்கலாம். நுகர்வோர் பக்கத்திற்கான வலையமைப்பில் இணைக்கும் மின்சார உற்பத்தி  தொகுதிகளாகும் அது. அது குறைந்த T &  D இழப்பினைக்கொண்டிருக்கிறது. 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் 

(i) புதுப்பிக்கத்தக்க போர்ட்ஃபோலியோ தரநிலைகள் (RPS)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்காக இந்திய மாநிலங்கள் RPSஐ தருகின்றன. RPSன் கீழ், RPS இயங்கமைப்பு பொதுவாக a) புதுப்பிக்கத்தக்க வளங்களில் இருந்து தங்கள் மின்சாரத்தில் குறிப்பிட்ட அளவினை உற்பத்தி செய்வதற்காக மின்சாரம் வழங்கும் நிறுவனங்கள் கடப்பாட்டினை கொண்டிருக்கின்றன மற்றும் b) வினியோக நிறுவனங்களில் RE வளங்களில் இருந்து வாங்குவது ஆகியவற்றை வைக்கின்றன. இந்த நோக்கத்திற்காக, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் கட்டமைப்பிற்குள் செலுத்தப்படும் RE மின்சாரத்திற்கான சந்தை விலைக்கு அதிகமாக  முன் நிர்மாணிக்கப்பட்டவற்றிற்கு செலுத்துவதற்காக மின் பயன்பாடுகளை கடப்பாடாக்குவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க   எரிசக்தியின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இந்த கட்டணங்கள், பயன்படுத்தப்படும் வளத்தினைப்பொறுத்து மாறுபடும், தங்களின் திட்டங்களில் வருவாய் ஓட்டத்தை புதுப்பிக்கத்தக்க உற்பதியாளர்கள் அமைத்திருந்தால்.

(ii) புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான சான்றிதழ்கள் (RECகள்)

REக்கு மாறவது RE சான்றிதழ்கள் மூலமாகவும் ஊக்குவிக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின்  தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் பண்புகளாகும் மற்றும் அவை உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இருந்து தனிச்சிறப்பானவை. இந்த பண்புகள் மின்சாரத்தின் இருந்து கோர்வையாக்கப்படாதவை மற்றும் REC முந்தையதற்காக வழங்கப்படுகிறது. விளைவில், RE சான்றிதழல்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் - இந்த இரண்டு தயாரிப்புகளும் விற்கப்படுகின்றன அல்லது வணிகம் செய்யப்படுகின்றன. REC புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து மணிக்கு உற்பத்தி செய்யப்படும் 1 மெ வா மின்சாரத்தைக் குறிக்கிறது. வணிகம் செய்வதற்கு அல்லது முதலீடுசெய்வதற்கு ஆர்வமாக இருப்பவர்கள் RE சான்றிதழ்களை வைத்திருப்பதற்காக RE மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை.

(iii) நிகர அளவை

கட்டமைபுக்கு ஊட்டக்கூடிய அமைப்பு ரூஃப் டாப் அமைப்புகள் (எ.கா., சூரிய ஒளிமின்னழுத்த தகடுகள் அல்லது காற்றாலைகள்) மூலமாக புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை தளத்தில் உற்பத்தி செய்ய நிகர அளவை ஊக்குவிக்கிறது. கட்டமைப்பிற்குள் போடப்படும் அளவுக்கான உற்பத்தியாளர்கள் இழப்பீட்டினை பெறுவார்கள். நிகர அளவை அமைப்பானது தளத்தில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவினையும் கட்டமைப்பிற்குள் செலுத்தப்படுகிற அளவினையும் உறுதி செய்கிறது. தளத்தின் தேவைகளுக்கு உற்பத்தி போதுமானதாக இல்லாத போது, கட்டமைப்பில் இருந்தான மின்சாரம் பயன்படுத்தப்படலாம்.

(iv) திறந்த அணுகல்

திறந்த அணுகலானது  பொதுவாக 1 மெகாவாட் (மெ.வா) இணைக்கப்பட்ட பாரத்தைக் கொண்டிருக்கிற  - மின்சார பெரிய பயனாளர்களை – திறந்த சந்தையிலிருந்து அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் இருந்து மலிவாக மின்சாரத்தை வாங்க அனுமதிக்கிறது. மின்சார சட்டம் 2003, உரிமம் வைத்திருப்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக, வரிசைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒரு கூடுதல் வரி மற்றும் செலுத்துதல் மூலம் திறந்த அணுகல் பயனாளர்கள் ஒரு  பகிர்மானம் மற்றும் வினியோகத்திற்கான (T&D) கட்டமைப்பில்  அனுமதிக்கிறது. நடப்பில் இருக்கும் ஏகபோக மின் பயன்பாட்டில் இருந்து மின்சாரத்தை வாங்குவதற்கு மாறாக – போட்டியிடும் பெரும் மின்சாரம் நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்களால் தேர்ந் தெடுக்க முடிவதே இந்த யோசனையாகும். அது பெரிய அளவிலான நுகர்வோர்களுக்கு உதவுகிறது, குறிப்பாக நலிவடைந்த ஜவுளி, சிமெண்ட் மற்றும் எஃகு ஆலைகளின் தொகுதிகளுக்கு போட்டிகரமான விலையில் மின்சாரத்தை வழங்குவதன் மூலம் மின்சாரப் பங்க்களின் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது.

(v) மானியங்கள்

நிதிகள், கடன்கள், தள்ளுபடிகள், வரி  சலுகைகள், போன்ற நிதி ஊக்கத்தொகைகள்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி  மேம்பாட்டினை ஊக்குவிப்பதற்காக, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க அமைச்சகத்தினால், மாநில அரசுகள் மூலமாக வழங்கப்படுகிறது.

(vi) உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை (GBI)

இந்திய அரசாங்கம் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை மூலமாக  கட்டமைப்பு இணைக்கப்பட்ட காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்களில் இருந்து கூடுதல் மின்சாரம் உற்பத்திசெய்வதை அறிமுகப்படுத்தி ஊக்கத்தொகை வழங்குகிறது. இந்த்த் திட்டத்தின் கீழ், ஒரு GBI காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு 4 ஆண்டுக்குக் குறையாமல் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டகளக்கு பிரதி மெ.வா.க்கு ரூ. 100 இலட்சங்கள் முதலீட்டுடன் ஒரு யூனிட்டுக்கு ரூ. 0.50 காசு என்ற அளவில் வழங்கும். .

(vii) விரைவுத் தேய்மானம்

விரைவுத் தேய்மானம் என்பது ‘நிதிக் கணக்கியல்’ அல்லது வரி நோக்கங்களுக்காக, பல்வேறு முறைகளில் ஒரு நிறுவனம், முந்தைய ஆண்டுக்கான சொத்தின் ஆயுளின் போது ஒவ்வொரு ஆண்டும் தேய்மானத் தொகை அதிகமாக இருக்கும் வகையில் ஒரு   நிலையான சொத்தினை தேய்மானம் அடைய செய்கிறது. நிதி கணக்கியல் நோக்கங்களுக்காக, விரைவுத் தேய்மானம் முந்தைய ஆண்டினைக் காட்டிலும் அதிக ஆக்கப்பூர்வமானதாக இருக்க எதிர்பார்க்கப்படுகிறது, அதனால் ஒவ்வொரு ஆண்டும் சொத்து எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தேய்மான செலவுகள் மிகத் துல்லியமாக குறிப்பிட முடியும். வரி நோக்கங்களுக்காக, விரைவுத் தேய்மானம் எதிர்கால ஆண்டுகளுக்கான அதிகரிக்கப்பட்ட வரிசெலுத்தத்தக்க வருவாய்க்கான ஈடாக, தற்போதைய ஆண்டுகளின் வரி செலுத்தத்தக்க வருமானத்தினை குறைப்பதன் மூலம் தள்ளிவைக்கப்படுகிற பெருநிறுவன வருமான வரிகளுக்கான ஒரு வகையை அளிக்கிறது. இது புதிய சொத்துக்களை வாங்குவதற்காக தொழில்களை இந்த மதிப்புமிக்க வரி ஊக்கத் தொகை ஊக்குவிக்கிறது

சூரிய சக்தி உற்பத்தியின் நிகழ்வில், தொழில்முனைவர்களுக்கு சூரிய சக்தி உற்பத்தி சந்தையில் நுழைவதற்காக ஊக்கத்தொகை வழங்குவதற்காக, இந்திய அரசாங்கம் சூரிய சக்தி உற்பத்தியை கையாள்வதற்காக ஆண்டு ஒன்றில் 80% உரிமைக்கோருதலை அனுமதிக்கிறது.

மின்சார சட்டம் 2003ல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தேசிய மின்சாரக்கொள்கை 2005 மற்றும் தேசிய விலைக்கொள்கை

மின்சார சட்டம் 2003

முன்னுரை (பக்கம் எண் 1)

 “மின்சாரத்தின் உற்பத்தி, அனுப்புதல், வினியோகம், வணிகம் மற்றும் பயன்பாடு தொடர்பான சட்டங்களை தொகுப்பதற்கான ஒரு சட்டம் மற்றும் பொதுவாக மின்சார தொழில்துறையின் மேம்பாட்டுக்கு உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கானது.... ஆற்றல் ஊக்குவிப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத கொள்கைள்.... “

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மேம்படுத்துவதற்கான ஒழுங்குமுறையாளர்களுக்கான ஆணை

பிரிவு 2(47) “செலுத்தும் வரிசைகள் அல்லது வினியோக அமைப்புகளில் அல்லது அத்தகைய வரிசைகள் அல்லது அமைப்புகளில் தொடர்புடைய வசதிளைக் கொண்டிருக்கும் ஏதேனும் உரிம்ம் உள்ளவர் அல்லது நுகர்வோல் அல்லது முறையான ஆணையத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்குமுறைகளுக்கு ஏற்ப ஈடுபட்டிருக்கும் ஒரு நபர்”.

மின்சார சட்டம் 2003ன் பிரிவு 86(1) (e)  தெரிவிப்பது என்னவென்றால் பிரிவு 86(1), 86(1)(e)ன்படி மாநில ஆணையகங்கள் புத்தாக்க சக்தி மற்றும் இணை மின் உற்பத்தி மூலம் மின் உற்பத்தியை ஊக்கப்படுத்த, மத்திய மின் க்ரிட்டுடன்(GRID) இணைப்புக்கான வழி, யாருக்கு தேவையோ அவர்களுக்கு மின்சாரத்தை விற்பனை செய்தல், மின்சாரத்தை வாங்குதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சதவிகித மின்சாரத்தை வினியோக உரிமையுடன் அப்பகுதியில் பயன்படுத்துதல் ஆகியவற்றை இப்பிரிவு வழங்க ஊக்கப்படுத்தும்

பிரிவு 61(h) முறையான ஆணையம் .... விலையை நிர்ணயம் செய்வதற்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளைத் தெரிவிக்கும் மற்றும் அவ்வாறு செய்வதற்கு பின்வரும் வழிநடத்தப்படும், குறிப்பாக:  …………………………………………………………………………………………………………

(h) எரிசக்திக்கான புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து மின் இணை உற்பத்தி மற்றும் உற்பத்தியை ஊக்குவித்தால்,

(i) தேசிய மின்சாரக் கொள்கை மற்றும் கட்டணக்கொள்கை

தேசிய மின்சார கொள்கை

“5.2.20 சாத்தியமில்லாத சாத்தியமான மரபு சாரா எரிசக்தி வளங்கள் , முக்கியமாக சிறிய நீர் மின், காற்று மற்றும் உயிர் வெகுஜன கூடுதல் மின் உற்பத்தி திறன் உருவாக்க முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று. மின்சாரம் கலப்பில் மரபு சாரா எரிசக்தி ஆதாரங்கள் ஒட்டுமொத்த பங்கை அதிகரிக்க வேண்டும் என்ற நிலையில், முயற்சிகள் பொருத்தமான விளம்பர நடவடிக்கைகள் மூலம் தனியார் துறை பங்கு ஊக்குவிக்க செய்யப்படும். "

தேசிய விலைக்கொள்கை

 

6.4 “… மரபு சாரா தொழில்நுட்பங்கள் மின்சாரம் செலவு அடிப்படையில் வழக்கமான ஆதாரங்கள் போட்டியிடுவதற்கு சில காலம் எடுக்கும். எனவே, தகுந்த ஆணையம் நிர்ணயிக்கும் விருப்பு கட்டணங்களில் விநியோக நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும்.

(2) இத்தகைய கொள்முதல்கள் வினியோக உரிமமுள்ளவர்களால், இயன்றளவில், போட்டிகரமான ஏல செயல்முறை மூலமாக, அதே வகையான மரபு சாரா ஆதாரங்களில் இருந்து எரிசக்தியை வழங்கும் வழங்குனர்களுக்குள் செய்யப்படலாம், ...”

புதுப்பிக்கத்தக்க ஆற்றலை  மேம்படுத்துவதற்கான நிறுவனங்கள்

நிறுவனம்

குறிக்கோள்

விவரங்கள்

முகவரி

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திக்கான அமைச்சகம் (MNRE)

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான அனைத்து விவகாரங்களுக்குமான இந்திய அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சகம்

ஊரக, நகர்புற,தொழிற்சலைகள் மற்றும் வணிகத் துறைகளில் போக்குவரத்து, எடுத்து செல்லுதல் மற்றும் நிலையான பயன்பாடுகளுக்கான புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகள்/சாதனங்களின் ஆராய்ச்சி, வடிவமைப்பு, உற்பத்தி, மற்றும் பணியமர்த்தல்

பிளாக்-14, CGO காம்பளக்ஸ், லோதி ரோடு, புதுடெல்லி -110 003, இந்தியா.

தொலைபேசி:  +91-11-24362772

மின்னஞ்சல் : secy-mnre@nic.in

 

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை லிமிடெட் (IREDA)

புதுப்பிக்கத்தக்க மற்றும் எரிசக்தி சிக்கனம்/பாதுகாப்புத் திட்டங்களை ஊக்குவிக்கிறது, உருவாக்குகிறது மற்றும் நிதியுதவி வழங்குகிறது.

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மூலமாகவும் மற்றும் எரிசக்தி சிக்கனம் மூலமாகவும் எரிசக்தியை பாதுகாப்பதற்கான குறிப்பிட்டக் கருத்திட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு மின்சார உற்பத்தி மற்றும்/அல்லது எரிசக்தி மூலமான நிதி ஆதரவு தருவது

3வது தளம், ஆகஸ்டு கிராந்தி பவன், பிகாஜி காமா பிளேஸ், புதுடெல்லி – 110 066.

தொலைபேசி: +91 11 26717400 - 413

 பேக்ஸ்: +91 11 26717416

மின்னஞ்சல்: cmd@ireda.gov.in

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமைகள்

 

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான மாநில ஒருங்கிணைப்பு முகமையாக செயல்படுகிறது

 

MNRE குடையின் கீழ் செயல்படுகிறது மற்றும் அதன் கொள்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலக்கொள்கைகளால் வழி நடத்தப்படுகிறது

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை (NRSE) ஊக்குவிப்பது மற்றும் அதன் விளைவாக திட்டங்களை செயல்படுத்துவது.

எரிசக்தி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது.

எரிசக்தியின் புதுப்பிக்கத்தக்க ஆதாரகங்களின் ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டினை ஊக்குவிப்பது.

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை

ஈ.வி.கே சம்பத் மாளிகை, 5வது தளம், எண். 68, காலேஜ்  ரோடு, சென்னை – 600006

தொலைபேசி: (044) 28224830  & 28236592

ஃபேக்ஸ் : 2822 2971

மின்னஞ்சல்: info@teda.in

 

கர்நாடகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை

எண், 39, “சாந்திக்ருஹா” பாரத் ஸ்கவுட்ஸ் அண்டு கைடுஸ் பில்டிங் பேலஸ் ரோடு

தொலைபேசி: (080)22207851/22208109/9480691041.

ஃபேக்ஸ்:080-22257399

மின்னஞ்சல்: kredlnce@yahoo.co.in

 

கேரள  மரபு சாரா எரிசக்தி மற்றும் ஊரகத் தொழில்நட்பத்திற்கான முகமை,

போலிஸ் பரேடு கிரவுண்டு, தைக்காடு,

திருவனந்தபுரம் – 695014.

போன் : (0471)2329854, 2338077, 2334122, 2333124 &2331803

பேக்ஸ்:  (0471)2329853

மின்னஞ்சல்: director@anert.in

 

ஆந்திர பிரதேசம் : ஆந்திர பிரதேச மரபு சாரா எரிசக்தி மேம்பாட்டுக் கழகம் [NEDCAP]

5-8-207/2, பிஸ்கா காம்பிளக்ஸ், நம்பள்ளி, ஹைதராபாத் - 500 001.

தொலைபேசி: (040)2320 2391

பேக்ஸ்: (040)23201666

மின்னஞ்சல்: info@nedcap.gov.innedcap@ap.nic.in

மாநில மின்சார ஒழுங்குமுறைக் குழுக்கள்

மின்சாரக் விலையை சீரமைப்பு, மானிங்கள் தொடர்பான கொள்கைகளில்  வெளிப்படையானத்தன்மை ஆற்றல்மிக்க மற்றும் சுற்றுச்சூழலுக்குத் தீங்கில்லாத கொள்கைகள் மற்றும் இதனுடன் இணைந்துள்ள விவகாரங்கள் அல்லது அதனுடன் இணைந்துள்ள் நிகழ்வுகளின்  மேம்பாடு

RE மேம்படுத்துவதற்கு மின்சார ஒழுங்குமுறைக் குழுக்களை பிரிவு 84 (1) (e) கட்டாயமாக்குகிறது

தமிழ்நாடு:

எண் 19A, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர், சென்லைன - 600 008.

  தொலைபேசி : (044) 28411376, 28411378, 28411379

தொலை நகல் :(044) 28411377.

மின்னஞ்சல்: tnerc@nic.in

கர்நாடகா:

6வது மற்றும் 7வது தளம், மகாலட்சுமி  சேம்பர்கள், #92,  எம்.ஜி.ரோடு, பெங்களூரு - 560 001

தொலைபேசி : (080) 25320213 / 214, 25320339, 25323765

தொலை நகல்: 080-25320338,

மின்னஞ்சல்: kerc35@bsnl.in

 

ஆந்திர பிரதேசம்:

4வது மற்றும் 5வது தளம், 11-4-660,

சிங்கரேனி பவன்  ரெட்ஹில்ஸ்,

ஐதராபாத் 500 004

தொலைபேசி: (040) 23397381

தொலைநகல்: (040) 23397378 & 23397489

மின்னஞ்சல்: chmn@aperc.gov.in 

 

கேரளா

கே.பி.எஃப்.சி பவனம், சி.வி. ராமன் சாலை,  வெள்ளையம்பலம், திருவனந்தபுரம், கேரளா 695010

தொலைபேசி: (0471) 2735544

தொலைநகல்: 0471) 2735599

மின்னஞ்சல்: kserc@erckerala.org