அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பொது

(a)   தொழில்துறை வகைப்படுத்தல்

கே. தொழில்துறைகளில் அனல் மின்உற்பத்தி நிலையங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன?

ப:  மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் (MoEF) அமைச்சகம் 17 சிவப்பு வகைப்பிரிவு தொழல்துறைகளில் ஒன்றாக அனல் மின்உற்பத்தி நிலையங்களை வகைப்படுத்தியுள்ளது. சிவப்பு வகைப்பிரிவு என்பது மிக அதிகமாக மாசுப்படுத்தும் தொழில்துறைகளைக் குறிக்கிறது.

அனுமதியைப் பெறுவதற்காக:

  • வகைப்பிரிவு A  திட்டங்களாவன-

500  மெ.வா. க்கும் அதிகமானது   நிலக்கரி/லிக்னைட்/நாப்தா மற்றும் வாயு அடிப்படையிலான எரி பொருள்

50 மெ.வாக்கும் அதிகமானது            பெட்கோக், டீசல் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தில் எஞ்சியுள்ள எண்ணெய் கழிவு (பயோமாஸ் தவிர) உள்ளிட்ட அனைத்துப் பிற எரிபொருள்கள்

> 20 மெ.வா.க்கும் அதிகமானது  பயோமாஸ் அடிப்படையிலானது அல்லது அபாயகரமல்லாத MSW (நகராட்சி திடக் கழிவு) எரிபொருளாக

  • வகைப்பிரிவு B திட்டங்கள் ஆவன: -

< 500 மெ.வா.க்கு குறைவானது நிலக்கரி / லிக்னைட் / நாப்தா மற்றும் வாயு அடிப்படையிலான எரிபொருள்

50  மெ.வா அல்லது 3  மெ.வா. பெட்கோக், டீசல் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தில் எஞ்சியுள்ள எண்ணெய் கழிவு (பயோமாஸ் தவிர) உள்ளிட்ட அனைத்துப் பிற எரிபொருள்கள்

< 20மெ.வா. அல்லது  15மெ.வா. பயோமாஸ் பயோமாஸ் அடிப்படையிலானது அல்லது அபாயகரமல்லாத MSW (நகராட்சி திடக் கழிவு) எரிபொருளாக

(b)  உற்பத்தி நிலையங்களின் அமைவிடம்

கே. கடற்கரைப் பகுதிகளில் அனல் மின்உற்பத்தி நிலையங்கள் பெருகுவது ஏன்?    

A:  உற்பத்தி நிலையங்களில் கடற்கரைப் பகுதிகளில் அமைப்பது திட்ட முன்மொழிபவர்களுக்கு இரண்டு முக்கிய பலன்களைத் தருகிறது:

1.     துறைமுகங்கள் மற்றும் படகு குழாம்கள் மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் எளிதான போக்குவரத்து

2.     ஒருமுறைக் குளிர்வித்தல் மற்றும் கொதிகலன் ஊட்ட நீர் உற்பத்திக்கான கள கடல் நீர் உப்புகற்றும் திட்டத்தின் எளிதாக கிடைக்குந்தன்மை. இது அனல் மின்உற்பத்தி நிலையங்களை நடத்துவதற்காக நன்னீரின் தேவையை குறைக்கிறது.

கே. அனல் மின்உற்பத்தி நிலையங்கள் எங்கே அமையலாம் என்பதற்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா?  

A: ஆம். அனல் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் அடிப்படையான மூன்று தொகுதிகள் பின்பற்றப்படுகின்றன. அவை:

1.     EIA அறிவிக்கை, 2006ல் பட்டியலிடப்பட்டுள்ள அடிப்படை

2.     மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CBC) தொழில்துறை அமைவு வழி காட்டுதல்.

3.     மாநில  மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (SPCB) அமைவிட விதிகள்.

EIA அறிவிக்கை 2006ன்படி, 500  மெ.வாக்கும் குறைவான திறனுள்ள அனல் மின்உற்பத்தி நிலையங்களுக்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு ஆணையம் (SEAA) அனுமதி வழங்குகிறது – அவை பின்வருவனவற்றிற்கு 10 கி மீ க்குள் அமைந்திருந்தால் அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து பெறவேண்டும்

  • வன உயிர் (பாதுகாப்பு) சட்டம், 1972ன் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை.
  • மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அவ்வப்போது தீவிரமாக மாசடைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்ட வை.
  • சுற்றுச்சூழல் உணர்வுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை
  • மாநிலங்களுக்கிடையேயான மற்றும் சர்வதேச எல்லைகள்

அக்டோபர் 2013ன்படி, CPCB பின்வரும் பகுதிகளை தீவிரமாக மாசடைந்த பகுதிகளாக அறிவித்துள்ளது:

  • அங்கலேஷ்வர் (குஜராத்)
  • சந்திரப்பூர் (மகாராஷ்டிரா)
  • பாலி (ராஜஸ்தான்)
  • வாத்வா (குஜராத்)
  • வேலூர் (தமிழ்நாடு)
  • நஜப்கர் வடிகால் பகுதி (டெல்லி)
  • ஜோத்பூர் (ராஜஸ்தான்)

அனல் மின்உற்பத்தி நிலையங்கள் இந்த பகுதிகளில் அமைக்கப்பட முடியாது.

இவை தவிர, மாநில அரசாங்கங்களால் மேம்பாட்டு நடவடிக்கைகள் தடை செய்யப்பட்ட இடங்களின் பட்டியல்களும் உள்ளன.

தமிழ்நாட்டில் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிகம் மாசுப்படுத்தும் தொழில்துறைகள் குறிப்பிட்ட ஆறுகளின் கரைகளில் (கீழே உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன) இருந்து 1 கிமீ உள்ளேயும் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகள்,  பெண்ணையாறு, பாலாறு, வைகை, மற்றும் தாமிரபரணியின்  கரையில் இருந்து 5 கி மீக்குள்ளும் அமைப்பதற்கு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

{http://www.tnpcb.gov.in/GO1.html

http://www.pcboac.tn.nic.in/Docu/GOs.pdf}.

ஆந்திர பிரதேச மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்தவொரு தொழிற்சாலையின் எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலையின் எல்லை இடையே 100 மீ இடைவெளி இருக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலைக்கு 50 மீ-ம் இடைவெளி இருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது. எனினும், இந்த வழிகாட்டுதல்கள் தொழிற்பேட்டைகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்குப் பொருந்தாது.[1]

கர்நாடகாவில், பின்வரும் கரைப் பகுதிகளில் புதிய தொழிற்சாலை ஏதும் அமைக்கப்பட முடியாது

  • காவிரி, கபினி, அர்காவதி, ஷிம்ஷா, பெண்ணார், ஹேமாவதி, லக்ஷமண தீர்த்தா, குண்டல் ஆறு, துங்கபத்ரா, கிருஷ்ணா, பீமா, வரதா, காட்டப்பிரபா, மலப்பிரபா, வேதவதி, கரண்ஜா, ஹாக்ரி 
  • மேற்குநோக்கி  பாயும் ஓடைகள்/ஆறுகள் அவை பருவகாலத்தினவையாக இருந்தாலும் சரி அல்லது ஆண்டு முழுவதும் நீர்கொண்டவையாக இருந்தாலும் சரி.
  • அனைத்து ஓடைகள்/ஆறுகள் அவை பருவகாலத்தினவையாக இருந்தாலும் சரி அல்லது ஆண்டு முழுவதும் நீர்கொண்டவையாக இருந்தாலும் சரி.
  • அனைத்து முக்கிய அணைகள்
  • குடிநீர் மேற்பரப்பு நீராதாரங்கள்
  • அனைத்து முக்கிய பாசன கால்வாய்கள்
  • நீர் நிலையானது குடிநீர் ஆதாரமாக இருந்தால், மாசுப்படுத்திகள் வெளிப்படும் இடம் நீரைபாதிக்காத  வகையில், நிர்ணயிக்கப்படும்.
  • அனல் மின்உற்பத்தி நிலையங்கள் நகராரட்சி/நகர எல்லைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கப்பட மாட்டாது. [2]

அமைவிட வழிகாட்டுதல்களுக்கான மேலும் விவரங்களுக்கு, தயவு செய்து அந்தந்த மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் சரி பார்க்கவும்

கே. CEPI (விரிவான சுற்றுச்சூழல் மாசு குறியீடு) என்றால் என்ன? அனல் மின்உற்பத்தி நிலையங்களின் அமைவிடத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? 

CEPI என்பது சுற்றுச்சூழல் தரத்தினை பண்பாக்குவதற்கான ஒரு எண்ணாகும். CEPI மதிப்பெண்கள் அவ்வப்போது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தீவிரமாக மாசுப்பட்டுள்ள பகுதிகளையும் தொழில்துறைதொகுதிகளை அவற்றின் காற்று, நிலம் மற்றும் நீரை கண்காணிப்பதன் மூலம் அடையாளம் காண்பதற்காக கணக்கிடப்படுகிறது.

CEPI மதிப்பெண் என்பது  மாசு அளவுகளின் காரணமாக தொழில்துறை மேம்பாடுகள் தடை செய்யப்பட்டப் பகுதிகளை அடையாளம் காண்பதற்கான முக்கியமான கருவியாகும். 2010ல், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 43 தீவிரமாக மாசுப்பட்ட பகுதிகளில் திட்டங்கள் அமைந்திருந்தால், அவற்றிற்கான அனுமதியின் மீது   கருதுதலுக்கான சட்டவரைவை விதித்தது,  செப்டம்பர் 2013ல் அது 7 தொகுதிகளாக குறைக்கப்பட்டது. அனல் மின் உற்பத்தி திட்டங்கள் சட்டவரைவு விதிக்கப்பட்ட இடங்களில் அமையலாகாது.

(c)  நிலக்கரி போக்குவரத்து

கே. துறைமுகங்களில் இருந்து மின்உற்பத்தி நிலையங்களுக்கு வழக்கமாக எவ்வாறு நிலக்கரி எடுத்து செல்லப்படுகிறது?

ப: சாலை, இரயில் அல்லது மூடப்பட்ட கன்வேயர்  பெல்ட்கள் மூலமாக. நிலக்கரிப் போக்குவரத்து நீண்ட தூரத்தைக் கொண்டிருந்தால், திட்ட முன்மொழிபவர் அந்த இடத்திற்கு இரயில் போக்குவரத்துக்களை ஆராய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறார். ஆதார இடத்திலிருந்து  பாரவண்டியில் ஏற்றுவது ஒரு சிலோ / கன்வேயர் பெல்ட் மூலமாக செய்வது விரும்பத்தக்கதாகும்.

[1]http://www.appcb.ap.nic.in/cm/siting.htm

[2]http://kspcb.gov.in/sitingguidelines.html

 

2.சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் புதிய ஆலைக்கான செயல்முறை  

(a) பொது ஆலோசனை செயல்முறை  

பார்க்கவும் - பொது ஆலோசனை செயல்முறையில் ஆற்றல்மிக்க பங்கேற்பு

(b) சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்பு

 கே. சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்னால், திட்ட நிலம் தொடர்பாக, திட்ட முன்மொழிபவர் ஈடுபடவேண்டிய நடவடிக்கைகள் என்ன?

ப. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி ஒரு சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்னால் அனுமதிக்கப்படும் நடவடிக்கைகளாவன[1]:

  • ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருப்பதற்காக தளத்திற்கு வேலியிடல்
  • பாதுகாவலர்களுக்கான தற்காலிக கொட்டகைகளின் கட்டுமானம்

கே. வழக்கமாக எவ்வளவு நாட்களில் உற்பத்தி ஆலைக்கு அனுமதி கிடைக்கும்?

ப. அது ஆலையின் அளவினைப் பொருத்தது. வழக்கமாக விண்ணப்பம் செய்த பிறகு 1 முதல் 1 ½ ஆண்டுகளில் விண்ணப்பம் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும். EIA அறிவிக்கையின் பின்வருவன காலவரைறைக்குட்பட்டது :

  • ToR வழங்கல்: திட்ட முன்மொழிபவர் விண்ணப்பம் சமர்ப்பித்த 60 நாட்களக்குள் வழங்கப்படும்.
  • பொது மக்கள் விசாரணை நடத்துதல் :  பொது மக்கள் விசாரணை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAAவுக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் திட்ட முன்மொழிபவரிடமிருந்து விசாரணைக்கான கோரிக்கைப் பெற்ற 45 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும்.
  • சுற்றுச்சூழல் அனுமதி வழங்கல்: இறுதி EIAவை திட்ட  முன்மொழிபவர் சமர்ப்பித்த 105 நாட்களுக்குள் வழங்கப்படும்

(c) நிலக்கரி கலவை மற்றும் நிலக்கரி இணைப்பு  

கே. சுற்றுச்சூழல் அனுமதி வாங்கப் பெற்ற ஒரு குறிப்பிட்ட நிலக்கரி கலவையை மாற்ற வேண்டும் என்றால் திட்ட முன்மொழிபவர் என்ன செய்யவேண்டும்?

ப. புதிய எரி பொருள் கலவைக்கு புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக திட்ட முன்மொழிபவர் விண்ணப்பிக்க வேண்டும். (இது EIA அறிவிக்கையின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது[2 (iii)]

கே. சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன் நிலக்கரி இணைப்பினை திட்ட முன்மொழிபவர் ஏற்படுத்த முடியுமா?

ப. ஆம்! உண்மையில், அது சுற்றுச்சூழல் அனுமதிப் பெறுவதற்கு அது முன் தேவையாகும். நிலக்கரி ஆதாரத்திற்கான வனம் மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிக்கான தகுதி அது நிலக்கரி சுரங்கத்திலோ அல்லது நிலக்கரி சேமிப்புத் தொகுதியிலோ எதில் இணைக்கப்பட்டிருந்தாலும் அது EIAவில் குறிப்பிடப்படவேண்டும். இறக்குமதி  செய்யப்பட்ட நிலக்கரி பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், நிலக்கரி வழங்குனருக்கும் திட்ட முன்மொழிபவருக்கும் இடையே செய்யப்படும் புரிந்துணர்வு ஒப்பந்த EIAவில் உள்ளடக்கப்பட வேண்டும். [2]

நிலக்கரி இணைப்பானது மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் இணைப்பு நிலைக்குழுவின்படி  அல்லது எரிபொருள் வழங்கும் ஒப்பந்தத்தின் படி ஒரு குறிப்பிட்ட சுரங்கத்திலிருந்து, சுரங்கங்களின்  தொகுதியிலிருந்து அல்லது அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிலக்கரி  தொகுதியிலிருந்து இருக்கலாம்.

கே. நிலக்கரியின் தரம்/ வகை, சுற்றுச்சூழல் அடிப்படையிலானதிலிருந்து வேறுபட்டிருப்பது,  தேவைப்பட்டால், திட்ட முன்மொழிபவர் என்ன செய்யவேண்டும்?   

ப:  நிலக்கரியின் தரம்  மாறினால், திட்ட முன்மொழிபவர் அதை மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்து  செல்லவேண்டும், அமைச்சகம் மதிப்பீடு செய்து புதிய மற்றும் கூடுதல் நிபந்தனைகளை  தேவைப்பட்டால் சேர்க்கும்.

(d) EIA செயல்முறைக்கான ஆணையங்கள்

கே. எந்த பொது ஆணையங்கள்/அரசாங்க அலுவலகங்கள் சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறையில் ஈடுபடுகின்றன? 

ப. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் SEIAA ஆகியன சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான ஒழுங்குமுறை ஆணையங்களாகும். வகைப்பிரிவு A திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது, அதே சமயம் வகைப்பிரிவு Bக்கு SEIAA அனுமதி வழங்குகிறது.

மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு  பொது ஆலோசனை நடத்துவதற்கான அதிகாரத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது, அது அமைச்சகத்திற்கு  பொது ஆலோசனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

கே. SEIAA என்பது மாநில அரசு அமைப்பா அல்லது மத்திய அரசு அமைப்பா?

ப. அது ஒரு மத்திய அரசு அமைப்பாகும்! எனினும், அதன் செயலாளர் மற்றும் தலைவர்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் நியமிக்கப்படுவார்கள். செயலாளர் தொடர்புடைய அரசாங்கத்தின் அதிகாரியாக பணியாற்றுபவராக இருக்க வேண்டும்.

(e) பிராந்திய மொழிகளில் கிடைக்கப்பெற வேண்டிய ஆவணங்கள்  

கே. EIA செயல்முறையில் இருக்கும் ஆவணங்களில், ஆங்கிலத்துக்குக் கூடுதலாக பிராந்திய (உள்ளூர்) மொழியில் இருக்கவேண்டியவை யாவை?  

ப: அவை

1.     பொதுமக்கள் விசாரணைத் தொடர்ந்து, வரைவு EIAவின் நிர்வாகச் சுருக்கம்.

2.     பொதுமக்கள் எழுப்பிய பிரச்சனைகளுக்கான அறிக்கை மற்றும் பொது விசாரணையின்போது திட்ட  முன்மொழிபவர் தந்த பதில்கள். இது மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தொகுக்கப்படும்.

(f)தள வருகை

கே. எதேனும் கருத்தாய்வு அல்லது ஆய்வுக்கு யார் திட்ட தளத்திற்கு வருகைத் தருவார்?

ப:  அங்கீகரிக்கப்பட்ட EIA ஆலோசகர் திட்டமிடப்பட்டுள்ள தளத்திலும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலும் கருத்தாய்வுகளை நடத்துவார். பசுமைத் தீர்ப்பாயத்தின் ஒரு உத்தரவின் படி [3], EIA ஆலோசகர்கள் அந்தப் பகுதிக்கான சமூக-பொருளாதார தரவு பற்றிய முதன்மை  பொருட்களை சேகரிக்க வேண்டும் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டத்தை உருவாக்குவதற்காக திட்டப் பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புரிந்து கொள்வதற்காக முதல்கட்டக் கருத்தாய்வினை நடத்த வேண்டும்.

EIAவுக்கான கருத்தாய்வுக்கான திட்டத் தளத்தினை சுற்றியுள்ள தூரத்தை ToR நிர்ணயிக்கும்.

கே. ஒரு தள வருகையை EAC/SAC உறுப்பினர்கள் எப்போது மேற்கொள்ளலாம்?  

ப. EAC/SEACயின் துணைக்குழு  சுற்றுச்சூழல் அனுமதிக்கான எந்த நிலையிலும் தளத்துக்கு வருகைத் தரலாம். பொதுவாக இது ToR வழங்குவதற்கு முன்னால் மற்றும்/அல்லது வரைவு EIA சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மேற்கொள்ளப்படும்.

(g) பார்வைக்கான விதிகள் (ToR)  

கே. ToRஐயும் EIAவின் அளவையும் வரைவது யார்?   

ப: EAC/ SEAC!

EAC/SEACயால் வழங்கப்படும்,ToR, EIAயின் அளபுருக்களை  தெரிவிக்கிறது (எ.கா., ஆய்வின் காலம் (பருவங்களின் எண்ணிக்கை), ஆய்வின் நீளம் (முன்மொழியப்பட்ட திட்டத்தினை சுற்றியிருக்கும் கிலோமீட்டர்களின் எண்ணிக்கை) முதலியன)

(h) இறுதிl EIA

கே. வரைவு EIA மற்றும் இறுதி EIA இடையே உள்ள வேறுபாடுகளின் அனுமதிக்கத்தக்க அளவு என்ன?

ப. இறுதி EIAயானது வரைவு EIAவில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருக்க  முடியாது. பொது ஆலோசனைகளின் ஒரு பகுதியாக அவசியமாக இருக்கும் மாற்றங்கள் மட்டுமே அனுமதிக்கத்தக்கவை.

கிடைக்க செய்யப்படுகிற மற்றும் பொதுமக்கள் விசாரணைக்கு முன்னதாக கிடைக்கப் பெறுகிற ஒன்று வரைவு EIA என்று அழைக்கப்படும். அது அனைத்து அடிப்படை ஆய்வுத் தகவல்களையும், மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் மற்றும் ToR-ல் நிர்ணயிக்கப்பட்டிருக்கிற சிறப்பு ஆய்வினையும் கொண்டிருக்க வேண்டும்.

பொதுமக்களின் கவலைகள் மற்றும் அந்த கவலைகளை நிறைவு செய்வதற்கான கூடுதல் நடவடிக் கைகளை  உள்ளடக்குவதற்காக, பொது ஆலோசனை செயல்முறைக்குப் பிறகு EIA திருத்தப்பட்டு  சமர்ப்பிக்கப்படும், அதுவே இறுதி EIA ஆகும். பொது ஆலோச னைக்குப் பிறகு, TORல் வழிகாட்டியுள்ளபடி அடிப்படைத் தரவிலோ அல்லது சிறப்பு ஆய்வுகளின் தகவல்களை உள்ளிடுவதிலோ எந்த மாற்றமும் செய்யப்பட முடியாது.

கே. திட்டத்தின் தற்போதைய சுற்றுச்சூழல் நிலை ஆய்வு செய்யப்படுகிறதா?

ப: ஆம்! திட்டமிடப்பட்டுள்ள திட்ட தளத்தின் தற்போதைய சுற்றுச்சூழல் நில ஆய்வு செய்யப்படுகிறது மற்றும் அதன் சுற்றுப்புறங்களும் அடிப்படை ஆய்வின் ஒரு பகுதியாக ஒரு அங்கீகரிக்கப்பட்ட EIA ஆலோசகரால் ஆய்வு செய்யப்படுகிறது. EIA ஆய்வுக்காக கருதப்பட வேண்டிய பகுதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAA வால் வழங்கப்படுகிற ToRல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலின்  வெவ்வேறு கூறுகளின் மதிப்பீட்டினை EIA கொண்டிருக்கும், அது 12 செயல்பாட்டுப்பகுதிகள் என்றுஅழைக்கப்படும், அவை சுற்றுப்புறக் காற்று, இரைச்சல், நிலத்தடி நீர், உயிரியல், நிலம் மற்றும் சமூக பொருளாதார அம்சங்களை உள்ளடக்கும்.

கே. EIA ஆய்வு நடத்துவதற்கு வழக்கமாக எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ளும்?

ப: ToRல் குறிப்பிடப்பட்டுள்ள ஆய்வின் நீளத்தைப்  பொறுத்ததாகும் அது.  EIA ஆய்வுக்கு குறைந்தது 3 மாதங்கள் (1 பருவம்) அல்லது 1 ஆண்டு வரை எடுத்துக் கொள்ளும்.

கே. பொது மீளாய்வுக்கு இறுதி EIA கிடைக்கப் பெறுமா?  

ப: ஆகஸ்டு 2013ல் வழங்கப்பட்டுள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சுற்றறிக்கையின்படி சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கு முன் இறுதி EIAவை பதிவேற்றுவது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு /  SEIAAவுக்கு  தேவைப்படுகிறது. இறுதி EIAவின் ஒரு பகுதியாக ஏதேனும் ஆட்சேபணைகள் இருந்தால்,  பொதுமக்கள் அதை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், தெரிவிக்கலாம், அல்லது பசுமைத் தீர்ப்பாயத்திடம் மனு தாக்கல் செய்யலாம்.

(i) EIA ஆலோசனை  

கே. EIA ஆலோசகரின் தேவையும் அவரின் பொறுப்புகளும் என்ன?   

திட்டமிடப்பட்ட ஆலையின் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக, கல்வி மற்றும் பயிற்சி/இந்திய தரக்கட்டுப்பாட்டு வாரியத்தினால் (NABET/QCI)அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆலோசகரின்சேவைகளை திட்ட  முன்மொழிபவர் ஈடுபடுத்த வேண்டும்.

திட்டத்திற்கான EIA  அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகரால் செய்யப்படவில்லையென்றால் அது அனுமதிக்குக் கருதப்பட மாட்டாது. அனல் மின் நிலையத் திட்டத்திற்கான EIAவை நடத்துவதற்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள ஒரு ஆலோசகர், குறிப்பிட்டத் துறையில் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட ஆலோசகர்களின் பட்டியல் இங்கே காணப்படுகிறது: http://nabet.qci.org.in/environment/pop.asp?file=documents/Annexure7.pdf

கே. திட்டத்திற்கான EIA ஆலோசகர் குழு அமைப்பு மற்றும் பங்கு என்னவாக இருக்கும்?

ப: திட்டத்திற்கான EIA ஆலோசகர் குழு EIA  செயல்முறைபற்றிய அறிவு, விதிகள் மற்றும் சட்டங்கள், துறை அறிவு, துறைத் தொடர்பாக ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள், மற்றும்   திட்டமிடுவதற்கு,  EIA குழுவினைத்   தேர்ந் தெடுத்து வழிகாட்டுவதற்கான தலைமைப் பண்பினைக் கொண்டிருக்கும் ஒரு EIA ஒருங்கிணைப்பாளரால் தலைமை ஏற்கப்படவேண்டும்.

EIA ஒருங்கிணைப்பாளர் தவிர, குழு 12 குறிப்பிட்ட பகுதிகளுக்கான செயல்பாட்டுப் பகுதி வல்லுநர்களை (FAE)  கொண்டிருக்க வேண்டும்.

இந்த பகுதிகள் உள்ளடக்குவன:

1.     பயன்படுத்தும் நிலம்

2.     காற்று மாசு கண்காணிப்பு, தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு

3.     வானிலையியல், காற்று தர மாதிரியாக்கம் மற்றும் கணிப்பு

4.     நீர் மாசு கண்காணிப்பு, தடுத்தல் மற்றும் கட்டுப்பாடு

5.     சூழலியல் மற்றும் பல்லுயிர்  பெருக்கம்

6.     இரைச்சல் மற்றும் அதிர்வு

7.     சமூக பொருளாதார அம்சங்கள்

8.     நீரியல், நிலத்தடி நீர் மற்றும் நீர் பாதுகாப்பு

9.     நிலவியல் 

10.   மண் பாதுகாப்பு

11.   இடர்கள் மற்றும் அபாயங்கள் மேலாண்மை

12.   திட மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை (நகராட்சி திடக் கழிவுகளை உள்ளடக்கி)

ஒரு வல்லுநருக்கான குறைந்தபட்ச தகுதிகள் இங்கே தரப்பட்டுள்ளன : http://nabet.qci.org.in/environment/pop.asp?file=documents/EIA_Scheme.pdf&heading=About%20EIA%20Consultant%20Organizations%20Scheme

ஒரு குழு உறுப்பினர்,  தேவையான அடிப்படைத் தகுதியுடன், EIAவின் ஒருங்கிணைப்பாளராகவும்  செயல்பாட்டுப் பகுதியின் வல்லுநராகவும் இருக்கலாம். ஒரு வல்லுநர் அதிகபட்சம் 4 களங்களுக்கான FAE ஆக இருக்கலாம், அல்லது EIA ஒருங்கிணைப்பாளராக அதிகபட்சம் 5 துறைகளுக்கு இருக்கலாம்.

(j) EC வழங்கியப் பின்னர்

கே. EC வழங்கிய பின்னர், ஒரு திட்ட முன்மொழிபவர் ஆலையில் கட்டுமானத்தைத் துவங்கலாமா?  

ப: இல்லை!  சம்பந்தப்பட்ட மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதலுக்காக திட்ட முன்மொழிபவர் விண்ணப்பிக்க வேண்டும். அதை பெற்ற பின்னர், ஆலைக்கான கட்டுமானத்தை துவங்கலாம்.

ஆலையில்  செயல்பாடுகளைத் துவங்குவதற்கு முன்னால், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து இயக்குவதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும்.

(k) புகைபோக்கியின் உயரம்

கே. புகைபோக்கியின் உயரத்திற்கு ஏதேனும் விதிகள் உள்ளனவா?  

ப:   அனல் மின்உற்பத்தி நிலையத் திட்டங்களுக்குத் தேவைப்படுகிற உயரம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், 1986ன் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலையின் திறம்       :         புகைபோக்கி உயரம்

>500 மெ வா               :         275 மீட்டர்கள்

210 மெவா- 500 மெவா   :         220 மீட்டர்கள்

210  மெ வா க்கு குறைவானது :         H= 14 Q 0.3 (இதில் Q  என்பது SO2வின் உமிழ்வு விகிதம் கிலோ/மணி, மற்றும் H என்பது உயரம் மீட்டர்களில்)

(l) அனுமதிக்கப்பட்ட மாசு அளவுகள்

கே. அனல் மின்நிலையத் திட்டங்களின் அனுமதிக்கப்பட்ட மாசு அளவுகள் என்ன?  

ப.  சுற்றுச்சூழல் மாசுப்படுத்திகள்  வெளியிடுவதற்கான தரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986ன் கீழ் காலப்போக்கில் அறிவிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.  அனல் மின் நிலையங்களுக்கான  தொழில்நுட்ப EIA வழிகாட்டுதல் கையேட்டின் பிற்சேர்க்கைகளில்  வெவ்வேறு அளவுருக்களின் தொகுப்பு காணப்படுகிறது.  கையேட்டினை இங்கே காணலாம்: :http://environmentclearance.nic.in/writereaddata/Form-1A/HomeLinks/TGM_Thermal%20Power%20Plants_010910_NK.pdf

(m) நிலம் கையகப்படுத்துதல்

கே. எந்த நிலையில் திட்டத்திற்கான நிலத்தினை திட்ட முன்மொழிபவர் கையகப்படுத்துகிறார்?

ப:  நிலம் கையகப்படுத்துதல் சுற்றுச்சூழல் அனுமதிக்காக விண்ணப்பத்தை திட்ட முன்மொழிபவர் சமர்ப்பிப்பதற்கு முன்பே துவங்கிவிடுகிறது. எனினும், இந்த நிலையில் திட்டத்திற்குத் தேவைப்படும் அனைத்து நிலங்களை திட்ட முன்மொழிபவர் வாங்கிவிட வேண்டும் என்பது கட்டாயமல்ல. சமூகப் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு போன்றவற்றை ஒரு அங்கீகிரிக்கப்பட்ட EIA ஆலோசனை நிறுவனம் விசாரிக்க வேண்டும்.

கே. தேவைப்படும் திட்ட நிலத்திற்கான விலை எவ்வாறு முடிவு செய்யப்படும்?  

சமீபத்திய சட்டத்தின் கீழ், நியாயமான இழப்பீட்டுக்கான உரிமை மற்றும் கையகப்படுத்துதலில் தெளிவானத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013ன்படி, இழப்பீடு கணக்கிடுவதற்கு ஒரு சூத்திரம் இருக்கிறது மற்றும் மாவட்ட ஆட்சியர் மட்டுமே செயல்முறைப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்

[1]http://envfor.nic.in/downloads/public-information/Act-prior-EC.pdf

[2]http://moef.nic.in/downloads/public-information/Coal-blocks.pdf

[3]தீர்ப்புக்கான இணைப்பு:http://www.indiankanoon.org/doc/161693875/

 

3. நடப்பு ஆலைகள்

கே. பசுமைவெளி EIAவுக்கும் பழுப்புவெளி EIAவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

முன்மொழியப்பட்ட திட்டம் அந்த இடத்தில் புதிய ஒன்றாக இருந்தால், அது பசுமைவெளி திட்டம் என்று அழைக்கப்படும். அத்தகைய திட்டங்களுக்கு திட்டப் பகுதிக்கான அடிப்படை ஆய்வுக்கான கோரிக்கை இருக்கிறது மற்றும் பாதிப்பு மதிப்பீடு மற்றும் தேவையான மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் உடன் அதன் செயல்பாட்டில் மாற்றம் எதிர் பார்க்கப்படுகிறது.

ஒரு பழுப்புவெளி திட்டம் என்பது ஏற்கனவே இயங்கும் தளமாகும். அத்தகைய திட்டங்களுக்கு, அடிப்படை ஆய்வு நடப்பு மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஆற்றலை  உள்ளடக்க வேண்டும், அது EC நிலைமைகளுக்கான இணக்க தகுதியை உட்கொண்டிருக்கவேண்டும், மற்றும் தெளிவான பாதிப்பு மதிப்பீடு மற்றும்  தேவைப்படும் மட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுடன் மாறுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

கே. ஏற்படுத்தப்பட்ட ஆலைகளை எவ்வாறு காண்காணிப்பது?

ப:  அனல் மின்உற்பத்தி நிலையங்களையும் உள்ளடக்கி, அவை அனுமதிக்கப்பட்ட உமிழ்வு விகிதத்திற்கு ஏற்ப செயல்படுகின்றனவா மற்றும் சுற்றுச்சூழல் அனுமதியில் நிர்ணயிக்கப்பட்ட பிற நிபந்தனைகளை கடைப்பிடிக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது அனைத்து தொழில்துறைகளையும் ஆய்வு செய்கிறது.

திட்ட முன்மொழிபவர் பின்வரும் இணக்க அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்:

  • மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியத்திற்கான காலாண்டு கண்காணிப்பு அறிக்கை
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு அரையாண்டு இணக்க தகுதி அறிக்கை
  • குறிப்பிடப்பட்ட வடிவத்தில் மத்திய மின்சார ஆணையத்திற்கு (புகை சாம்பல் பயன்பாட்டு விதியின் கீழ்)  வருடாந்திர அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும், அதில் ஒரு பிரதி மாநில மாசுக்கட்டுபாட்டு வாரியத்துக்கு அனுப்ப வேண்டும்.
  • மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு வருடாந்திர சுற்றுச்சூழல் அறிக்கை 
  • மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்கப்படும் கூடுதல் அறிக்கை (பொது மக்கள் புகார்களின் அடிப்படையிலானது)

கே. இணக்க அறிக்கைக் கொண்டிருக்க வேண்டியது என்ன? அவற்றை எவ்வாறு ஒருவரால் பெற முடியும்?  

ப:   ஒவ்வொரு அனல் மின் நிலையத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியும் பின்பற்றப்பட வேண்டிய மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAA வுக்கு சமர்ப்பிக்கப்படும் இணக்க அறிக்கைகளில் சான்றுறதி செய்யபடுவதற்கான குறிப்பிட்ட நிபந்தனைகளை கொண்டிருக்க வேண்டும்.

இந்த அறிக்கைகள் பொது மக்களுக்கு கிடைக்கப்பெறும் மற்றும் சமீபத்திய இணக்க அறிக்கைகள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் / SEIAA வலைதளத்தில் கிடைக்கப்பெறும்.

பொது மக்களிடமிருந்தான  கோரிக்கையின் பேரில் ஏதேனும் இணக்க அறிக்கைக்கான நகலை  MoEF/ SEIAA  கிடைக்க செய்யப்பட வேண்டும்.

கே. பொதுமக்கள் பெறக்கூடிய மற்ற ஆவணங்கள் யாவை?  

a) மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்படும் காலாண்டு இணக்க அறிக்கை

b) மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்படும்  வருடாந்திர சுற்றுச்சூழல் அறிக்கை

c) மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் பிரதிகளுடன் மத்திய மின்சார ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும் வருடாந்திர புகை சாம்பல் பயன்பாடு அறிக்கை

 

4. பிற அனுமதிகள்

(a) கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அனுமதி

கே. CRZ அனுமதி என்றால் என்ன மற்றும் அதற்குத் தொடர்புடைய EIA செயல்முறை என்ன? 

கடலோரப் பகுதிகளுக்கு மிக அருகில் அமைந்திருக்கும் திட்டங்களுக்கு CRZ அனுமதி தேவை. CRZ அறிவிக்கை 2011 எங்கே CRZ அனுமதி தேவை என்பதைக் குறிப்பிடுகிறது. திட்டமிடப்பட்டுள்ள அனல் மின் நிலையத் திட்டத்தின் இடம் CRZ க்குள் இருந்தால், CRZ அனுமதி மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி இருக்கும். ஒரு திட்டம் CRZ அனுமதிக்கு பரிந்துரைக்கப்படுகிறதா என்பதை மாநில கடலோர மண்டல மேலாண்மையின் வலைதளத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் நிகழ்ச்சிக் குறிப்பில் இருக்கும்.

(b) வன அனுமதி   

கே. யார் வன அனுமதியை வழங்குகிறார்?  

ப: ஒரு திட்டம் வன நிலத்தினை பயன்படுத்துமானால், வனப்பாதுகாப்பு சட்டம் 1980ன் பிரிவு 2ன் கீழ் மத்திய அரசாங்கத்தால் வன அனுமதி வழங்கப்படும்.

(c)   மேற்கொண்டு அனுமதிகள்

கே. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கும் சுற்றுச்சூழல் அனுமதி தவிர வேறு என்ன அனுமதிகள் தேவைப்படும்?  

ப: தேவைப்படும் பிற அனுமதிகள்

1.     அனல் மின் உற்பத்தி நிலையத்தை தனது வரம்புக்குள் அமைப்பதற்கு பஞ்சாயத்தின் தடையில்லா சான்று

2.     சம்பந்தப்பட்ட மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து ஏற்படுத்தலுக்கான ஒப்புதல் மற்றும் இயக்குவதற்கான ஒப்புதல்

3.     ஆதாரம் ஜீவ நதியில் இருந்து என்றால் மாநில நீர் ஆணையத்திடமிருந்து நீரெடுப்பதற்கான ஒப்புதல்

4.     இந்திய விமான நிலைய ஆணையத்திடமிருந்து புகைப் போக்கியின் உயரத்துக்கான அனுமதி

5.     இரயில்வே துணைத்தடம் / இரயில் தடத்தினைப் பயன்படுத்துவதற்கான உரிமைக்காக இந்திய இரயில்வேயிடமிருந்து அனுமதி

 

5. குறை நிவர்த்தி

கே. ஆலையின் சுற்றுச்சூழல் அனுமதி செயல்முறைக்கான ஏதேனும் அம்சம் குறித்து எங்கு புகார் தெரிவிக்க வேண்டும்?

ப:  EIA செயல்முறைகளில் எந்த நிலையிலும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட வேண்டும். விதிமீறல்களுடன் ஒரு திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படுகிறது என்றால், அது பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப்படலாம்.

  கே. வேலைவாய்ப்பு, CSR மற்றும் மற்றவை பற்றிய நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லைஎன்றால் நடப்பில் உள்ள ஒரு அனல் மின்நிலையத் திட்டம் பற்றி எங்கே புகார் தெரிவிப்பது?

ப:  சுற்றுச்சூழல் அனுமதியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை என்றால், அது உடனடியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்.

கே. பசுமைத் தீர்ப்பாயம் (NGT) என்றால் என்ன?  

ப: NGT என்பது ஒரு பகுதி நீதித்துறை சார்ந்த அமைப்பாகும் அது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனங்கள் மற்றும் பிற இயற்கை வளங்களின் பாதுகாப்புத் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. தீர்ப்பாயத்தின் தலைமையிடம் புதுடெல்லியாகும். போபல் (மத்திய மண்டலம்), பூனே (மேற்கு மண்டலம்), கொல்கத்தா (கிழக்கு மண்டலம்) மற்றும் சென்னை (தெற்கு மண்டலம்) ஆகிய பிற தீர்ப்பாய இடங்களாகும்.

 பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுக்கள் தாக்கல் செய்வதற்கு ஏதேனும் கால வரம்புகள் இருக்கிறதா?

A: ஆம்! பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுக்கள் காலவரம்புள்ளவை, 30 நாட்களுக்குள் மனு தாக்கல்செய்ய அனுமதிக்கப்படுகின்றனர், காலதாமதத்திற்கு போதுமான நியாயமான காரணங்கள் இருக்கும்பட்சத்தில் 90 நாட்கள் வரை நீடிக்கப்படலாம்.  இதன் பொருள் எந்தவொரு திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிக்கு எதிராக ஆஜராகும் எந்தவொரு நபரும், விதிவிலக்கான சூழ்நிலைகள் தவிர, அதை சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட 30 நாட்களுக்குள் செய்யவேண்டும்.