கடலூர் ITPCL அனல் மின் நிலைய சுற்றுச்சூழல் அனுமதிக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய கருத்துகள்

Tue, 29/01/2019 - 15:13

கடலூரில் உள்ள பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில், IL & FS  தமிழ் நாடு பவர் கம்பெனி (ITPCL) அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த அனல் மின் நிலையம்  நிலக்கரி மூலம் 1200 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த நிறுவனம் இந்தோனிஷியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை வைத்து மின்சாரம் தயாரிக்க  சுற்றுச்சூழல் அனுமதியை மே 2010 இல் பெற்றது. தற்போது, இந்த நிறுவனமானது நெய்வேலி நிலக்கரியையும், இந்தோனிஷியா நிலக்கரியையும் 25:75 என்ற விகிதத்தில் கொண்டு மின்சாரம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

 

2018 அக்டோபர் மாதம் இந்தத் திட்டத்தை பற்றி  விவாதிக்கையில், சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு, ITPCL நிறுவனம் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியுள்ளதாக  கூறியது. மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை குறைக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதுப்பற்றி ITPCL ஓர் இணக்க அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்  ஆணையிட்டது.

 

2019 ஜனவரியில் நடந்த வல்லுநர் கூட்டத்தில் இந்த திட்டம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. இதில் ITPCL நிறுவனத்தின்  விதிமுறை மீறல்களையும், மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் நிலவரத்தைப் பற்றியும் சி எ ஜி (CAG) தொண்டு நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டது. தடுப்பு நடவடிக்கைகள் சரிவர செய்யப்படாததால்  ITPCL நிறுவனத்தை ஒரு முறை மேற்பார்வையிட வேண்டும் என வல்லுநர் குழுவை சி எ ஜி (CAG) வலியுறுத்தியுள்ளது.