- தகவல் சமர்ப்பிப்பு & கிடைத்தல்
- நிலக்கரி தொடர்பு (லிங்கேஜ்)
- அல்ட்ரா மெகா பவர் திட்டங்கள் (UMPP)
- EC/FC/CRZ மீறல்
- பொது விசாரணை
- இருக்கும் நிலையங்களை கண்காணித்தல்
- ஒரே நிலத்தில் இருக்கும் திட்டங்கள்
- நிறுவன சுற்றுச்சூழல் கொள்கை
- EC அளிக்கப்படுவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்
- திட்ட விரிவாக்கம்
- ToRன் செல்லுபடி தன்மை
- தொடர்புடைய திட்டங்கள்
1. தகவல் சமர்ப்பிப்பு & கிடைத்தல்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்:
ToR, ஃபார்ம் 1 &சாத்தியத்தின் முன் அறிக்கை, திட்ட ஆதரவாளரிடம் தெரிவிக்கும் முன்பாக MoEF இணையதளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். இது, அதுதொடர்பான இயக்குநர் மற்றும் அப்பிரிவு EACயின் உறுப்பினர் செயலாளரின் பொறுப்பாகும். இந்த அலுவலர், திட்ட ஆதரவாளரிடம் EC தெரிவிக்கப்படும் முன்பாக EIA, EMP, பொதுவிசாரணை குறிப்புகள், EAC குறிப்புகள் மற்றும்EC ஆகியவை MoEF இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
Date of Order: August 29, 2013 Link: http://www.MoEF.nic.in/sites/default/files/OM-reg-sTorage-of-files-29.8.13.pdf
கூடுதல் தகவல் சமர்ப்பிப்பு:
திட்ட ஆதரவாளரை ஏதேனும் தகவல் சமர்ப்பிக்க சொல்லி EAC கேட்டால், அது EAC கூட்டத்தின் தேதிக்கு 6 மாதங்களுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த காலத்திற்குப் பிறகும் தகவல் சமர்ப்பிக்கப்பட வில்லை என்றால், குறிப்பிட்ட திட்டம், நிலுவையில் உள்ள திட்டங்கள் பட்டியலிருந்து நீக்கப்படும். தகவலுக்காக EACயின் வேண்டுகோளுக்குப்பிறகு மூன்று-ஆறுமாதங்கள் நிலுவையில் இருந்தால், தகவலை ஒரு மாதத்தில் அளிக்கும்படி திட்ட ஆதரவாளருக்கு நினைவுபடுத்தல் கடிதம் அனுப்பலாம். அதற்குப்பிறகும் திட்ட ஆதரவாளர் தகவலை சமர்ப்பிக்கவில்லை என்றால் திட்டம், நிலுவையில் உள்ள திட்டங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
Date: 30 October 2012 Link:http://MoEF.nic.in/assets/ia-30102012.pdf
திட்ட ஆவணங்களின் மென் பிரதிகளின் சமர்ப்பிப்பு:
அச்சிட்ட பிரதிகளை தவிர, திட்ட ஆதரவாளர், பின்வரும் ஆவணங்களை PDFகள் என்னும் மென் பிரதிகளாக MoEF/SEIAAவிடம் சமர்ப்பிக்க வேண்டும்:
- ஃபார்ம் 1
- சாத்தியத்தின் முன் அறிக்கை
- வரைவு ToR
- EIA
- EIA திட்டங்களுக்கான நிரப்பப்பட்ட கேள்வித்தாள்
- பொது விசாரணை நிகழ்வுகள்
- EACக்கள் குறிப்பிட்டபடி மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஆய்வு அறிக்கைகள்
- திட்ட ஆதரவாளர் EACயிடம் சமர்ப்பித்த இதர கூடுதல் தகவல்கள்
மேற்கண்ட, இந்த ஆவணங்களை MoEF/ SEIAA இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உதவி செய்யும். அச்சிட்ட பிரதிகள் மற்றும் மென் பிரதிகள் இல்லாத எந்த தகவலும் முழுமையற்றதாக கருதப்பட்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படக்கூடாது. EAC மற்றும்SEIAAயின்உறுப்பினர்செயலாளர்கள்இந்தஆவணங்களைEAC/ SEAC சைட்விசிட் அறிக்கைகளுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
Date: March 20, 2012 Link: http://envfor.nic.in/downloads/public-information/order-20032012-a.pdf
சரியான மற்றும் அசல் தகவலை வழங்குதல்:
தகவல் அல்லது குறிப்பு நகல் எடுக்கப்பட்டுள்ளதா என ஒரு EIAவின் தகவலை இன்னொன்றுடன் ஒப்பிட்டு பரிசோதிப்பது என்பது MOEF அல்லது EACக்கு மிகவும் நேரமெடுக்கும் ஒரு செயல் என்பதால் சரியான தகவலை அளிக்கும் பொறுப்பு திட்ட ஆதரவாளருடையது ஆகும். எனவே, திட்ட ஆதரவாளர், EIA அறிக்கையில், EIA வில் உள்ள தகவல்களுக்கு உறுதியளிக்க வேண்டும். EIA அறிக்கைகளில் தகவல்கள் ஏதேனும் மாற்றப்பட்டுள்ளது என ஏதாவது சமயத்தில் MOEFக்கு தெரியவந்தால் அந்த திட்டம் உடனடியாக கைவிடப்படும். பிறகு திட்ட ஆதரவாளர், ECக்கு மீண்டும் புதியதாக விண்ணப்பிக்க வேண்டும். நகல் எடுக்கப்பட்ட EIA அறிக்கை மீது EC அளிக்கப்பட்டால், அது நீக்கம் செய்யப்படும். இந்த சூழலில் ஒப்புதலுக்கான வழிமுறை புதிதா கஆரம்பிக்கப்பட வேண்டும்.
மேலும் அந்த EIA ஆலோசகர், ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆலோசகர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்.
Date: October 5, 2011 Link:http://envfor.nic.in/downloads/public-information/OM_IA_ownershipEIA.pdf
2. நிலக்கரி தொடர்பு (லிங்கேஜ்)
கோல் இந்தியா மற்றும் சிங்கரேனி நிலக்கரி சுரங்கங்கள் போன்ற நிலக்கரி பகுதிகளிலிருந்து கிடைக்கும் உள்நாட்டு நிலக்கரியை சார்ந்து இருக்கும் அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் EC/FC வைத்துள்ள நிறுவனத்திற்கு, EIA/EMPயில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு, சாம்பல் மற்றும் சல்பர் அளவு EIA/EMPயில் குறிப்பிடப்பட்டிருந்தால் மட்டுமே ECக்கான கோரிக்கை கவனிக்கப்படும்.
முன்மொழியப்படும் ஒரு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட கோல் லிங்கேஜ் ஒரு அடிப்படை தேவையாகும். நிலக்கரி அமைச்சகத்தின் ஸ்டான்டிங் லிங்கேஜ் கமிட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள படி ஒரு எரிபொருள் வழங்குதல் ஒப்பந்தம் அல்லது குறிப்பிட்ட நிலக்கரிசுரங்கம்/பகுதிகள்/ஒதுக்கீடுசெய்யப்பட்டநிலக்கரி பகுதியுடன் தொடர்புமிகவும் அவசியமாகும். இந்த லிங்கேஜில் அதன் கலோரிஃபிக் மதிப்பை தவிர சாம்பல் மற்றும் சல்பரின் அளவும் கொடுக்கப்பட வேண்டும். நிலக்கரியின் இந்த பண்புகள், திட்டத்தின் EIAவை தயாரிக்கும்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்..
பின்னொரு சமயம் நிலக்கரியின் இந்த அளவுகள் மாறியிருந்தால், அதுEC நிபந்தனைகளை மாற்றியமைக்கவும் தேவையான அளவில் இருப்பதை சரிபார்ப்பதற்காகவும் MoEFக்கு தெரிவிக்கப்பட வேண்டும். இதில் சல்பர் ஆக்சைடு வெளிப்படுதல்களை கட்டுப்படுத்த ஃப்ளூகேஸ் டீசல்பரை சேஷனுக்கான வசதிகள் போன்ற கூடுதல் நிபந்தனைகள் இருக்கலாம்.
Date: 19 April 2012 Link: http://envfor.nic.in/downloads/public-information/notif-20042012.pdf
EIA அறிக்கைக்கு தேவைப்படும் நிலக்கரி லிங்கேஜ், பரிந்துரையின் நிபந்தனைகளை அளிப்பதற்கு தேவையில்லை.
Date: 19 January 2011 Link: http://envfor.nic.in/downloads/public-information/Cir-19-01-2011.pdf
3. அல்ட்ரா மெகா பவர் திட்டங்கள் (UMPP)
பாதுகாப்பான பகுதிகள் எவை என்றால் சில தொழில்துறை செயல்பாடுகள் அனுமதிக்கப்படாத பகுதியாகும். ஒரு UMPP உடன் தொடர்புடைய ஒரு நிலக்கரி பகுதி பாதுகாப்பான பகுதியில் இல்லை என்றால், நிலக்கரி ஒதுக்கீட்டிற்கு தேவைப்படும் ஸ்டேஜ் 1 FC & EC யுடன் இணைக்கப்படாமல் UMPPக்கான EC தனியாக கவனிக்கப்படும்.
இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தும் UMPP களுக்கு, பின்வரும் வரையறைகள் கட்டாயமானவை:
கிராஸ் கலோரிஃபிக் மதிப்பு (Kcal/Kg) - குறைந்தபட்சம் 5000
சாம்பல் அளவு அதிகபட்சம் – 12%
சல்பர் அளவு – 0.8% குறைந்தபட்சம்
EC செல்லுமா என்பது இந்த வரையறைகள் சரியாக இருக்கின்றனவா என்பதைப் பொறுத்தது.
இந்த திட்டங்களுக்கான EIA/EMP பின்வரும் விவரங்களையும் கொண்டிருக்க வேண்டும்:
- நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதற்கான துறைமுகம், படகுத்துறை, ரெயில்வே லைன்
- துறைமுகத்தின் நிலக்கரி கையாளும் அளவு
- துறைமுகத்திலிருந்து நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டுச்செல்ல போக்குவரத்து வசதிகள்.
4. EC/FC/CRZ மீறல்
திட்ட ஆதரவாளர், காடு இல்லாத பிரதேசத்தில் திட்டத்தை அமைக்கும் சாத்தியத்தை ஆராயவேண்டும். அது முடியாது என்றால், காடாக இருக்கும் நிலத்தை ஒதுக்கீடு செய்யக்கோரி ஃபார்ம் 1 சமர்ப்பிப்பதற்கு முன்பாகவே, முன்கூட்டியே விண்ணப்பிக்கவேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு காடாக இருக்கும் நிலத்தை ஒதுக்கீடுசெய்ய ஸ்டேஜ் 1 ஒப்புதல் பெறப்பட்டபிறகே EC கொடுக்கப்பட வேண்டும்.
- திட்ட ஆதரவாளர் கட்டுமான வேலையை, செல்லக்கூடிய CRZ அல்லது FC அல்லது EC அல்லது அதற்கான நிபந்தனைகளை மீறிசெய்தால், MoEF உடனடியாக அந்த கட்டுமான வேலைகளை, தேவையான ஒப்புதல் கிடைக்கும் வரை அல்லது மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்வரை அந்த நிலையிலேயே நிறுத்த ஆணையிட வேண்டும்.
- CRZ/EC வழங்கப்பட்ட அளவை மீறிய உற்பத்தியில் திட்ட ஆதரவாளர் ஈடுபட்டால், MoEF, கூடுதல் அளவுக்கான ஒப்புதல் கிடைக்கும் வரை, உற்பத்தியை அனுமதி அளிக்கப்பட்ட அளவிற்குள் கட்டுப்படுத்துமாறு திட்ட ஆதரவாளருக்கு ஆணையிட வேண்டும்.
- நிலையங்கள், CRZ/EC இல்லாமல் செயல்பட்டுக்கொண்டிருந்தால், MoEF, முறையான ஒப்புதல் கிடைக்கும் வரை, உடனடியாக உற்பத்தியை முழுமையாக நிறுத்த ஆணையிட வேண்டும்.
- திட்டத்தை நவீனப்படுத்துதல் அல்லது உற்ப்பத்தி சரகு கலப்பை மாற்றுதல் ஆகியவை முறையான அனுமதி பெறப்படும்வரை MoEF ஆல் நிறுத்தப்பட வேண்டும், மேலும் மாற்றங்களுக்கு முந்தைய நிலவரம் அப்படியே இருக்க வேண்டும்.
இந்த ஆணைகளை இடும் உரிமை MoEFக்கு உள்ளது. மேலும், இந்த ஆணைகளை திட்ட ஆதரவாளர் கடைபிடிப்பதை உறுதிசெய்வதும் கூட. மேற்கூறியபடி இடப்பட்ட ஆணைகள் மீறப்பட்டால், EPA 1986ன் படி திட்ட ஆதரவாளருக்கு எதிராக MoEF சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். மேலும் அளிக்கப்பட்ட ஒப்புதல்களையும் நிராகரிக்கலாம்.
Date of Order: June 27th 2013 Link: http://www.MoEF.nic.in/sites/default/files/om-270613.pdf
அனுமதி இல்லாமல் செயல்படுதல்:
தேவையான CRZ/EC இல்லாமல் ஒரு நிலையம் செயல்படுவதாக MoEFக்கு புகார்கள்வந்தால், அவற்றின் உண்மைத்தன்மை MoEFயின் கடற்கரைப்பகுதி நிர்வாக அதிகாரி, மாநில அரசு அல்லது பிராந்திய அலுவலகங்களால் பரிசோதிக்கப்படும். 60 நாட்களில், திட்ட ஆதரவாளர் விஷயத்தை இயக்குநர்கள் ஆட்சிக்குழுவிடம் (நிறுவனங்களுக்கு) அல்லது CEOவிடம் (டிரஸ்டுகளுக்கு) எடுத்துச்சென்று விதிமீறலை மறுபடி செய்யமாட்டோம் என முறையான தீர்மானம் பெறவேண்டும். இதேசமயம், MoEF திட்டத்தைபட்டியலில் இருந்து நீக்கிவிடும். திட்ட ஆதரவாளர் பற்றிய விவரங்கள் மற்றும் தீர்மானத்தின் பிரதி MoEF இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
60 நாட்களுக்குள் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், திட்ட ஆதரவாளருக்கு திட்டத்தை தொடர விருப்பமில்லை என்று கருதப்பட்டு கோப்பு மூடப்பட்டு விடும். திட்ட ஆதரவாளருக்கு இதற்குப்பிறகும் விருப்பமிருந்தால் புதிதாக வழிமுறைகள் எடுக்கப்பட வேண்டும்.
விதிமீறல் காலத்திற்கு திட்ட ஆதரவாளர் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் நம்பகமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்
விதிமீறல்/மீறல்களுகான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, ஒப்புதல் பெறவழக்கமான வழிமுறைகள் பின்பற்றப்படும். இருந்தாலும் இத்தகைய சூழல்களுக்கு ToR அல்லது EC கொடுக்கப்படுவது திட்ட ஆதரவாளரின் உரிமை கிடையாது. விதிமீறல்களின் தன்மை மிககடுமையானதாக இருந்தால் அமைச்சகம் திட்ட முன்மொழிவை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கலாம்
Date: 12 December 2012 Link: http://MoEF.nic.in/assets/om-12122012-b.pdf
5. பொது விசாரணை
விளம்பரம்:
பல்வேறு திட்டங்கள் தொடர்பான பொது விசாரணைகள் கொடுக்கப்பட்ட ஒருநாளில் ஒரேசமயத்தில் நடைபெறுதல் முடியாது. ஒரேநாளில் வரும் விசாரணைகளுக்கு இடையே போதுமான நேர இடைவேளை கொடுக்கப்பட வேண்டும்.
பொது விசாரணை நிகழ்வுகள் பதிவில் விசாரணைக்காக SPCB கொடுக்கும் விளம்பரத்தைப் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும். பின்பற்றப்பட்ட செயல்முறை போதுமானது என SPCB சான்றிதழ் அளிக்க வேண்டும்.
April 19, 2010 Link: http://envfor.nic.in/divisions/iass/Cir/pub_hear_EIA.pdf
SEZகளில் பொது விசாரணை:
ஒருSEZ முழுவதுமாக ஒரு பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால் அதன் தனித்தனி யூனிட்டுகள் இன்னொரு விசாரணைக்கு வருவதிலிருந்து விலக்குபெறலாம். முன்னதாக நடைபெற்ற பொது விசாரணையின் SEZன் பகுதியாக இல்லாத எந்த வகையூனிட்/செயல்முறை புதிதாக விசாரணைக்கு வந்தாக வேண்டும்.
Date: November 1, 2012 Link: http://MoEF.nic.in/assets/ia-01112012.pdf
UPLOADING PH PROCEEDINGS:
அனைத்துமாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள்/யூனியன் பிரதேச மாசுக்கட்டுப்பட்டு கமிட்டிகள் தங்கள் இணையதளங்களில் ஒழுங்காக முன்னுரிமை அளித்து பொது விசாரணையின் நிகழ்வுகளை வெளியிட வேண்டும். .
Date: March 20, 2012 Link: http://envfor.nic.in/downloads/public-information/order-20032012-b.pdf
6. இருக்கும் நிலையங்களை கண்காணித்தல்
இயங்கிவரும் திட்டங்கள் EC நிபந்தனைகளின்படி செயல்படுவதை கண்காணிக்கும் MoEF பிராந்திய அலுவலகத்தின் அமைவிடத்தை பார்வையிடுதல்கள், ECன் வெளிப்படையான நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். இது அவர்களின் கண்காணிப்பு அறிக்கையிலும் சேர்க்கப்பட வேண்டும்.
ECன் வெளிப்படை நிபந்தனை வழக்கமாக, விதி பின்பற்றப்படும் நிலை மற்றும் கண்காணிப்பு தகவலை திட்ட ஆதரவாளரின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான ஒரு நிபந்தனையை கொண்டிருக்கும். சமீபத்திய விதி பின்பற்றல் அறிக்கை, MoEF/SEIAA இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அனைத்து விதி பின்பற்றுதல் அறிக்கைகளும் பொது ஆவணங்களாகும்..
Date: August 5, 2011 Link: http://envfor.nic.in/downloads/public-information/O.M-dated-05.08.2011.pdf
500 MW அளவுக்குமேல் செயல்பட்டுவரும் அனல் மின் நிலையங்கள், புகைக்கூம்பு வழியாக வெளியிடுகின்ற புகைதுகள்களை தொடர்ச்சியாக கண்காணிக்கவேண்டும். மேலும், நிலைத்தில் நிலவும் சூழலின் காற்று தரத்தையும் கண்காணிக்க வேண்டும். புகைதுகள்கள் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் இருப்பதை உறுதி செய்ய சரி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆறுமாதத்திய கண்காணிப்பு அறிக்கை SPCB, MoEFயின் பிராந்திய அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்படுவதுடன் திட்ட ஆதரவாளரின் நிறுவனத்தின் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும். நிலவும் காற்றுதரம் பற்றிய தகவல் மற்றும் புகைக்கூம்பு வழியாக வெளியிடுகின்ற புகை பற்றிய தகவல்இரண்டும் நிறுவனத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் பொதுவான ஒரு இடத்தில் பார்வைக்கு வைக்கப்படுவதுடன் புதுப்பிக்கபடவும் வேண்டும்.
Date: April 6, 2011 Link: http://envfor.nic.in/downloads/public-information/Addtnl-Con-mega-prjt.pdf
7. ஒரே நிலத்தில் இருக்கும் திட்டங்கள்
ஒரே நிலத்தில் சுற்றுச்சூழல் ஒப்புதலுக்காக இரண்டு திட்டங்கள் விண்ணப்பித்திருந்தால், இரு திட்டங்களுமே அப்படியே வைக்கப்பட்டு மாநில அரசு இவ்விஷயத்தில் ஆலோசனை சொல்லக்கேட்கப்படும். மாநில அரசு சிபாரிசு செய்யும் திட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு EIA வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படும்.
Date: 8 June, 2011 Link: http://envfor.nic.in/downloads/public-information/App-rcvd-prcdr.pdf
8. நிறுவன சுற்றுச்சூழல் கொள்கை
500 MW அளவும் அதற்குமேலும் உற்பத்தி திறன்கொண்ட அனைத்து மத்திய பொதுப் பிரிவுயூனிட்டுகள் மற்றும் அனல் மின் நிலையங்கள், காடு/சுற்றுச்சூழல் ஒப்புதல் நிபந்தனைகளுக்கு உட்படுவதை உறுதிசெய்ய ஒரு நிறுவன சுற்றுச்சூழல் கொள்கையினை கடைபிடிக்க வேண்டும். அமைச்சகம் அல்லது ஏதாவது பொது அதிகாரக்குழு கண்டு பிடிக்கும் ஏதேனும் EC மற்றும் FC நிபந்தனைகள் மீறல்களை நிறுவனத்தின் இயக்குநர்கள் ஆட்சிக்குழுவுக்கு தெரிவிக்கப்படுவதுடன் திட்ட ஆதரவாளரின் இணையதளத்திலும் வருடாந்திர அறிக்கையிலும் அறிவிக்க வேண்டும். அனைத்து திட்ட கோரிக்கைகளுக்கும், EAC, நிறுவன சுற்றுச்சூழல் கொள்கைக்கு தொடர்புடைய அனைத்து அம்சங்களையும் குறிப்பாக அது பின்பற்றப்படுவது மற்றும் ஒட்டுமொத்த முழுமையினை நிர்ப்பந்திக்க வேண்டும்.
Date: 26 April 2011 Link: http://envfor.nic.in/downloads/public-information/corporate-env-res.pdf
9. EC அளிக்கப்படுவதற்கு முன்னால் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள்
ஆக்கிரமிப்பைதடுக்க அமைவிடத்தை சுற்றி வேலியமைத்தல்.
பாதுகாப்பு நபர்களுக்காக தற்காலிக தங்குமிடம் கட்டுதல்.
மற்ற எந்தவொரு செயல் பாட்டிற்கும் ToR நிறுத்திவைக்கப்படலாம் அல்லது திரும்பபெறப்படலாம். மேலும் 1986, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி திட்ட ஆதரவாளருக்கு எதிராக தண்டனைக்குரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படலாம்.
Date: 19 August, 2010 Link: http://envfor.nic.in/downloads/public-information/Act-prior-EC.pdf
10. திட்ட விரிவாக்கம்
ஒரு திட்ட விரிவாக்கத்திற்கான EC கோரிக்கை, முந்தைய காலகட்டத்தின் செயலாக்கம் தொடங்கிய பின்னரே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். முந்தைய காலகட்டத்திற்கு EC வழங்கப்படவில்லை என்றால், திட்ட ஆதரவாளர் எல்லாகாலகட்டங்களையும் ஒன்றாக சேர்த்து, சுற்றுச்சூழல் விவகாரங்கள் ஒட்டுமொத்தமாக பரிசீலிக்கப்படவசதியாக புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
Date: March 22, 2010 Link: http://envfor.nic.in/divisions/iass/Cir/EXP_EC.pdfதிட்ட ஆதரவாளர், இயங்கிவரும் ஒரு திட்டத்தை விரிவாக்க ECக்கு விண்ணப்பிக்கும் போது, EC நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டிருப்பது தொடர்பாக MoEF பிராந்திய அலுவலகத்தால் சான்றிதழ் பெற்ற அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணம் இல்லாமல் விரிவாக்கத்திற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த பின்பற்றுதல் அறிக்கை EAC கூட்டத்தின் போது திட்ட விரிவாக்கம் பற்றிய பரிசீலனைக்காக விவாதிக்கப்பட்டு கூட்டத்தின் செயற்குறிப் பேட்டில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும்.
Date: May 30, 2012 Link: http://MoEF.nic.in/downloads/public-information/eia-300512.pdf
11. ToRன் செல்லுபடி தன்மை
EIA/EMP அறிக்கைகள் சமர்ப்பிக்க, TOR இரண்டு வருட கால செல்லுபடி தன்மையுடன் அளிக்கப்பட வேண்டும். முறையான காரணம் மற்றும் EAC/SEACன் ஒப்புதலின் பேரில் 3 வருடங்களுக்கு மிகாமல் விலக்கு அளிக்கப்படலாம்.
March 22, 2010 Link: http://envfor.nic.in/divisions/iass/Cir/TOR_EC.pdf
12. தொடர்புடைய திட்டங்கள்
பலபிரிவு அம்சங்கள் கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொடர்புடைய திட்டங்கள், அதனதன்பிரிவுக்கான EAC/SEACக்களிடமிருந்து ToRகளை பெற்றபிறகு ஒவ்வொரு அம்சங்களையும் முழுமையாக இணைக்கும் ஒருபொதுவான EIA அறிக்கையை தயார் செய்ய வேண்டும். இந்தப்பொது EIA அறிக்கை, ஒவ்வொருபிரிவின் EAC/SEACக்களால் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அவற்றின் பரிந்துரைகளின் பேரில், கட்டுப்பாட்டு அதிகாரிகளிடமிருந்து ஒரே நேரத்தைய ஒப்புதலுக்காக கோரிக்கைகள் தனித்தனி கோப்புகளில் பரிசீலிக்கப்படும்.
Date: December 24, 2010 Link: http://envfor.nic.in/downloads/public-information/integrated-interlinked-prjt.pdf